Author: admin

பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு, பணம் செலுத்திய பின் டிக்கெட் வழங்காமை, மிகுதி பணம் வழங்காமை, தொந்தரவுகள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் உடனடியாக 1955 என்ற இலக்கதிற்கு அழைத்து* தகவல் தெரிவிக்க முடியும் என தேசிய போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.

Read More

மேல் மாகாணம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் நுளம்பு குடம்பிகளின் பெருக்கம் சடுதியாக அதிகரித்துள்ளதென பூச்சியியல் அதிகாரிகள் சங்கம் தெரிவிக்கின்றது. நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் மூலம் இந்த விடயம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பூச்சியியல் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் நஜித் சுமனசேன கூறியுள்ளார்.  சில பகுதிகளில் 50 பீடா அலகுகளிலும் ஏனைய பகுதிகளில் 20 பீடா அலகுகளிலும் நுளம்பு குடம்பிகளின் பெருக்கம் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.  நோய்கள் பரவாதிருக்க நுளம்பு குடம்பிகள் 05 பீடா அளவில் காணப்பட வேண்டும் என பூச்சியியல் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுட்டிக்காட்டினார்.  மட்டக்களப்பு, மாத்தளை, கண்டி, காலி உள்ளிட்ட பகுதிகளிலும்  நுளம்பு குடம்பிகளின் பெருக்கம் அதிகரித்துள்ளது. மேல் மாகாணம் உள்ளிட்ட பல இடங்களில் முன்னெடுக்கப்படும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையின் இலக்கு உரிய முறையில் எட்டப்படவில்லை என பூச்சியியல் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் தெரிவிக்கின்றார்.  வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 30,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன் அவர்களில் 50…

Read More

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலைகளை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 1 கிலோ கிராம் பால் மாவின் விலையை 200 ரூபாவினால் குறைக்க தீர்மானித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதற்கமைய மே 15 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பால் மாவின் விலைகள் குறைக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Read More

17 இலட்சம் அரச ஊழியர்களை பராமரிப்பதற்காக வருடாந்தம் செலவிடப்படும் 1.4 இலட்சம் கோடி ரூபாவுடன் ஒப்பிடுகையில், அவர்களால் நாட்டுக்கும் மக்களுக்கும் உண்மையான நன்மை கிடைக்குமா என்பதை நாம் சிந்திக்க வேண்டும் என கொழும்பு மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ரவி கருணாநாயக்க தெரிவித்தார். 17 இலட்சம் அரச ஊழியர்கள் உள்ளதாகவும், நாட்டின் வரி செலுத்துவோரின் மொத்த வருமானத்தில் 76% இந்த 17 இலட்சம் பேரை பராமரிப்பதற்கே செலவிடப்படுவதாகவும் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். ஒரு வருடத்தில் 104 டிரில்லியன் ரூபா செலவாகும் என்றும், இலங்கை மின்சார சபை, பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இலங்கை விமானம் மற்றும் வலையமைப்புக் கொள்வனவுச் சபை என்பன கடந்த நான்கு வருடங்களில் 1350 பில்லியன் ரூபா நட்டத்தைச் சந்தித்துள்ளதாகவும் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். இந்த பணத்தை சேமித்திருந்தால் 12 இலட்சம் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் எனவும், நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் 178,000 ரூபாவை சேமித்திருப்பார்கள் எனவும்…

Read More

களுத்துறையில் ஐந்து மாடிக் கட்டிடமொன்றில் இருந்து விழுந்து 16 வயது பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் களுத்துறை தெற்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பிரதான சந்தேகநபரை இன்று (12) களுத்துறை பிரதான நீதவான் நீதா ஹேமமாலி ஹால்பண்தெனிய மே 26ம் திகதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். களுத்துறை தெற்கு, இசுரு உயன, இலக்கம் 63 இல் வசிக்கும் தனுஷ்க கயான் சஹபந்து என்பவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இலக்கம் 402, களுத்துறை, பிரதான வீதி, நாகொடையில் அமைந்துள்ள சிசிலியன் வோக் ஹோட்டலுக்குப் பின்னால் உள்ள புகையிரதப் பாதையில், இலக்கம் 115, சனசுமவில் வசிக்கும் டிஹாரா நிர்மானி என்ற மாணவியின் மரணம் தொடர்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டு 48 மணித்தியாலங்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டார். சந்தேகநபருக்கு சொந்தமான 94,000 ரூபா பணம், வங்கி அட்டைகள் மற்றும் வீட்டு சாவிகள் என்பன பொலிஸாரால்…

