ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதலில் அல்-கொய்தாவின் தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரியை கொன்றதாக அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் உறுதிப்படுத்தியுள்ளார்.
11 ஆண்டுகளுக்கு முன்பு ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதில் இருந்து அல்-கொய்தா அமைப்பிற்காக சர்வதேச அளவில் தோன்றிய ஒரே தலைவராக ஜவாஹிரி அறியப்படுகிறார்.
ஆப்கானிஸ்தானின் காபூலில் பாதுகாப்பான வீட்டில் இருந்தபோது அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜவாஹிரி தனது 71 வயதில் இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.