உலக உணவு நெருக்கடி தொடர்பில் G7 கூட்டமைப்பு இலங்கைக்கு 14 மில்லியன் அமெரிக்க டொலர்களை உணவுக்காக செலவிட முன்வந்துள்ளதாக தெரிவித்த பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகள் மண்டியிடுவதைத் தவிர்ப்பதற்கு நிறைய செய்ய வேண்டியுள்ளது என்றார்.
உணவுப் பாதுகாப்பு தொடர்பான சர்வதேச மாநாட்டின் போது உரையாற்றிய பதில் ஜனாதிபதி விக்ரமசிங்கே, உயர் பணவீக்கம் காரணமாக உணவுப் பொருட்கள் மக்களுக்கு எட்டப்படவில்லை என்று கூறியுள்ளார்.
“இலங்கையில் சுமார் 6 மில்லியன் மக்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் அவதிப்படுவதாக கூறப்படுகிறது. மற்ற அறிக்கைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் 7.5 மில்லியன் பேர் வரை இருக்கலாம் என்று கூறுகின்றன. இலங்கையின் சராசரி நெல் உற்பத்தி பொதுவாக 24 மில்லியன் மெட்ரிக் டன் ஆகும். இருப்பினும், உற்பத்தி 2021 இல் 16 மில்லியன் மெட்ரிக் தொன்களாக காணப்பட்டன. எனவே இலங்கை தனது அரிசி தேவையில் மூன்றில் ஒரு பகுதியை இறக்குமதி செய்ய வேண்டும். மாற்று விகித நெருக்கடி இதை தடுக்கிறது. அத்தோடு, இலங்கையும் எரிபொருள் விநியோக பிரச்சினையை எதிர்கொள்கிறது. உணவு பாதுகாப்பு தொடர்பான G7 உலகளாவிய கூட்டமைப்பு உணவுப் பொருட்களைப் பெறுவதற்கு எமக்கு 14 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு முன்வந்துள்ளது. அவர்களுக்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். அரசாங்கம் நல்லதொரு பாதுகாப்புத் திட்டத்தையும் முன்னெடுத்துள்ளது” என்று செயல் தலைவர் கூறினார்.
“இலங்கையில் எங்களுடைய பிரச்சினை சுயமாக உருவாக்கப்படிருந்தாலும் ஓரளவுக்கு உலகளாவிய நெருக்கடி காரணமாக உள்ளது. அதாவது, உக்ரைன் யுத்தம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் விதித்துள்ள பொருளாதாரத் தடைகள் எங்களைப் பாதிக்கின்றன. பொருளாதாரத் தடைகள் எங்களைப் பாதிக்காது என்று ஐரோப்பிய ஒன்றியம் கூறுகிறது. இருப்பினும், அது எங்களைப் போன்ற நாடுகள் மண்டியிடுவதற்கு வழிவகுத்துள்ளது. இருப்பினும், ஐரோப்பிய ஒன்றியம் மட்டும் குற்றம் சாட்டப்படவில்லை. ரஷ்யாவும் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்க வேண்டும் மற்றும் பிரச்சினைகளை அமைதியான முறையில் தீர்க்க வேண்டும், “என்று அவர் மேலும் கூறினார்.