ஊவா, கிழக்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் 100 மில்லிமீற்றர் அளவில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு வளிமண்டலவியல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.
Author: admin
இந்த நாட்களில் ரயில்களில் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக, நாட்டின் பல பகுதிகளில், ரயில்களில் பல கொள்ளை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. பயணிகளை காயப்படுத்தும் வகையில் சில கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் பொலிஸ் மா அதிபர் மற்றும் பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் ஆதரவுடன் அவசர பாதுகாப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே பிரதி பொது முகாமையாளர் வி.எஸ்.பொல்வத்தகே தெரிவித்தார். இதேவேளை, ரயில் மோதியதால் ஸ்தம்பிதமடைந்திருந்த வடக்கு ரயில் வீதியின் போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது. காங்கசன்துறையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி சென்ற உத்தர தேவி நகரங்களுக்கு இடையேயான கடுகதி ரயில் நேற்று (08) தம்புத்தேகம மற்றும் செனரத்கம நிலையங்களுக்கு அருகில் தடம்புரண்டது. இதன் காரணமாக நேற்று முதல் அனுராதபுரம் நோக்கி பயணிக்க ஆரம்பித்த ஒடிசி விசேட ரயிலை மஹவ பகுதியில் ரயில்வே அதிகாரிகள் நிறுத்த வேண்டியிருந்தது. அதன்படி, அந்த ரயிலில் இருந்த பயணிகள்…
திருகோணமலை – கந்தளாய் லீலாரத்ன பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில் 16 வயதிற்குட்பட்டவர்களுக்கான பரிதிவட்டம் வீசும் போட்டியில் கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தின் தரம்-10 இல் கல்வி பயிலும் எம்.எச்.எம்.அல் கிபத் எனும் மாணவன் 36.74m தூரம் எறிந்து மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றதுடன் தேசிய மட்ட போட்டிக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவ் வெற்றியானது கல்முனை அல் மிஸ்பாஹ் பாடசாலை வரலாற்றில் மாகாண மட்ட விளையாட்டு போட்டியில் தனி நிகழ்ச்சியில் மாணவர் ஒருவர் வெற்றி பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமை இதுவே முதன்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இம் மாணவனை பயிற்றுவித்து வழிப்படுத்திய உடற்கல்வி ஆசிரியர்களான ஏ.ஜே.எம்.சஸான், எஸ்.எம்.புஹாரி, எஸ்.எப்.பவுசியா அவர்களுக்கும் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களான ஏ.ஜே.எம் சாபித், எம்.ஜே.முபீத் அவர்களுக்கும் பாடசாலையின் அதிபர் எம்.ஐ.அப்துர் ரசாக்,பிரதி அதிபர் ஐ.எல்.எம்.ஜின்னா,உதவி அதிபர் இ.றினோஸ் ஹஜ்மீன் உட்பட ஆசிரியர்கள்…
நாவலப்பிட்டி, இங்குருஓயா வடக்கு பிரதேசத்தில் படுகாயங்களுடன் இருந்த தம்பதிகள் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பின்னர் அவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 48 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர். முன்விரோதம் காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதுடன், கொலையை செய்த சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கையிலுள்ள பல நிறுவனங்களின் உரிமையாளர்கள் குடும்பத்துடன் வெளிநாடுகளில் குடியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக தமது தொழில் நடவடிக்கையை மேற்கொள்ள முடியவில்லை என தெரிவித்து அவர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதற்கு மேலதிகமாக மற்றொரு குழு வெளிநாடு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. வெளிநாடு செல்வதற்கு முன்னர் நாட்டில் உள்ள தமது சொத்துக்களை விற்க முயற்சித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் அந்த சொத்துக்களை கொள்வனவு செய்ய யாரும் முன்வராததால் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் அது பிரச்சினையாகியுள்ளதுடன் வெளிநாடு செல்லும் பயணத்தை தாமதப்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவின் நஷனல் ஏர்லைன் ஏரோஃப்ளோட் இலங்கைக்கான தமது சேவையை மீண்டும் இன்று முதல் ஆரம்பித்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். வாரத்துக்கு இரண்டு விமான சேவைகளை முன்னெடுக்க ஏரோஃப்ளோட் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. அஸூர் ஏர் விமான