பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் கண்டி போதனா வைத்தியசாலைக்கு குரங்குப் காய்ச்சலை பரிசோதிக்கும் கருவிகள் கையளிக்கப்பட்டதாக மருத்துவ தொழில்நுட்ப சேவைகள் பணிப்பாளரும் சுகாதார அமைச்சின் கோவிட்-19 இன் பிரதான இணைப்பாளருமான டாக்டர் அன்வர் ஹம்தானி தெரிவித்தார்.
நாட்டில் சந்தேகத்திற்கிடமான தொற்றுக்கள் பதிவாகும் நிகழ்வில் இதனை பயன்படுத்துவதற்கான சோதனைக் கருவிகளை WHO வழங்கியுள்ளது.