ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதியின் பதவியை அரச குடும்பமாக கருதக்கூடாது என்று கூறினார். ஒகஸ்ட் 3, புதன்கிழமை 9வது பாராளுமன்றத்தின் மூன்றாவது அமர்வின் சம்பிரதாய தொடக்கத்தின் போது அவர் தனது சிம்மாசன உரையை ஆற்றிய போதே இவ்வாறு கூறினார்.
மேலும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு மன்னருக்கு நிகரான பாரிய அதிகாரங்கள் இருப்பதாகவும்,
ஒரு பண்டைய மன்னரை விட தற்போதைய ஜனாதிபதிக்கு அதிக அதிகாரங்கள் உள்ளன எனவும் அதை உடனடியாக மாற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார்.
ஜனாதிபதி பதவியை வகிப்பவர் ஒரு குடிமகன் மற்றும் மக்கள் பிரதிநிதி என்று அவர் மீண்டும் வலியுறுத்தினார்.