Author: admin

எதிர்வரும் 24 மணிநேரத்திற்கு பல பகுதிகளில் மண்சரிவு அபாய எச்சரிக்கையை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ளது. இதன்படி, காலியின் பத்தேகம மற்றும் யக்கலமுல்ல பிரதேச செயலகங்களுக்கும், களுத்துறையின் புலத்சிங்கள மற்றும் பாலிந்தநுவர பிரதேச செயலகங்களுக்கும், இரத்தினபுரி, எலபாத்த மற்றும் குருவிட்ட பிரதேச செயலகங்களுக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையை அண்மித்த பகுதிகளில் குறைந்த வளிமண்டல அமுக்கத்தை மேற்கோள்காட்டி, கடும் மழைக்கான சிவப்பு எச்சரிக்கையையும் திணைக்களம் விடுத்துள்ளது.

Read More

தெற்காசியாவின் மிக உயர்ந்த கோபுரமான தாமரைக்கோபுரம், எதிர்வரும் 15ஆம் திகதியன்று திறக்கப்படும். ​பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக, பொதுமக்களும் தாமரைக்கோபுரத்துக்கு செல்லலாம். உள்நுழைவு கட்டணம் ரூ.500 முதல் 2,000 ரூபாயாகும். சுற்றுலாத்துறையினருக்கு 20 அமெரிக்க டொலர்கள் அறவிடப்படும்.

Read More

மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு கையொப்பமிடப் போவதில்லை என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சட்டமா அதிபர் ஊடாக உயர்நீதிமன்றத்துக்கு, இன்று (31) அறிவித்தார். போதைப் பொருள் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு குற்றவாளிகளுக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2019ஆம் ஆண்டு தீர்மானித்திருந்தார். அந்த தீர்மானத்தை இரத்து செயய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுக்கள், நீதியரசர்களான விஜித் மல்லல்கொட, எல்.டி.பி. தெஹிதெனிய மற்றும் முர்து பெர்னாண்டோ ஆகியோரடங்கய குழாம் முன்னிலையில், இன்று (31) பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன்போது, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே, ஜனாதிபதி ரணிலின் மேற்குறிப்பிட்ட தீர்மானத்தை அறிவித்தார். இவ்விடயம் குறித்து, சட்டமா அதிபரால், ஜனாதிபதியிடம் வினவப்பட்ட போது, மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு தான் கையெழுத்திடப் போவதில்லை என்று ஜனாதிபதி தெரிவித்தாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் மன்றுக்கு அறிவித்தார். இது குறித்த மனுக்கள், உயர்நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு…

Read More

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் ஆண்டுக்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்ட ஓகஸ்ட் மாதத்துக்கான முதன்மைப் பணவீக்கம் 64.3% ஆக உயர்ந்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளி விவரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த பணவீக்கம் ஜூலை மாதத்தில் 60.8 % ஆக காணப்பட்டிருந்த நிலையிலேயே ஓகஸ்ட்டில் 64.3% ஆக உயர்ந்துள்ளது. ஜூலை மாதம் 90.9% ஆக இருந்த உணவுப் பணவீக்கம் ஓகஸ்ட் மாதத்தில் 93.7% ஆகவும் ஜூலையில் 46.5% ஆக இருந்த உணவு அல்லாத பணவீக்கம் 50.2% ஆகவும் அதிகரித்துள்ளது என்று திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. உணவுப் பொருட்களின் அதிகரிப்பு 0.83% ஆகவும் உணவு அல்லாத பொருட்கள் 1.62% ஆகவும் அதிகரித்ததுள்ளது.

Read More

மூன்று மாதங்களாக சம்பளம் வழங்கப்படாமையால், லுணுவில நோத் சீ தொழிற்சாலை ஊழியர் சங்கத்தினால், கடற்றொழில் அமைச்சின் பிரதான நுழைவாயிலை முற்றுகையிட்டு இன்று (31) ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கடற்றொழில் அமைச்சின் கீழ் இயங்கும் லுனுவில பிரதேசத்தில் அமைந்துள்ள மீன்பிடி வலைகளை உற்பத்தி செய்யும் நோத் சீ தொழிற்சாலையின் ஊழியர்களே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Read More

அமெரிக்காவில் குரங்கம்மை நோய்க்கு முதல்முறையாக ஒருவர் உயிரிழந்துள்ளார். டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்தவர் உயிரிழந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. குரங்கம்மை நோய்க்கு இதுவரை உலகம் முழுவதும் 15 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து 98 நாடுகளில் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், இதில் 60 சதவீதம் அமெரிக்காவிலும், 38 சதவீதம் ஐரோப்பாவிலும் பதிவாகி உள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

Read More

2021-2022 ஆம் கல்வியாண்டில் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை கோரும் நடவடிக்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என ஆணைக்குழுவின் தலைவர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Read More

நிலவும் மழையுடனான வானிலை காரணமாக பொல்கொல்ல நீர்த்தேக்கத்தில் 04 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக நீர்த்தேக்கத்திற்கு கீழ் ஆற்றுப்பகுதியை பயன்படுத்துபவர்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Read More

மே 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் போது, ​​நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள், சொத்துக்கள் மற்றும் அலுவலகங்களைத் தாக்கி, தீ வைத்து எரித்த சம்பவங்களுடன் தொடர்புடைய ஒரு பெண் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்களான அருந்திக பெர்னாண்டோ, விதுர விக்கிரமநாயக்க, தாரக பாலசூரிய, ரோஹித குணவர்தன மற்றும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோரின் சொத்துக்களை சேதப்படுத்தியமை தொடர்பில் குறித்த சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் 26, 44, 61, 53, 35, 32, 58 வயதுடைய லிஹினியாகம, ஹொரணை, கேகாலை மற்றும் இரத்மலானை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு, கேகாலை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவு, ஹொரணை மற்றும் தங்கொடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

எரிபொருள் விநியோகத்தில் நிலவிய தடங்கல் சீராக்கப்பட்டுள்ளது. அமைச்சர் காஞ்சன விஜயசேகர தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். கடந்த நான்கு நாட்களாக மேலதிக எரிபொருள், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இனி நாளாந்தம் 4 ஆயிரம் மெட்ரிக் தொன் டீசல் மற்றும் மூவாயிரம் மெட்ரிக் தொன் பெற்றோல் என்பன இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விநியோகிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதேநேரம் மேலும் 35 ஆயிரம் மெட்ரிக் தொன் 92 ஒக்டென் பெற்றோலைக் கொண்ட கப்பல் ஒன்றிலிருந்து தரையிறக்கும் பணிகள் நேற்றிரவு ஆரம்பிக்கப்பட்டன எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

Read More