சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) நான்கு வருட வேலைத்திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தை ஒகஸ்ட் மாதம் தொடரும் என இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
“ஊழியர் மட்ட பேச்சுவார்த்தைகளை விரைவாகவும் வெற்றிகரமாகவும் முடிப்பதே எங்களின் எதிர்பார்ப்பாகும்,” என்று புதன்கிழமை (3) பாராளுமன்றத்தில் அரசாங்க கொள்கை அறிக்கையை வழங்கி உரையாற்றினார்.
“சர்வதேச நிதி மற்றும் சட்ட வல்லுனர்களான லாசார்ட் மற்றும் கிளிஃபோர்ட் சான்ஸ் ஆகியோருடன் இணைந்து கடன் மறுசீரமைப்புத் திட்டத்தின் இறுதிப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன” என்று அவர் மேலும் கூறினார்.
எதிர்காலத்தில் அரசாங்கம் இந்த திட்டத்தை சர்வதேச நாணய நிதியத்திடம் சமர்ப்பித்து கடன் உதவி வழங்கிய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.
“பின்னர் தனியார் கடன் வழங்குநர்களுடனான பேச்சுவார்த்தைகள் ஒருமித்த கருத்துக்கு வரத் தொடங்கும்,” என்று அவர் மேலும் கூறினார்.