Author: admin

புனித ஹஜ் பயண ஏற்பாடுகள் அமைப்பினருக்கும் சுற்றாடல்துறை அமைச்சர் நஸீர் அஹமட்டிற்கும் இடையில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. அமைச்சு அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில், இந்தமுறை ஹஜ் பயண ஏற்பாடுகளைச் செய்வது குறித்தும், அதில் ஏற்பட்டுள்ள தடைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக புனித ஹஜ் யாத்திரைக்கு இலங்கையிலிருந்து எவரும் செல்லவில்லை. இந்நிலையில், இந்தமுறை 1,585 பேருக்கு ஹஜ் கடமையை நிறைவேற்ற வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடி உள்ளிட்ட சில விடயங்களால், பயண கட்டணங்களை டொலரில் செலுத்த வேண்டியுள்ளதாகவும் அந்த அமைப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர். அரச அனுமதியுடன் குறித்த நடவடிக்கைகளை எடுப்பது குறித்து இந்த சந்திப்பின் போது அவதானம் செலுத்தப்பட்டதாக சுற்றாடல் அமைச்சரின் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Read More

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட 429 சுற்றிவளைப்புகளில் 27,000 லீற்றர் பெற்றோல் மற்றும் 20,000 டீசல் மற்றும் 10,000 லீற்றர் மண்ணெண்ணெய்யுடன் 137 பேர் கைது செய்யப்பட்டதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். சட்ட விரோதமாக பதுக்கி வைக்கப்பட்டுள்ள எரிபொருள் அல்லது 3ம் தரப்பினரால் எரிபொருள் விற்பனை செய்வது தொடர்பான தகவல்களை பொதுமக்கள் 118, 119, அல்லது 1997 ஆகிய இலக்கங்களுக்கு வழங்க முடியும் என அமைச்சர் விஜேசேஜார மேலும் தெரிவித்தார்.

Read More

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம்தற்போது குற்றப் புலனாய்வு பிரிவினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. மே 9ஆம் திகதி காலிமுகத்திடல் மற்றும் கொள்ளுபிட்டி பகுதிகளில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பிலேயே முன்னாள் பிரதமரிடம் இவ்வாறு வாக்குமூலம் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் பல அரச மட்ட அதிகாரிகளிடமும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், அதில் சிலர் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Read More

இலங்கையில் மே – 9 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளுக்காக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட சிலருக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டு அவர்களது கடவுச் சீட்டுக்களை நீதிமன்றில் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. எனினும், இதுவரை அவர்கள் கடவுச் சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்கவில்லை என நேற்று ( 25) அறிவிக்கப்பட்டது. சட்ட மா அதிபர் சார்பில் இந்த விசாரணைகளை மேற்பார்வை செய்யும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் அய்ஷா ஜினசேன இதனைக் கோட்டை நீதிவான் திலின கமகேவின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார். மே 9 ஆம் திகதி அலரி மாளிகையில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர்களான பவித்ரா வன்னி ஆராச்சி, ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, காஞ்சன ஜயரத்ன , நாமல் ராஜபக்ஷ, ரோஹித்த அபே குணவர்தன, சி.பி. ரத்நாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான சஞ்ஜீவ எதிரிமான்ன, சம்பத் அத்துகோரள ஆகியோருக்கும் ரேனுக பெரேரா ஆகிய 9 பேருக்கும் நீதிமன்றம் வெளிநாடு…

Read More

எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக பொருளாதார மத்திய நிலையங்களுக்கு கிடைக்கப்பெறும் மரக்கறிகள் 50 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி ,எதிர்வரும் நாட்களில் மரக்கறிகளின் விலைகள் மேலும் அதிகரிக்கும் என வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். எரிபொருள் இன்மையினாலும், அதன் அதிகரிப்பு காரணமாகவும் போதியளவான மரக்கறிகள் கிடைக்கப்பெறுவதில்லை. மேலும் ,மரக்கறிகளின் விலை அதிகரிப்பால் பொருளாதார மத்திய நிலையங்களுக்கு வரும் நுகர்வோரின் தொகையிலும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் குறிப்பிடுகின்றனர்.

