Author: admin

கட்டணம் செலுத்தாத அரச நிறுவனங்களுக்கு எதிர்காலத்தில் நீர் விநியோகத் துண்டிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. மேலும், 90 நாட்களுக்குப் பின்னர் அரச நிறுவனங்களுக்கும் தாமதக் கட்டணம் அறிமுகப்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் பியல் பத்மநாத தெரிவித்துள்ளார். இலங்கையில் மொத்த நீர் நுகர்வோர் எண்ணிக்கை 29 இலட்சம் ஆகும். அந்த எண்ணிக்கையில் பெரும்பாலானோர் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக மாதாந்திர கட்டணத்தில் 50% செலுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Read More

சிறு குழந்தைகளின் போஷாக்கு மட்டத்தை அதிகரிப்பதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்று திட்டமிடப்பட்டுள்ளதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ் முன்பள்ளிச் சிறார்களுக்கு உயர் போஷாக்குடன் கூடிய பிஸ்கட் வகைகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அடுத்த மாதம் முதல் இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

Read More

வெசாக் விடுமுறைக்காக கிராமங்களுக்குச் சென்ற மக்கள் மீண்டும் கொழும்பு திரும்புவதற்கு போதிய பஸ்களை சேவையில் ஈடுபடுத்துமாறு பிராந்திய அலுவலகங்கள் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை அலுவலகங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. இதேவேளை, தனியார் பேருந்துகள் இன்று (07) வழமை போன்று சேவையில் ஈடுபடும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். இதேவேளை, வெசாக் விடுமுறையை முன்னிட்டு அனுராதபுரம் மற்றும் பதுளைக்கு இரண்டு விசேட புகையிரதங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக புகையிரத போக்குவரத்து பிரதி பொது முகாமையாளர் குறிப்பிட்டார்.

Read More

களுத்துறை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் பின்புறம் உள்ள ரயில் பாதைக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்ட சிறுமியின் மரணம் தொடர்பில் பெண் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றுமொருவரைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. களுத்துறை ரயில் பாதையை அண்டிய ஐந்து மாடிகளைக் கொண்ட தற்காலிக தங்குமிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்த பாடசாலை மாணவியின் நிர்வாண சடலம் கண்டு பிடிக்கப்பட்டிருந்தது. நாகொட பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சிறுமி மற்றுமொரு பெண் மற்றும் இரண்டு ஆண்களுடன் களுத்துறை பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு வந்து இரண்டு அறைகளை வாடகைக்கு எடுத்துள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சிறிது நேரம் கழித்து பெண் ஒருவரும் ஆணும் ஹோட்டலை விட்டு வெளியேறியதாகவும், உயிரிழந்த சிறுமியுடன் இருந்த நபரும் ஹோட்டலை விட்டு வெளியேறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பின்னர், விடுதிக்கு பின்புறம்…

Read More

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பதினைந்தாவது பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் மே மாதம் 13 ஆம் 14 ஆம் திகதிகளில் நடத்தப்படுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பட்டமளிப்பு விழா நிகழ்வுகள் பல்கலைக்கழக மாநாட்டு மண்டபத்தில் உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபுவக்கர் தலைமையில் வேந்தர் கௌரவ பாயிஸ் முஸ்தபாவின் முன்னிலையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இம்முறை பட்டமளிப்பு விழா நிகழ்வுகள் இரண்டு நாட்களுக்கு ஐந்து அமர்வுகளாக நடத்துவதற்கு ஏற்பாடாகியுள்ளன. முதல் அமர்வில் கலை கலாசார, தொழில்நுட்ப பீடங்களைச் சேர்ந்த 395 மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்படவுள்ளன. இரண்டாவது அமர்வில் முகாமைத்துவ – வர்த்தக பீடத்தினைச் சேர்ந்த 371 மாணவர்களும், மூன்றாவது அமர்வில், இஸ்லாமிய கற்கைகள் அரபு மொழி பீடத்தைச் சேர்ந்த 380 மாணவர்களும் பட்டங்களை பெறவுள்ளனர். இரண்டாம் நாள் அமர்வில் (நான்காவது அமர்வில்) பிரயோக விஞ்ஞானங்கள், பொறியியல் ஆகிய பீடங்களைச் சேர்ந்த 332 மாணவர்கள் பட்டங்கள் பெறவுள்ளனர். ஐந்தாவது அமர்வில் கலை கலாசார, முகாமைத்துவ – வர்த்தக…

