நீர்கொழும்பு உள்ள பாடசாலை ஒன்றில் ஆசிரியை ஒருவர் நடனமாடும் காணொளி ஒன்று அண்மையில் சமூக ஊடகங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பில், மேல் மாகாண கல்விப் பணிப்பாளரின் கையொப்பத்துடன், மேல் மாகாண கல்வி திணைக்களம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “சிறுவர் தினத்தை முன்னிட்டு பாடசாலையில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற கூட்டுச் செயற்பாட்டின்போதே குறித்த ஆசிரியை மற்றும் மாணவியர் நடனமாடியுள்ளனர். இதன்படி, இது தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியமில்லை என” குறித்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Author: admin
கொழும்பில் பாடசாலை செல்வதாகக் கூறி பிள்ளைகள் மசாஜ் நிலையங்களுக்கு செல்வதனை தடுக்குமாறு அதிபர்கள், ஆயுர்வேத திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த மூன்று மாதங்களில் மாணவர்கள் பாடசாலை நேரங்களில் மசாஜ் நிலையங்களின் சேவைகளை பெற்றுக்கொண்டு அங்கு சேவைகளை வழங்கச் செல்வது தொடர்பில் தமக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஆயுர்வேத ஆணையாளர் தம்மிக்க அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். பாடசாலைக்குச் செல்வதாகக் கூறி வீடுகளில் உள்ள பணத்தைத் திருடி இவ்வாறான இடங்களுக்குச் செல்லும் சிறுவர்கள் பலர் அதற்கு அடிமையாகி வருவதாகவும் அதிபர்கள் தெரிவித்துள்ளனர். பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அழைத்து வரும் தாய்மார்களும், தந்தைகளும் மசாஜ் நிலையங்களுக்குச் செல்லும் போக்கும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக குடும்ப உறவுகளில் முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சட்டவிரோதமாக மசாஜ் நிலையங்கள் நடத்துவதற்கு அனுமதியளிக்கப்பட்ட உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு இந்த வர்த்தகங்களை ஒழுங்குபடுத்தும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் உரிய நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டு வருவதாகவும் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
கந்தளாய் லீலாரத்ன விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகின்ற கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட மெய்வல்லுனர் போட்டிகளில் எமது பாடசாலையைச் சேர்ந்த இரு மாணவர்கள் இன்று தங்கப்பதக்கங்கள் பெற்று வரலாற்றுச் சாதனை புரிந்துள்ளனர். 14 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 80 மீற்றத் தடை தாண்டல் ஓட்டப்போட்டியில் செல்வன் MM. றிஹான் அவர்களும், 14 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 80 மீற்றர் தடை தாண்டல் ஓட்டப்போட்டியில் செல்வி MN. பாத்திமா சஜா அவர்களும் முதலாமிடத்தைப் பெற்று தங்கப்பதக்கத்தைச் சுவீகரித்து, 6 வருடங்களின் பின்னர் தனி நபர் நிகழ்ச்சிகளில் பதக்கம் வென்று தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டு வரலாற்றுச் சாதனை புரிந்துள்ளனர். இதற்கு முன்னர் பாடசாலை வரலாற்றிலேயே முதன் முறையாக, அஞ்சலோட்டப்போட்டியில் 14 வயதுக்குட்பட்ட அணியினர் வெண்கலப் பதக்கம் வென்றமை குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றிகளுக்குக் காரணமான மாணவர்களையும், அதற்கு உறுதுணையாக பயிற்சிகளை வழங்கிய பாடசாலை உடற்பயிற்சி ஆசிரியர் UL. ஷிபான், விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களாகிய MAM. றியால், AWM.…
