இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடா தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள வாழ்த்துக் கடிதத்தில் ஜப்பானிய பிரதமர், இலங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மை உறுதிப்படுத்தப்படுவதை எதிர்பார்த்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை மற்றும் கடன் மறுசீரமைப்பு மற்றும் அனைத்து கடன் வழங்குநர்களிடையே நியாயமான சுமை பகிர்வு ஆகியவற்றுடன் ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் தலைமையின் கீழ் விரைவாக முன்னேற்றம் ஏற்படும் என்று அவர் மேலும் எதிர்பார்க்கிறார்.
“சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக்” ஒன்றை அடைவதற்கான ஒத்துழைப்பு உட்பட இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை மேலும் மேம்படுத்துவதற்கு ஜனாதிபதி விக்கிரமசிங்கவுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும் Fumio Kishida மேலும் கூறினார்.