Read More

கொவிட் தொற்றினால் நேற்று முன்தினம் (5) மூவர் உயிரிழந்துள்ளனர். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று (6) வெளியிடப்பட்ட கொவிட் மரண அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, நேற்றைய தினம் 8 பேருக்கு புதிதாக கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அத்துடன், 13 பேருக்கு நேற்றுமுன்தினம் (5) கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

2022 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்களின் பரீட்சையை விரைவில் முடிக்க பரீட்சை திணைக்களம் எதிர்பார்க்கிறது. பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மற்றும் விடைத்தாள்களின் தலைமைப் பரீட்சார்த்திகளும் அந்த நடவடிக்கைகளில் பங்கேற்பார்கள். ஒவ்வொரு பாடத்துக்கும் தொடர்புடைய வினாத்தாள்களுக்கு மதிப்பெண்கள் வழங்கும் முறை குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றன. அதன்பின், எதிர்வரும், 15ம் திகதி முதல், பரீட்சை விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், 15 நாட்களுக்குள் பணிகளை முடிக்க எதிர்பார்க்கிறது.

Read More

தொடர்ச்சியாக இரசாயனங்கள் கிடைக்காமை மற்றும் மேலதிக நேர கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டமையினால் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. டெங்கு நுளம்புக் கட்டுப்பாட்டுக்கான புகை விசுறும் செயற்பாடுகள் பிற்பகல் நான்கு மணிக்குப் பின்னர் மேற்கொள்ளப்பட வேண்டும். எனினும், சாரதிகளின் மேலதிக நேர கொடுப்பனவுகள் மற்றும் எரிபொருள் கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டமையினால் புகை விசுறும் நடவடிக்கைகளை மேற்கொள்வதில் தயக்கம் காட்டுவதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் சுகாதார அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரச நிறுவனங்களில் டெங்கு நுளம்பு ஒழிப்பு குழுக்களை ஸ்தாபிக்குமாறு அரசாங்கம் சுற்றறிக்கைகளை வெளியிட்டிருந்த போதிலும், இதுவரையில் அவ்வாறான குழுக்கள் ஸ்தாபிக்கப்படவில்லை என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது. தற்போது நிலவும் மழை நிலைமையை அடுத்து, நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்து நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன சுட்டிக்காட்டியுள்ளார்.

Read More

எதிர்வரும் 29ஆம் திகதி ஆரம்பமாகும் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கான நேர அட்டவனை வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய பரீட்சைகள் 10 நாட்களுக்கு நடைபெறும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. மே 29ஆம் திகதி முதல் ஜூன் 8ஆம் திகதி வரை பரீட்சைகள் நடைபெறும்.

Read More

பிரித்தானிய உள்ளூராட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற இலங்கைப் பெண்! பிரித்தானியாவில் இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தலில் செவெனோக்ஸ் பிராந்தியத்தில் போட்டியிட்ட இலங்கைப் பெண்ணான தினுஷா மனம்பேரி வெற்றிபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய பசுமைக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி, உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட்ட அவர், செவெனோக்ஸ் மாவட்ட சபைக்குத் தெரிவான முதல் இலங்கைப் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். அவருடன் போட்டியிட்ட லாரா மாக்ஸ்டன், மார்க் லிண்டோக் ஆகியோரும் இந்தத் தேர்தலில் வெற்றிபெற்றுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Read More