தற்போது எரிவாயு விநியோகம் வழமைக்குத் திரும்பியுள்ள நிலையில், உலக சந்தையின் விலை, செலவு, நுகர்வோருக்கு எரிவாயு விற்பனை செய்யப்படும் சில்லறை விலை என்பன குறித்து அவதானம் செலுத்தி, எரிவாயு விலைக் கட்டுப்பாட்டுக்கு நடவடிக்கை எடுப்பதாக கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அதேநேரம், அண்மைக் காலமாக, சீமெந்து, இரும்பு, வயர் மற்றும் பிஸ்கட் உள்ளிட்ட பல உள்நாட்டு உற்பத்திகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அந்த விலைகள் நியாயமானவையா? என்பதை ஆராய்வதற்காக, அவற்றின் விலைச் சூத்திரம் குறித்து, நுகர்வோர் அதிகார சபையில் முன்னிலையாகி அறிக்கை ஒன்றை வழங்குமாறு சம்பந்தப்பட்ட தரப்புக்கு அறியப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த அறிக்கைக்கு அமைய, அவற்றின் கட்டுப்பாட்டு விலைக்கு உடனடி நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.