Read More

சீமெந்து விலை அடுத்தவாரம் குறைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எவ்வாறிருப்பினும், அடுத்தவாரம், சீமெந்து மூடை ஒன்றின் விலையை, குறிப்பிடத்தக்க அளவில் குறைக்க எதிர்பார்ப்பதாக, சீமெந்து உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை, வீட்டுக்கடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், சீமெந்துக்கான கேள்வி தற்போது 50 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாக சீமெந்து உற்பத்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதன் காரணமாக, நாட்டின் முன்னணி சீமெந்து உற்பத்தி நிறுவனம் ஒன்று, தமது நான்கு தொழிற்சாலைகளில், மூன்றை மூடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சந்தையில், சீமெந்து மூடை ஒன்று 2,750 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

Read More

உத்தியோகத்தர்களை பாராளுமன்ற குழுக்களுக்கு அழைப்பதன் மூலம் எவ்வாறு கடமை முகவரகங்களில் பணியாற்ற முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார். இன்றைய பாராளுமன்ற அமர்வின் போதே பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்திருந்தார். மேலும், பாராளுமன்ற குழுக்களுக்கு அதிகாரிகளை அழைப்பதற்கு குறிப்பிட்ட வேலைத்திட்டம் தயாரிக்கப்பட வேண்டுமென அவர் இதன்போது குறிப்பிட்டிருந்தார்.

Read More

திருகோணமலையில் இருந்து 800 கிலோமீற்றர் தொலைவில் வங்காள விரிகுடாவைச் சூழவுள்ள கடற்பகுதியில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை “மொகா” (Mocha) புயலாக உருவாகி இன்று (12) மாலை மிகவும் தீவிரமான சூறாவளியாக உருவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த அமைப்பு நாளை (14) பிற்பகலில் தென்கிழக்கு பங்களாதேஷ் மற்றும் வடக்கு மியான்மார் கரையோரத்தை கடக்கப் போகிறது என்றும் குறித்த திணைக்களம் கூறுகிறது.

Read More

கிளிநொச்சில் பாடசாலை வகுப்பறையில் மாணவியொருவரின் குடிநீர்ப் போத்தலில் சிறுநீர் கலந்து வைக்கப்பட்டுள்ளது. இதனை அறியாத மாணவி அதனை பருகியுள்ளார். கிளிநொச்சி நகரிலுள்ள முன்னணி கலவன் பாடசாலையொன்றில் இந்த அதிர்ச்சி சம்பவம், கடந்த 9ஆம் திகதி நடைபெற்றுள்ளது. தரம் 10 வகுப்பறையில் இந்த சம்பவம் நடந்தது. மாணவர் தலைவராக செயற்படும் மாணவியொருவர், வகுப்பறையில் மிக கண்டிப்பாக செயற்படுபவர் என பெயர் பெற்றவர். அவரது கண்டிப்பினால், மாணவர்கள் சிலர் அதிருப்தியடைந்துள்ளனர். நேற்று முன்தினம் மாணவிகள் பாடமொன்றுக்காக வகுப்பறைக்கு வெளியில் சென்றுள்ளனர். மாணவர்கள் மாத்திரம் வகுப்பறையில் இருந்தனர். மாணவர் தலைவி மீண்டும் வகுப்பறைக்கு திரும்பிய பின்னர், தனது குடிநீர் போத்தலில் இருந்த நீரை பருகியுள்ளார். அதன் வித்தியாசமான தன்மை காரணமாக சந்தேகமடைந்து, குடிநீர் போத்தலை ஆசிரியையிடம் கொண்டு சென்றார். குடிநீரின் நிறம் மாறியுள்ளதுடன், குடிநீர் அளவும் அதிகரித்திருந்ததாக மாணவி சந்தேகம் வெளியிட்டுள்ளார். குடிநீரை விரலால் தொட்டு தனது நாக்கில் வைத்து ஆசிரியை பரிசோதித்தார். அவருக்கும் சந்தேகம்…

Read More

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் பொது மக்களுக்கு விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. அந்த அறிவிப்பில், கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக *தமது அலுவலகத்திற்கு வருகை தருவதற்கு முன்னர், பொதுமக்கள் முன் பதிவுகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளது.* அலுவலகத்தில் ஏற்படும் நெரிசலைத் தவிர்க்கவும், சேவைகள் சிறப்பாக வழங்கப்படுவதை உறுதி செய்யவும் மேற்கண்ட நடவடிக்கை திணைக்களத்தினால் எடுக்கப்பட்டுள்ளது. முன் பதிவுகள் மேற்கொள்ளாது திணைக்களத்துக்கு வருகை தருபவர்களுக்கு அலுவலகத்திற்குள் நுழைவதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. எனவே கடவுச்சீட்டுக்காக விண்ணப்பிக்க வேண்டியவர்கள் அலுவலகத்திற்குச் செல்வதற்கு முன்னர் முன் பதிவுகளை மேற்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Read More