முட்டை ஒன்றின் விலை 10 ரூபாவினாலும், 1 கிலோ கோழி இறைச்சியின் விலை 100 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை கோழி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
முட்டை ஒன்றின் புதிய விலை ரூ.60/- என்றும், 1 கிலோ கோழி இறைச்சியின் புதிய விலை ரூ.1300/- என்றும் அகில இலங்கை கோழிப்பண்ணை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்தார்.
அதேவேளை, இவற்றுக்கான விலை விரைவில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்படும் என அமைச்சர் நலீன் பெர்னாண்டோ கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.