கடந்த 15 நாட்களாக மீன்பிடிக்க சென்று திசைமாறி காணாமல் போனதாக கூறப்பட்ட 4 மீனவர்களும் பாதுகாப்பாக உள்ளனர் எனவும் அவர்களை மீட்க துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சி. முகம்மட் றியாஸ் தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டம் கல்முனையில் இருந்து கடந்த 26 செப்டம்பர் மாதம் ஆழ்கடல் மீன் பிடிக்கு சென்ற 4 மீனவர்கள் 15 நாட்கள் கடந்தும் இன்னும் வீடு திரும்பவில்லை என்ற விடயம் தொடர்பாக எமது ஊடகவியலாளர் பாறுக் ஷிஹானிடம் இன்று கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு கூறினார். காணாமல் போண மீனவர்கள் அனைவரும் தற்போது மீட்கப்பட்டு சொந்த இடத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட கடற்பரப்பில் இருந்து கடந்த 26.09.2022 அன்று மாலை புறப்பட்டு சென்ற 4 மீனவர்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை.இது குறித்து ஊடகங்களில் செய்தி வெளியாகி இருந்தது.இதில் கல்முனையை சேர்ந்த…
அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலத்தின் பிரகாரம் மாதாந்தம் குறைந்தபட்சம் 100,000 ரூபாவிற்கு மேற்பட்ட வருமானம் பெறுவோர் கூட வருமான வரியைச் செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருப்பதுடன், இதன் விளைவாக 20 சதவீதமான வரி வருமானத்தை நாட்டிற்கு ஈட்டித்தரும் தனிநபர்கள் வரி ஏய்ப்பில் ஈடுபடக்கூடிய சாத்தியப்பாடு உயர்வடைந்துள்ளது. 2017ஆம் ஆண்டு 24ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் பெறப்பட்டதைத் தொடர்ந்து அச்சட்டமூலம் நேற்று முன் தினம் வர்த்தமானி அறிவித்தலாக வெளியிடப்பட்டுள்ளது. அச்சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் பட்சத்தில் மாதாந்தம் குறைந்தபட்சம் 100,000 ரூபாவிற்கு மேற்பட்ட வருமானம் பெறும் அனைவரும் வருமான வரியைச் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.
நாங்கள் தொலைத்தது ஆடு,மாடுகளை இல்லை எமது பிள்ளைகளையே.நாங்கள் கையில் ஒப்படைத்த,வீடுகளில் வந்து பிடித்துச் சென்ற எமது பிள்ளைகளையே கேட்கிறோம் என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தெரிவித்தார். மன்னாரில் இன்று (வியாழக்கிழமை) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்கு 2 லட்சம் ரூபாய் பணமும் மரண சான்றிதழ் வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.ஏற்கனவே ஒரு லட்சம் ரூபாய் வழங்க உள்ளதாக தெரிவித்தனர். தற்போது அதற்கு வட்டியுடன் சேர்த்து 2 லட்சம் தருவதாக கூறுகின்றனர்.நாட்டில் ஏற்பட்ட இனப்படுகொலைக்கு எமது பிள்ளைகள்,உறவுகள் காணாமல் போனதற்கு காரணம் தற்போதைய ஜனாதிபதி. ஆட்சிக்கு வருகின்ற அனைத்து அரசாங்கமும் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றுவதற்காகவும் நீதியை பெற்றுத்தரவதற்காகவும் அவர்கள் செயல்படவில்லை. அவர்கள் தமது அரசினையும்,தனது மகளையும் இராணுவத்தையும் பாதுகாப்பதற்காகவும் பயங்கரவாதத்தை ஆதரித்து போர்க்குற்றத்தை மேற்கொண்டவர்களையே…
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாய பீடத்தின் விலங்கு விஞ்ஞானத் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்ட “வில்வம் பழச்சாறு கலந்த பருகும் யோகட்” பானத்தில் அறிமுக நிகழ்வு நேற்று (புதன்கிழமை) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இடம்பெற்றது. விவசாய பீடத்தின் விலங்கு விஞ்ஞானத் துறையினரால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி, சேதன முறையில் உற்பத்தி செய்யப்படக் கூடிய வில்வம் பழச்சாறு கலந்த பருகும் யோகட்டுக்கான உற்பத்தி ஒப்பந்தம் கடந்த வருடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வணிக இணைப்பு அலுவலகத்தின் அனுசரணையுடன் முல்லைத்தீவில் அமைந்துள்ள முல்லை பாற்பொருள் உற்பத்தி நிலையத்துடன் மேற்கொள்ளப்பட்டிருந்தது. அந்த ஒப்பந்தத்துக்கமைய உற்பத்தி செய்யப்பட்டட வில்வம் பழச்சாறு கலந்த பருகும் யோகட்டை சந்தைப்படுத்தும் செயன்முறை நேற்று வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, முல்லை பாற்பொருள் உற்பத்தி நிலையத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர், ஜெய்கா செயற்றிட்ட அதிகாரிகள், விவசாய பீட அதிகாரிகள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வணிக இணைப்பு அலுவலகத்தின் பணிப்பாளர், பல்கலைக்கழகப்…
