Author: admin

போக்குவரத்து குற்றங்களுக்கான அபராதங்களை செலுத்துவதற்கு எதிர்வரும் ஏப்ரல் 23ஆம் திகதி வரை சலுகை காலம் வழங்க தபால் தினைக்களம் தீர்மானித்துள்ளது. மோட்டார் போக்குவரத்து சட்டத்தின் 215(அ) பிரிவின் பிரகாரம் நிதியமைச்சின் செயலாளரின் அங்கீகாரத்திற்கு உட்பட்டு இந்த அபராதங்களை செலுத்துவதற்கான கால அவகாசம் வழங்கபட்டுள்ளதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்தார் அதன்படி மார்ச் 29முதல் ஏப்ரல் 10வரை (விடுமுறை நாட்கள் உட்பட) வழங்கபட்ட அபராத பத்திரங்களை இம்மாதம் 23ஆம் திகதி வரை எந்த தபால் அலுவலகம் அல்லது உபதபால் அலுவலகங்களில் மேலதிக கட்டணமின்றி செலுத்தலாம் என்று தபால்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

Read More

*_☦️THE ROOT OF THE EASTER ATTACK_* *🚫உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான முக்கிய இரகசியங்களை நாளை மாலை 6 மணிக்கு மூன்று மொழிகளிலும் வெளியிடவுள்ளது!* *⁉️ கிழிக்கப்படவிருக்கும் பலரின் முகத்திரைகள்* தொடர்ந்தும் நம்மோடு இணைந்திருங்கள்….. மேலும் பல தகவல்கள் மிக விரைவில்….

Read More

ராஜபக்ச குடும்பத்தினர் வீதியில் இனிமேல் இறங்க முடியாது என்று ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த நாட்டில் தனி ஒரு குடும்பமாக இருக்கும் திருடர்களைப் பாதுகாப்பதற்குப் பொலிஸாரும் இராணுவத்தினரும் துணை போகவேண்டாம் என்று கேட்டுக் கொள்ள விரும்புகின்றோம். ராஜபக்ச குடும்பத்தினர் நாட்டிலிருந்து தப்பிச் செல்வதற்கு இடமளிக்காத வகையில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் முன்வைக்கின்றேன். ராஜபக்ச குடும்பத்தினர் வீதியில் இனிமேல் இறங்க முடியாது. அவர்கள் ஹோட்டல்களிலோ, வீடுகளிலோ, எங்கேனும் தனி அறைகளிலோ அல்லது நிலத்தின் கீழான பங்கர்களிலோ பதுங்கியிருக்க முடியுமே தவிர வெளியில் அவர்கள் தலைகாட்ட முடியாது. அவர்கள் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றாலும் வெளிநாட்டுப் பொலிஸாரின் உதவியோடு அல்லது வெளிநாட்டுத் தூதரகங்களின் உதவியோடு அவர்களை இலங்கைக்கு அழைத்து வருவோம் என குறிப்பிட்டுள்ளார்.

Read More

அனைத்துக் கட்சித் தலைவர்களும் தன்னை பதவி விலகுமாறு கோரினால் அதற்குத் தயார் என சபாநாயகரிடம் ஜனாதிபதி அறிவித்துள்ளார். நாங்கள் அனைவரும் அதற்கு கை உயர்த்த தயாராக இருக்கிறோம் உடனடியாக நீங்கள் பதவி விலகுங்கள். நீங்கள் கூறியது போன்று அதற்கு அனைத்து கட்சி தலைவர்களுக்கும் சந்தர்ப்பத்தை பெற்று தாருங்கள். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் தெரிவிப்பு..!

Read More

மயக்க மருந்துகளுக்கு நிலவும் தட்டுப்பாடு காரணமாக அரசாங்க வைத்தியசாலைகளில் அவசர சத்திரசிகிச்சைகள் மாத்திரமே மேற்கொள்ளப்படுவதாக சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். இதன் காரணமாக புற்றுநோய் மற்றும் விபத்துக்கள் தொடர்பான சத்திரசிகிச்சைகள் மாத்திரமே மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் இன்று கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இக்கலந்துரையாடலில் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக அவர் தெரிவித்தார்.