நிறுவனத்துக்கும் நவம்பர் தொடக்கத்தில் இருந்து வாரத்துக்கு நான்கு விமானங்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். ரஷ்யாவில் இருந்து இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகையை கணிசமாக அதிகரிக்கும் என அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இலங்கையிலுள்ள ரஷ்யத் தூதரகம் மற்றும் ரஷ்யாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் முயற்சிகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் ஹரின் பெர்னாண்டோ டுவிட்டர் மூலம் மேலும் தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண பிரதம செயலாளராக பீ.எஸ் ரத்னாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி செயலாளரின் கையொப்பத்துடன் வெளியானது. கடந்த 3 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
எதிர்பாராத விதமாக மோதிய மாணவியை பாடசாலை கழிவறைக்கு இழுத்துச்சென்று மாணவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் டெல்லியில் அரங்கேறியுள்ளது. டெல்லியில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பாடசாலையில் 11 வயது மாணவி இது குறித்து பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். அந்த மாணவி வகுப்பறைக்கு செல்லும்போது எதிர்பாராத விதமாக 2 சீனியர் மாணவர்கள் மீது தெரியாமல் மோதியுள்ளார். இதையடுத்து, 11 மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் அந்த 2 சீனியர் மாணவர்களிடம் அந்த மாணவி மன்னிப்புகேட்டுள்ளார். ஆனால், ஆத்திரமடைந்த அந்த இரு மாணவர்களும் மாணவியை கடுமையாக தாக்கியதுடன், மாணவியை பாடசாலை கழிவறைக்கு இழுத்து சென்று வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி பாடசாலை ஆசிரியரிடம் முறைப்பாடு செய்த போது, மாணவர்கள், பாடசாலையில் இருந்து நீக்கப்பட்டுவிட்டதாக கூறி இந்த விவகாரத்தை நிர்வாகம் மூடி மறைத்துள்ளது. வன்கொடுமைக்கு உள்ளான மாணவி தற்போது பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளார். இந்த முறைப்பாடு தற்போது…
நீர்கொழும்பு மேயருக்கு எதிராக மாநகர சபை உறுப்பினர்கள் வெள்ளிக்கிழமை நீர்கொழும்பு பஸ் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வியாழக் கிழமை இடம்பெற்ற மாநகர சபையின் மாதாந்தக் கூட்டத்தின் போது எதிர்கட்சியின் உறுபினர் ஒருவர் மாநகர சபை சொத்துக்களை விற்பதற்கு எதிராக கருத்துக்கூறிய போது ஏற்பட்ட சொற்போரில் மேயர் தயார லானசா சபைக்கு ஒவ்வாத தூசன வார்த்தைகளை பயன்படுத்தி ஏசியுள்ளார். இதனையடுத்து எதிர்கட்சியின் உறுப்பினர்கள் அவருக்கு எதிராக குரல் கொடுத்து சபையில் வாதப் பிரதி வாதங்களில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து மேயர் தயான் லான்சா ஏழு எதிர்கட்சி உறுப்பினர்களை ஒரு மாத காலம் சபை நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கும் பிரேரணை ஒன்றை கொண்டுவந்து நிரைவேற்றி அவர்களை சபையிலிருந்து வெளியேற்ற முயற்சித்துள்ளார். இருந்தாலும் அந்த உறுப்பிணர்கள் வெளியே செல்லாததினால் பொலிஸார் வரவழைக்கப்பட்டு அவர்களை வெளியேற்ற எடுத்த முயற்சியும் கைகூடவில்லை. அந்த ஏழு உறுப்பினர்களும் சபையிலேயே இருந்தனர்.இச்சந்தர்பத்தை பயன்படுத்தி அன்றைய தின பிரேரணைகளை நிரைவேற்றியுள்ளனர். இந்த…
தனது பதவிக்கு உட்பட்ட எந்தவொரு அதிகாரமும் எனக்கு வழங்கப்படவில்லை என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார். நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தனக்கு அறிவிக்காமல் பணிப்பாளர் நாயகம் ஒருவர் நீக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இராஜாங்க அமைச்சரின் பிரகாரம், சுற்றுலா அமைச்சின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்க விஜேசிங்க, பதவி விலகுமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டதை அடுத்து கடந்த வியாழக்கிழமை இராஜினாமா செய்துள்ளார். ஒரு பெண் ஏன் தலைமைப் பதவியில் இருக்க முடியாது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அவர் ஏன் இராஜினாமா செய்ய வேண்டும். மேலும் இந்த விடயம் தொடர்பில் விசாரணை கோரியுள்ளார். தனக்கு இராஜாங்க அமைச்சர் என்ற வகையில் எந்தவொரு அதிகாரமும் அல்லது ஒரு விடயமும் வழங்கப்படவில்லை எனவும் டயானா கமகே தெரிவித்துள்ளார்.