காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு கோட்டை வரை பயணித்த உத்தர தேவி புகையிரதம் இன்று (8) காலை தம்புத்தேகம மற்றும் செனரத்கம நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டதாக புகையிரத திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். புகையிரதத்தின் முன் இயந்திரப் பெட்டியும் மற்றுமொரு பெட்டியும் தடம் புரண்டுள்ளதாக தெரிவித்த அதிகாரி, இதன் காரணமாக வடக்கு புகையிரத மார்க்கத்தின் போக்குவரத்து நடவடிக்கைள் தடைப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
Author: admin
கொழும்பு காலிமுகத்திடல் கடற்கரைக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் 7 பேரில் ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை நண்பர்களுடன் நீராடச் சென்ற போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. கொழும்பு – வாழைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் பாதுகாப்பு எச்சரிக்கை பதாகை அகற்றப்பட்ட நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சிறுவர்கள் அனைவரும் கொழும்பு வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் எதிர்வரும் திங்கட்கிழமை விஷேட வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. நபிகள் நாயகத்தின் பிறந்த தினம் ஒக்டோபர் 9ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு ஒக்டோபர் 10ஆம் திகதி திங்கட்கிழமை விஷேட வங்கி விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சிறுவர் முதியோர் தினத்தை ஒட்டி நடைபெற்ற இறுதி நிகழ்வானது கல்முனை பிரதேச செயலகத்தின் கல்முனைக்குடி சமுர்த்தி வலயத்தின் இஸ்லாமாபாத் பிரிவின் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புகளின் ஏற்பாட்டில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் I.L. அர்சுதீன் அவர்களின் தலைமையிலும் வங்கி வலய முகாமையாளர் M. புவிராஜ் அவர்களின் ஒருங்கிணைப்பிலும் இஸ்லாமாபாத் சிறுவர் பூங்கா வளாகத்தில் 2022.10.07 திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் MSM.சப்றாஸ் அவர்களும், கல்முனைப் பிரதேச செயலக பிரதேச செயலாளர் J.லியாகத் அலி அவர்களும் , விஷேட அதிதியாக கல்முனை பிரதேச செயலக தலைமைப் பீட முகாமையாளர் ARM.சாலீஹ் அவர்களும், அதிதிகளாக இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியால அதிபர் AG.M.றிசாத் , சமுர்த்தி கருத் திட்ட முகாமையாளர் AMS.நயீமா , சமுர்த்தி மகாசங்க முகாமத்துவ பணிப்பாளர் SS பரீரா , மருதமுனை சமுர்த்தி வங்கி முகாமையாளர் ALM. நஜீப், நட்பட்டிமுனை சமுர்த்தி வங்கி முகாமையாளர்…
அரச துறையில் ஓய்வு பெறும் வயதை 60 ஆக குறைக்கும் பிரேரணையை மாற்ற வேண்டாம் என சுகாதார அமைச்சின் வைத்திய நிபுணர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர். மருத்துவ நிபுணர்களின் ஓய்வு பெறும் வயதை 60 ஆகக் குறைப்பது, இந்த நடவடிக்கைக்கு எதிரான பரப்புரைக் குழுவால் கூறப்படும் சுகாதார சேவை அல்லது முதுகலை மருத்துவக் கல்விக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என சுகாதார அமைச்சின் மருத்துவ நிபுணர்கள் கருதுகின்றனர். சுமார் 250 மருத்துவ நிபுணர்கள் ஓய்வு பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டாலும், அவர்களுக்குப் பதிலாக நியாயமான எண்ணிக்கையிலான நிபுணர்கள் இருப்பார்கள் என அவர்கள் தெரிவித்துள்ளனர். வெளிநாட்டுப் பயிற்சியை முடித்துவிட்டு அண்மையில் நாடு திரும்பிய 200 நிபுணர்களும், வெளிநாட்டுப் பயிற்சியை முடித்து அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் நாட்டிற்கு வரவிருக்கும் 525 நிபுணர்களும், உள்ளூர் முதுகலை சிறப்புப் பயிற்சியை முடித்த 300 பயிற்சியாளர்களும் இதில் அடங்குவர். . ஓய்வுபெறவுள்ள 250 மருத்துவ நிபுணர்களில் பெரும்பான்மையானவர்கள் தற்போது நாட்டில் போதுமான…
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் எப்போது வேண்டுமானாலும் கைதாகலாமென தகவல் வெளியாகியுள்ளது. கட்சிக்கு சட்டவிரோதமாக வெளிநாட்டு நிதி பெற்ற வழக்கில் இம்ரான் கான் எந்நேரமும் கைது செய்யப்படலாம் எனவும் தற்போது அவர் வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இம்ரான் கானின் ஆட்சிக்காலத்தில் தெஹ்ரீக் -இ- இன்சாப் கட்சிக்கு பல்வேறு நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக நிதி பெற்றதாக முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பெடரல் ஏஜென்சி நடத்திய விசாரணையில் 10-க்கும் மேற்பட்ட வங்கி கணக்குகள் தொடங்கி பல்வேறு நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக வெளிநாட்டு நிதி பெற்றதாக கூறப்படுகிறது.
