Author: admin

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராக கொழும்பில் எதிர்வரும் நவம்பர் 2ஆம் திகதி மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், மாணவர் அமைப்புக்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள் ஒன்றுகூடி இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளனர். போராட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பிலான ஒன்றிணைந்த கலந்துரையாடல் கொழும்பு பொது நூலகக் கேட்போர் கூடத்தில் நேற்று மாலை நடைபெற்றது. ஐக்கிய மக்கள் சக்தி, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, முன்னிலை சோசலிசக் கட்சி, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், இலங்கை ஆசிரியர் சங்கம், இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இதில் பங்கேற்றிருந்தனர். இதன்போது அரசாங்கத்தின் அடக்குமுறைகள் தொடர்பில் அனைவரும் கருத்துக்களை முன்வைத்துள்ளனர். அமைதி வழியில் போராடுவோர் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசி வலிந்து தாக்குதல்களை மேற்கொள்கின்றனர் என்று அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்…

Read More

SportsChain எனும் கணினி மென்பொருளை பயன்படுத்தி 1500 கோடி ரூபாவுக்கும் அதிகமான மோசடி தொடர்பில் சீன நாட்டு தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து மலேசியாவிற்கு தப்பிச் செல்ல முற்பட்ட போது இரகசிய பொலிஸாரால் இவர்கள் கைது செய்யப்பட்டனர். சீன தம்பதியான ஹியூமன் மேக்ஸ் மற்றும் காகி சங்கி ஆகியோர் எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவல உத்தரவிட்டார். சந்தேக நபர்களின் வங்கிக் கணக்குகளைச் சரிபார்த்த போது, ​​1.4 பில்லியன் ரூபாய் பணம் புழக்கத்தில் உள்ளது. இந்தப் பணம் எப்படி கணக்குகளுக்கு வந்தது என்பது தொடர்பில் விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக அரசாங்க சட்டத்தரணி ஹம்ஸ அபேரத்ன நீதிமன்றில் தெரிவித்துள்ளார். மேலதிக அறிக்கையை நீதிமன்றில் முன்வைத்த சட்ட மா அதிபர் திணைக்களம் சார்பில் ஆஜரான அரச சட்டத்தரணி ஹம்ஸா அபேரத்ன, இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக…

Read More

கோதுமை மாவின் மொத்த விலை இன்று முதல் குறைக்கப்படுவதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதி மற்றும் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, ஒரு கிலோ கோதுமை மாவின் விலையானது 375 ரூபாவில் இருந்து 290 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

Read More

60,000 மெற்றிக் தொன் நிலக்கரி ஏற்றிச் செல்லும் கப்பல் இம்மாதம் 24 அல்லது 25ஆம் திகதி நாட்டை வந்தடைய உள்ளதாக எரிசக்தி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இலங்கை நிலக்கரி நிறுவனத்தினால் முன்பதிவு செய்யப்பட்ட ஏறக்குறைய 200 இலட்சம் மெற்றிக் தொன் நிலக்கரி அடங்கிய மேலும் மூன்று கப்பல்கள் நவம்பர் முதல் வாரத்தில் இலங்கைக்கு வரவிருப்பதாகவும் இதனால் எதிர்காலத்தில் நிலக்கரி ஆலைகளுக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படாது எனவும் குறித்தஅதிகாரி தெரிவித்தார்.

Read More

நாட்டில் இந்த வார இறுதியில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் காலத்தை குறைக்க மின்சார சபை முடிவு செய்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். நீர் உற்பத்தி அதிகரிப்பு மற்றும் குறைந்த எரிசக்தி தேவை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் இன்று (வெள்ளிக்கிழமை) ருவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார். நீர் மின் உற்பத்தி செய்யும் பகுதிகளில் மழை அதிகரித்தால் எதிர்வரும் காலங்களில் நாளாந்த மின்வெட்டை குறைக்கும் வாய்ப்பு உள்ளதாக எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Read More

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் நீதிமன்றில் முன்னிலையாகாத காரணத்தினால் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலை படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Read More

யாழ்ப்பாணம் – மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி அட்டகிரி பகுதியில் பொலிஸ் விசேட அதிரடி படையினரால் நூற்றி பதினோரு கைகுண்டுகள் இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளன. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, நவாலி அட்டகிரி பகுதியில் உள்ள காணியை அதன் உரிமையாளர் கடந்த 11ஆம் திகதி உழவுக்குட்படுத்திய நிலையில் சந்தேகத்திற்கிடமான பொருளை அவதானித்துள்ளார். இதனையடுத்து இது குறித்து மானிப்பாய் பொலிஸாருக்கு அறிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த மானிப்பாய் பொலிஸார் கைக்குண்டுகளை அடையாளம் கண்டனர். இந்நிலையில் நீதிமன்ற அனுமதி பெற்று இன்றைய தினம் காலை 6மணி முதல் யாழ். மாவட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படையினால் மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகளின் போது 111 கைக்குண்டுகள் மீட்கப்பட்டன. இதனையடுத்து கைப்பற்றப்பட்ட கைக்குண்டுகளை செயலிழக்க செய்வதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் எடுத்து சென்றுள்ளனர்.

Read More

இலங்கை போன்ற நடுத்தர வருமான நாடுகளுக்கு நன்கொடையாளர்களின் ஒருங்கிணைப்பை விரிவுபடுத்துவதற்கான வழிகளைத் தேடுவதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா தெரிவித்துள்ளார். மிகவும் பயனுள்ள கடனைத் தீர்க்கும் பொறிமுறைக்கு சர்வதேச நாணய நிதியம் தலைமை தாங்குவதாக அவர் நம்புவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

Read More

கனடாவில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சகோதரனும் சகோதரியும் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கனடாவின் Markham Denison என்ற இடத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று நடந்த கார் விபத்தில் இருவரும் உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் யாழ்ப்பாணம் இணுவில் பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், விபத்தில் ஒரே வீட்டை சேர்ந்த இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read More

ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிரான தனிப்பட்ட முறைப்பாடு தொடர்பிலான விசாரணையை இன்று முதல் 10 வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது

Read More