Read More

பரீட்சையின் போது சகோதரனுக்கு பதிலாக ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டவரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்வி பொது சாதாரண தர பரீட்சை கடந்த திங்கட்கிழமை ஆரம்பமாகி நடைபெற்றுவரும் நிலையில் அம்பாறை – கல்முனை வலயக்கல்வி பணிமனைக்குட்பட்ட பாடசாலை ஒன்றிலே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த தனிப்பட்ட பரீட்சார்த்தி தூர இடமொன்றில் இருந்து வருகை தந்துள்ளதுடன், சமயபாட பரீட்சையை சகோதரனுக்கு பதிலாக எழுதியதுடன் தனது அடையாள அட்டையின் புகைப்படத்தை மாற்றியுள்ளமை விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது. அத்துடன் இச்சம்பவத்தில் ஒரு முக தோற்றமுடைய இரண்டு சகோதரர்களும் தத்தமது அடையாள அட்டையில் மாற்றம் செய்து இந்த ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன் 32 வயதுடைய தனது சகோதரனுக்கு பதிலாக 28 வயதுடைய தம்பி முறையான சகோதரனே இவ்வாறு பரீட்சை எழுதி சிக்கியுள்ளார்….

Read More

எரிபொருள் விலையேற்றத்திற்கு ஏற்ப நெடுஞ்சாலைகளில் இயங்கும் சொகுசு பஸ்களின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) இன்று அறிவித்துள்ளது. சொகுசு நெடுஞ்சாலை பேருந்துகளின் கட்டணம் 19.49% அதிகரித்துள்ளது என்று NTC தெரிவித்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று பிற்பகல் 01.00 மணி முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக NTC மேலும் தெரிவித்துள்ளது. *திருத்தப்பட்ட விலைகள் பின்வருமாறு:* *கொழும்பு – மாத்தறை: ரூ. 1,210 கடவத்தை – காலி : ரூ. 1,000* *கொழும்பு – எம்பிலிப்பிட்டிய: ரூ. 1,680* *கொழும்பு – வீரகெட்டிய : ரூ. 1,550* *கொழும்பு – மொனராகலை : ரூ. 2, 420* *மகும்புர – அக்கரைப்பற்று : ரூ. 3,100*

Read More

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கை பணியாளர்களால் மாதாந்தம் நாட்டிற்கு அனுப்பப்படுகின்ற டொலர் தொகை, 250 மில்லியன் அமெரிக்க டொலராக குறைவடைந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. நாட்டிற்கு அனுப்பப்படும் டொலர் தொகை துரிதமாக அதிகரிக்கப்பட வேண்டும் என பணியகத்தின் சர்வதேச விவகாரங்களுக்கான மேலதிக பொது முகாமையாளர் மங்கள ரந்தெனிய தெரிவித்துள்ளார். அதற்கான பாரிய பொறுப்பு இலங்கை பணியாளர்களுக்கு இருப்பதாகவும் அவர் கூறினார். வங்கிகள் ஊடாக நாட்டிற்கு டொலர்களை அனுப்பும் இலங்கை பணியாளர்களுக்கு பல்வேறு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.

Read More

71 தடவைகள் தான் பிரதமர் பதவியை நிராகரித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று மாலை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், 52 நாள் சதி அரசாங்கம் உள்ளிட்ட ஜனநாயக நெறிமுறைகளுக்கு முரணான அனைத்து சம்பவங்களிலும் நான் உறுதியுடன் எதிர்த்துப் ​போராடியுள்ளேன். அதன் காரணமாக பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு எனக்கு 71 தடவைகள் அழைப்பு விடுக்கப்பட்டும் அதனை நான் நிராகரித்துள்ளேன். பதவிக்கு ஆசைப்பட்டு அரசியல் செய்வதைப் பார்க்கிலும் நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்காக அரசியல் செய்வதையே நான் விரும்புகின்றேன் என்றும் சஜித் பிரேமதாச தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

Read More

க.பொ.த சாதாரண தர பரீட்சை நிறைவடைந்ததன் பின்னர் பேருந்து சேவையில் இருந்து விலகுவதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன இதனைத் தெரிவித்தார். சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கப்பம் கோருபவர்கள் பேருந்துகளுக்கு எரிபொருள் கோரியதையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More