சகல கட்சிகளை உள்ளடக்கிய அரசாங்கத்தை அமைப்பது தற்போதைக்கு பயன்தரக்கூடிய விடயம் அல்ல என நேற்று சமகி ஜன பலவேகய கட்சிக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வாக சர்வகட்சி அரசாங்கம் அமைப்பதை தான் பார்க்கவில்லை என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஊழலை ஒழிப்பதே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களின் முக்கிய கோரிக்கை என அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
எனவே ஊழலற்ற நாட்டைக் கட்டியெழுப்புவதற்கும் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு விரைவான தீர்வுகளை காண்பதற்கும் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.