தென்மேற்கு பருவக்காற்றின் செயற்பாடு காரணமாக மேற்கு மற்றும் தெற்கு கடற்பரப்புகளிலும், தீவின் தென்மேற்கு பகுதியிலும் மழை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேற்கு சப்ரகமுவ, மத்திய, வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கு மேல் பலத்த வீழ்ச்சியை எதிர்பார்க்கலாம்.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய, மேற்கு, வடமேற்கு மற்றும் தென் மாகாணங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.