இன்று (14) நள்ளிரவு முதல் தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டு முறை அல்லது QR முறையின் கீழ் வழங்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு புதுப்பிக்கப்படுகின்றது.
கடந்த வார தரவுகளை பகுப்பாய்வு செய்ததன் பின்னர், அடுத்த வாரத்திற்கான எரிபொருள் ஒதுக்கீட்டில் தேவையான மாற்றங்கள் இன்று அறிவிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த மாதம் முதல் தேதியிலிருந்து வாகனங்களுக்கான எரிபொருள் QR முறையின்படி வழங்கப்பட்டது. இந்த முறை எரிபொருளுக்கு காத்திருந்த நீண்ட வரிசைக்கு தீர்வு தந்தது.
இதேவேளை, QR முறைக்கு வெளியே எரிபொருள் வழங்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தொடர்பில் தேவையான சட்ட மற்றும் நிர்வாக தீர்மானங்களை மேற்கொள்ளுமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் விநியோகிக்கப்படும் எரிபொருளின் அளவு மற்றும் QR முறையைப் பயன்படுத்தி எரிபொருள் வெளியீடு குறித்த தரவுகளை சரிபார்த்து, சட்ட விரோதமாக எரிபொருளை விநியோகித்த எரிபொருள் நிலையங்களுக்கு எதிராக தேவையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு (CPC) பணிப்புரை விடுத்துள்ளார்.