ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த மாதம் டோக்கியோவுக்குச் சென்று ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
பல தசாப்தங்களில் ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான வழியை நாடும் நிலையில், இருதரப்புக் கடன் மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைக்கு, சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட இந்தியப் பெருங்கடல் தீவின் முக்கிய கடன் வழங்கும் நாடுகளை அழைக்குமாறு ஜப்பானை இலங்கை கேட்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“யாராவது முக்கிய கடன் வழங்கும் நாடுகளை அழைக்க வேண்டும், ஜப்பானிடம் அதைச் செய்யுமாறு நாங்கள் கேட்டுக்கொள்வோம்” என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.