கணவனுக்கு பெற்றோல் ஊற்றி தீ வைத்து ஆபத்தான முறையில் தீக்காயங்களை ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் முற்படுத்தப்பட்ட குடும்பப் பெண்ணை விளக்கமறியலில் வைக்க யாழ். நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ். பொலிஸ் பிரிவுக்கு உள்பட்ட புறநகர் பகுதியில் இந்தச் சம்பவம் கடந்த நான்காம் திகதி இடம்பெற்றது. “சந்தேக நபரின் வீட்டுக்குள் பாம்பு ஒன்று வந்ததையடுத்து அதனை விரட்ட சந்தேக நபர் பெற்றோலை விசிறியுள்ளார் அது அங்கு ஏற்றப்பட்டிருந்த சாம்பிராணி குச்சியில் பட்டு தீ ஏற்பட்டுள்ளது. கணவன் மீது பெற்றோலை ஊற்றும் எண்ணம் சந்தேக நபரிடம் இல்லை” என்று சந்தேக நபரின் சட்டத்தரணி நீதிமன்றில் சமர்ப்பணம் செய்துள்ளார். இதேவேளை இருதரப்பு சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த யாழ். நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜா, சந்தேக நபரான பெண்ணை வரும் 11ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
கட்டாரில் எதிர்வரும் நவம்பா் மாதம் நடைபெற இருக்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியே தனக்கு கடைசி என ஆா்ஜென்டீனா கால்பந்து நட்சத்திரம் லயோனல் மெஸ்ஸி கூறியிருக்கிறாா். எனினும், அந்தப் போட்டியுடன் அவா் ஆா்ஜென்டீன அணியிலிருந்து ஓய்வுபெறுகிறாரா, அல்லது உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இதுதான் கடைசியா அல்லது கால்பந்திலிருந்தே அத்துடன் ஓய்வு பெறுகிறாரா என்பதை அவா் தெளிவுபடுத்தவில்லை. கட்டார் போட்டியானது, மெஸ்ஸியின் 5-ஆவது உலகக் கோப்பை போட்டியாக இருக்கிறது. எனினும், தேசிய அணியின் கேப்டனாக இப்போட்டியில் அவா் இன்னும் கோப்பை வென்று தராதது குறையாகவே இருக்கிறது. இந்நிலையில், சமீபத்திய நோ்க்காணல் ஒன்றில் பேசிய மெஸ்ஸி, “உலகக் கோப்பை போட்டியில் சாம்பியன் ஆவதற்கான அனைத்துத் தகுதிகளும் ஆா்ஜென்டீனாவுக்கு இருப்பதாக நம்புகிறேன். இந்தப் போட்டிக்கு நாங்கள் முன்னேறி வந்ததன் அடிப்படையில் அதைச் சொல்கிறேன். ஆனால் போட்டியில் எதுவும் நிகழலாம். ஒவ்வொரு ஆட்டமும் கடினமானது. எப்போதுமே எதிா்பாா்த்த முடிவுகள் கிடைப்பதில்லை. இவற்றைக் கடந்து இந்த உலகக்…
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதியில் 60 வயதுடைய வயோதிபர் ஒருவர் தனது மனைவியை அடித்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (07) இரவு இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். ஆரையம்பதி மாவிலந்துறையைச் சேர்ந்த 60 வயதுடைய 7 பிள்ளைகளின் தாயான நவரெத்திணம் சோதிமலர் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பிள்ளைகள் அனைவரும் திருமணம் முடித்து வெவ்வேறு பிரதேசத்தில் வாழ்ந்துவருவதுடன் கணவனும் மனைவியும் தனிமையில் வாழ்ந்து வரும் நிலையில் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுவதுடன் கணவன் மனைவியைவிட்டு வெளியேறி கடந்த ஒரு மாதகாலமாக கல்லாறு பிரதேசத்தில் இருந்துள்ள நிலையில் சம்பவதினமான நேற்று அவரை தேடி மனைவி சென்று சமாதானம் பேசி அழைத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் மனைவியை அடித்து கொலை செய்துவிட்டு கணவன் தப்பி ஓடியுள்ளதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து நீதிமன்ற அனுமதியை பெற்று சடலத்தை பிரேத பரிசோதனைக்காக…
பிரித்தானிய ஆளும் கன்சா்வேட்டிவ் கட்சியின் இந்த ஆண்டுக்கான பொதுக்கூட்டத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட குற்றச்சாட்டின் பேரில், பிரதமா் லிஸ் டிரஸ் தலைமையிலான அரசில் வா்த்தக அமைச்சராக பொறுப்பு வகித்து வந்த கானா் பா்னஸ் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். கன்சா்வேட்டிவ் கட்சியிலிருந்தும் அவா் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ள நிலையில், சுயேச்சை எம்.பி.யாக அவா் தொடா்ந்து செயல்படுவாா் என்று கூறப்படுகிறது.