Read More

உணவு ஒவ்வாமை காரணமாக கொக்கல பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலையொன்றின் 325 ஊழியர்கள் வரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன்படி கொக்கல முதலீட்டு வலயத்திற்குட்பட்ட ஆடைத் தொழிற்சாலையொன்றின் ஊழியர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இவர்கள் சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

பொது இடங்களில் முகக்கவசம் அணிதல் அவசியமில்லை என சுகாதார அமைச்சு மேற்கொண்டுள்ள தீர்மானத்தை உடனே ரத்து செய்யுமாறு விசேட வைத்தியர்கள் சங்கம் கோரிக்கை முன்வைத்துள்ளது. இது தொடர்பில் வெளியிட்ட அறிக்கையிலேயே அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, வெளி இடங்களில் இடம்பெறும் கூட்டங்களிலும் முகக்கவசம் அணிதல் கட்டாயமாக்கப்பட வேண்டும் என குறித்த அறிக்கையில் அவர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் கொரோனா பரவலை தடுப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொள்ளுமாறு விசேட வைத்தியர்கள் சங்கம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

Read More

பிபிசிக்கு பேசிய அமைச்சர் நசீர் அஹமட், தற்போதைய அரசாங்கத்துடன் தங்களை இணைத்து விட்டவர் தமது கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம்தான் என்கிறார். “பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் வீட்டிடுக்கு 2020ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 10ஆம் தேதி மிலிந்த மொரகொடவுடன் (தற்போதைய இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர்) ஒரு தடவை சென்ற முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம், அங்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைச் சந்தித்து தனக்குத் தேவையான அனைத்து ஒப்பந்தங்களையும் செய்து முடித்தார்” என்றும் ஹாபிஸ் நசீர் தெரிவித்தார். இதேவேளை அரசாங்கம் கொண்டுவந்த அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்தத்துக்கு நாடாளுமன்றில் ஆதரவு வழங்குமாறு, நாடாளுமன்ற உறுப்பினர்களான தமக்கு – முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்தான் கூறியதாகவும் ஹாபிஸ் நசீர் குறிப்பிட்டார். முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமுடைய வீட்டுக்கு 2020 ஒக்டோபர் 18ஆம் தேதி பசில் ராஜபக்ஷ வந்து, ஹக்கீமுடன் பேசியதாகவும், அப்போது – தான் உட்பட முஸ்லிம் காங்கிரஸின் 04…

Read More

சமூகத்தில் பரவும் கொவிட் – 19 இன் பாதிப்பு இலங்கையில் தொடர்ச்சியாக இருந்து வருவதனால் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களையும், குழந்தைகளையும் பொது ஆர்ப்பாட்டங்கள் மற்றும் எதிர்ப்பு பிரச்சாரங்களில் பங்கேற்க அழைத்துச் செல்ல வேண்டாம் என்று குழந்தைகள் நல மருத்துவ ஆலோசகர், வைத்தியர் தீபால் பெரேரா பெற்றோரிடம் கேட்டுக்கொண்டுள்ளார். ´கொவிட் வைரசு தொற்று பரவுவதற்கான வாய்ப்புகள் தொடர்ந்து காணப்படுவதால், பெற்றோர் அவதானத்துடன் செயல்பட வேண்டும். பொது ஆர்ப்பாட்டங்கள் மற்றும் எதிர்ப்பு பிரச்சாரங்களுக்கு தங்கள் குழந்தைகளை அழைத்துச் செல்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்´ என்று வைத்தியர் பெரேரா கூறினார். பொரளை லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் *தற்போது சுமார் 10 குழந்தைகள் கொவிட்-19 நோய்க்காக சிகிச்சை பெற்று வருவதாகவும்* அவர் குறிப்பிட்டார். கொவிட் – 19 தொற்று நாட்டில் இருந்து வருகிறது. கொவிட்-19 தொற்று குறித்து தற்போது பலர் மறந்துவிட்டனர். 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கொவிட்-19 தடுப்பூசி போடப்படாததால், பெற்றோர் மற்றும் பெரியவர்களின் கவனக்குறைவான மற்றும் பொறுப்பற்ற…

Read More