Author: admin

நாட்டின் பல பகுதிகளில் இன்று (15) பிரதானமாக மழையற்ற சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் மேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை ஏற்படக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

மாகாணசபை மற்றும் உள்ளூராட்சித் தேர்தலை நடத்தக்கூடாது என்ற எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என அமைச்சரவைப் பேச்சாளர், பந்துல குணவர்தன தெரிவித்தார். ஆனால் நாட்டின் தற்போதைய உண்மையான நிதி நிலைமை குறித்து திறைசேரி செயலாளர் நீதிமன்றில் தெரிவித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கடந்த அரசாங்கங்கள் வெளிநாட்டுக் கடன்களை பெற்றுக்கொண்டு பணத்தைச் செலவிட்டதாக பந்துல குணவர்தன தெரிவித்தார். ஆனால் தற்போதைய அரசாங்கத்தினால் அவ்வாறு செய்ய முடியாது எனவும் அமைச்சரவைப் பேச்சாளர், பந்துல குணவர்தன தெரிவித்தார்.

Read More

தடையற்ற அத்தியாவசிய மற்றும் சுகாதார சேவைக்காக 38 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு ஜப்பான் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். இலங்கைக்கான ஜப்பானின் பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இந்த உதவி கிடைப்பதாக அவர் கூறியுள்ளார். சுகாதாரத் துறைக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த எரிபொருளை குறிப்பாக டீசல் கொள்வனவு செய்வதற்கு ஜப்பான் நிதி வழங்கவுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்

Read More

பிபில பொலிஸ் பிரிவில் தியகோபல கரகஹவெவை வசிப்பிடமாகக் கொண்ட 15 வயதான பாடசாலை மாணவியை, பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் கீழ், 17 வயதான இளைஞன் நேற்று (13) கைது செய்யப்பட்டுள்ளார். பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளான மாணவி, இன்றைக்கு ஒரு மாதத்துக்கு முன்னர், தனியார் வகுப்புக்குச் சென்று வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, இடையில் வழிமறித்த அவ்விளைஞன், பற்றைக்காட்டுக்குள் இழுத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியுள்ளார் என செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய அவ்விளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். வைத்திய பரிசோதனைக்காக மாணவி, பிபில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவித்த பொலிஸார், இளைஞனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்

Read More

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மது போதையில் வீட்டுக்கு சென்ற 14 வயதுச் சிறுவனை தாய் கண்டித்ததன் காரணமாக குறித்த சிறுவன் உயிரை மாய்த்துள்ளார். குறித்த சிறுவன் ஞாயிற்றுக்கிழமை (12) மாலை மதுபோதையில் வீட்டுக்கு சென்றுள்ளார். அவர் மது போதையில் சென்றதை அவரின் தாயார் கண்டித்துள்ளார். இதனால் தவறான முடிவு எடுத்து உயிரை மாய்க்க முற்பட்ட நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில்,நேற்று காலை அவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். இறப்பு தொடர்பில் யாழ்ப்பாணம் போதன வைத்தியசாலை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார்.

Read More

சமூக ஊடக செயற்பாட்டாளர் சேபால் அமரசிங்கவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (14) உத்தரவிட்டுள்ளது. குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சேபால் அமரசிங்க, ஜனவரி 05ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. பௌத்த மதத்தின் புனிதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

Read More

தற்போதைய பொருளாதார நிலைமையில் மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களை குறைத்து அவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்கும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன்படி, பெரும் போகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 20 இலட்சம் வறிய குடும்பங்களுக்கு தலா 10 கிலோ வீதம் அரிசி வழங்கவும் தேவையான நிதியை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. மேலும், 2022 ஏப்ரல் மாதத்தில் அரச சேவையில் இருந்து ஓய்வு பெற்ற 18,000 பேருக்கு நிலுவையில் உள்ள ஓய்வூதியப் பணிக்கொடையை கட்டம் கட்டமாக வழங்கவும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது. போசாக்கின்மையை ஒழிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டத்தின் கீழ் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவு, உணவுப் பாதுகாப்பற்ற குடும்பங்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு என்பவற்றை தொடர்ச்சியாக வழங்கவும் முதியோர், ஊனமுற்றோர் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கு வழங்கப்படும்…

Read More

பயிர்ச்செய்கைக்காக இரசாயன மற்றும் சேதன உரங்களைப் பயன்படுத்துவதற்கான தேசிய அரச உரக் கொள்கையொன்றை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான கலந்துரையாடலொன்று இன்று (13) விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் விவசாய அமைச்சில் இடம்பெற்றது. அதன்போது, உணவுப் பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதி குழுவின் முன்மொழிவுக்கு அமைய குழுவால் தேசிய கொள்கைக்காக 35 முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டன. நெற்பயிற்செய்கையில் எவ்வளவு இரசாயன மற்றும் சேதன உரங்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என்பது குறித்து விவசாய வல்லுநர்கள் தெளிவான விளக்கத்தை முன்வைக்க வேண்டும் என்றும், அந்த சதவீதத்தின் அடிப்படையில், தேவையான சேதன மற்றும் இரசாயன உரங்களின் அளவை தீர்மானிக்க முடியும் என்றும் வலியுறுத்தப்பட்டது. அரச உரக் கொள்கையொன்றை வகுக்கும் போது விவசாயத் திணைக்களத்தினால் பரிந்துரைக்கப்பட்ட உர உற்பத்திகளுக்கு மாத்திரமே அங்கீகாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் அமரவீர தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கு வசதியாக உரம் வழங்கும் செயல்முறையை ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், விவசாய…

Read More

மொனராகலை மாவட்டத்தின் சில பகுதிகளில் அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கம் மீண்டும் மீண்டும் ஏற்பட்டாலோ அல்லது அதிர்வுகளின் எண்ணிக்கை அதிகரித்தாலே அது தீவிர பிரச்சினையாக மாறும் என்று பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவியியல் பிரிவின் பேராசிரியர் கபில தஹயனகே தெரிவித்தார். கடந்த 10 மற்றும் 11ஆம் திகதிகளில் மொனராகலை மாவட்டத்தின் புத்தல பிரதேச செயலாளர் பிரிவின் பல கிராமங்களில் சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் உணரப்பட்டன. 10ஆம் மதியம் மூன்று நிலநடுக்கங்கள் ஏற்பட்டதுடன் 11ஆம் திகதி அதிகாலை 3.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்றபட்டதாக மொனராகலை அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்தது. இந்நிலையில், அப்பகுதியில் இதுபோன்ற அதிர்வுகள் அதிகம் ஏற்பட்டால் மற்றும் அதிர்வுகளின் அளவு அதிகரித்தால் அவதானமாக இருக்க வேண்டும் என்று பேராசிரியர் குறிப்பிட்டார். மொனராகலையில் ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கும் துருக்கியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மறுத்த அவர், இந்தியப் பெருங்கடல் தட்டுக்கு அருகாமையில் இலங்கை அமைந்திருப்பதால் எவ்வித தொடர்பும் இருக்க முடியாது…

Read More

பாடசாலைகளில் சுமார் 30,000 ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அச்சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலின் இதனைத் தெரிவித்தார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், கல்வியியற் கல்லூரிகளில் பயிற்றப்பட்ட சுமார் 8,000 பேர் வெளியேறியுள்ளனர். எனினும், அவர்களை முறையாக பாடசாலைகளுக்கு நியமிப்பதற்கான உரிய திட்டம் கல்வி அமைச்சிடம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

Read More