உள்ளூர் பயிர்ச்செய்கையை மேம்படுத்தும் பொருட்டு கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் வவுனியா மாவட்டத்தில் உழுந்து, பயறு செய்கைக்கான விதை தானியங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (வியாழக்கிழமை) வவுனியா பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது. வவுனியா பிரதேச செயலக உதவிதிட்டமிடல் பணிப்பாளர் சி.சண்முகநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உழுந்து, பயறு செய்கையை மேம்படுத்த தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு விதை தானியங்களை வழங்கி வைத்தார். 9 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் உழுந்து மற்றும் பயறு ஆகிய விதை தானியங்கள் விவசாயிகளின் கையில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இந் நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கு.திலீபன் , வவுனியா நகரசபை உப தபிசாளர் குமாரசாமி, மாவட்ட விவசாய பணிப்பாளர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிரதேசசபை உறுப்பினர் மற்றும் பயனாளிகள்…
சிறுபோகத்தில் அறுவடைசெய்த நெல்லை கொள்வனவு செய்யமுடியாத நிலையில் நெல்சந்தைப்படுத்தும் சபை உள்ள நிலையில் அரசாங்கம் வெளிநாடுகளிலிலிருந்து அரிசியினை இறக்குமதிசெய்யும் முயற்சிகளை முன்னெடுத்துவருவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார். மட்டக்களப்பு,மண்முனை தென் மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் பெரும்போக நெற்செய்கையினை முன்னெடுப்பது தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் நேற்று (புதன்கிழமை) கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி சிறிகாந்த் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், மண்முனை தென் மேற்கு பிரதேச செயலக பிரதேச செயலாளர் திருமதி தட்சனகௌரி தினேஸ், மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் கே.ஜெகன்நாத், மாவட்ட விவசாய பிரதிப்பணிப்பாளர், பிரதேச நீர்பாசன பொறியியலாளர் சுபாகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தின்போது விவசாய பிரதேசங்களின் திட்ட முகாமைத்துவக் குழுக்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கமைய…
இந்திய விமானப்படையில் பெண் விமானிகள் மற்றும் தரைப்படை பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் அசாம் மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் சீன எல்லைக்கு அண்மித்ததாக போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை பெண்கள் அதிக அளவில் இயக்கி வருகின்றனர். பெண் விமானிகள் மற்றும் தரைப்படை அதிகாரிகள் நாடு முழுவதும் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும், உலகின் மிக உயரமான போர்க்களமான சியாச்சின் பனிப்பாறை செக்டார் முதல் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள விஜயநகரில் உள்ள கிழக்கு திசையில் தரையிறங்கும் தளம் வரை அனைத்து வகையான நிலப்பரப்புகளிலும் துருப்புக்களிலும் அவர்கள் பணியாற்றி வருவதாகவும் இந்திய விமானப்படையின் கிழக்கு கட்டளை அதிகாரிகள் தெரிவித்தனர். Sr-30 AMI போர் ஜெட் விமானத்தின் இந்தியாவின் முதல் ஆயுத அமைப்பு இயக்குனர் லெப்டினன்ட் தேஜஸ்வி குறிப்பிடுகையில், கண்ணாடி கூரையை உடைத்து, நாட்டிற்கு சேவை செய்வதற்கான கனவுகள் நிறைந்த புத்திசாலித்தனமான பெண்கள் உள்ளனர். போர் விமானப் படையில் பெண்கள் இருப்பது தனித்துவமான அனுபவம்…