அண்மைக்காலமாக தடைசெய்யப்பட்ட பொருட்கள் பயணிகளால் கொண்டு வரும் நடைமுறை அதிகரித்துள்ளதாக இலங்கை சுங்கம் அவதானித்துள்ளது.
அத்தகைய பொருட்களில் தங்கம், சிகரெட், மருந்துகள், அலங்கார செடிகள் போன்ற தடைசெய்யப்பட்ட பொருட்களும், நாட்டில் நிலவும் அந்நிய செலாவணி பிரச்சனைகள் காரணமாக இறக்குமதி தற்காலிகமாக நிறுத்தப்பட்ட பொருட்களும் அடங்கும்.
மேலும், சில பயணிகள் சுங்க கட்டளைச் சட்டம் மற்றும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட விதிமுறைகளை மீறி வணிக அளவில் பொருட்களை கொண்டு வருவதும் அவதானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.
தடைசெய்யப்பட்ட பொருட்கள் அல்லது தற்காலிக இடைநிறுத்தப்பட்ட பண்டங்கள் அல்லது வர்த்தக அளவுகளில் உள்ள பொருட்களை உடனடியாக விமான நிலையம் அல்லது UPB கிடங்குகள் வழியாக கொண்டு வருவதைத் தடுக்குமாறு இலங்கை சுங்கம் இதன் மூலம் அனைத்து பயணிகளுக்கும் அறிவிக்கிறது.
இந்த அறிவுறுத்தல்களுக்கு இணங்கத் தவறினால், கொண்டுவரப்பட்ட அனைத்துப் பொருட்களையும் பறிமுதல் செய்து, சுங்கச் சட்டம் மற்றும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் விதிகளின்படி மேலும் பறிமுதல் அல்லது அபராதம் விதிக்கப்படும்.