Author: admin

நாட்டில் கடந்த மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற கலவரத்துடன் தொடர்புடைய மேலும் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹொரணை நகரசபை தலைவரின் வீட்டிற்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 44 வயதுடைய இவர் ஹொரணை பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன், குருநாகல் உள்ளுராட்சி மன்ற தலைவரின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான கடை மீது தாக்குதல் நடத்தி சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் 37 வயதுடைய தொரடியாவ பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது அமர்வு இன்று (திங்கட்கிழமை) சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ளது. இன்று தொடங்கும் அமர்வு, ஒக்டோபர் 7ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த நிலையில் இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் தொடர்பான விரிவான அறிக்கை இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது. மனித உரிமைகள் ஆணையாளர் இது தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட 46/1 தீர்மானம் தொடர்பிலான முன்னேற்றம் உள்ளிட்ட இலங்கையின் மனித உரிமை நிலைமைகளை கண்காணித்தல், அறிக்கை செய்தல், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பிலான விடயங்கள் அந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த அமர்வில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் நீதி அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ தலைமையிலான குழு ஜெனீவாவிற்கு சென்றுள்ளது. மேலும் இன்றைய அமர்வில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி உரையாற்றவுள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

மின் கட்டணத்தை செலுத்தத் தவறினால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜாதிக ஹெல உறுமயவின் முன்னாள் தலைவருமான ஓமல்பே சோபித தேரருக்கு மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, இன்று (11) பதிலளித்துள்ளார். மின் அதிகரிப்பு காரணமாக கட்டணத்தை செலுத்த முடியாது என்று ஓமல்பே சோபித தேரர், சனிக்கிழமை (10) எம்பிலிபிட்டியவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்திருந்தார். தமது பிரதேச மக்களுக்காக இரவு 10 மணிவரை மின்விளக்குகளை ஒளிரச் செய்வதாகவும் 58 ஆயிரம் ரூபாயாக இருந்த மின் கட்டணம் தற்போது 3 இலட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். மின்சாரசபை தமது நட்டத்தை ஈடு செய்யவே கட்டணத்தை அதிகரித்துள்ளதாகவும் இதற்கு காரணம் அரசியல் செய்யும் திருடர்களே என்றும் அவர்களே இந்த நட்டத்தை ஏற்படுத்தியதாகவும் சுட்டிக்காட்டினார். தாங்கள் திருடவில்லை என்றும் திருடகளின் செயல்களுக்கு தாங்கள் ஏன் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்ட அவர், மின்…

Read More

கடந்த இரண்டு மாதங்களில் இலங்கையின் மின்சாரத் தேவை குறைந்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார். கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், வாராந்தம் 48 முதல் 49 மில்லியன் அலகுகளாக இருந்த வாராந்த மின் நுகர்வு 38 முதல் 39 மில்லியன் அலகுகளாகவும், வார இறுதி மின் நுகர்வு 33 முதல் 34 மில்லியன் அலகுகளாகவும் குறைவடைந்துள்ளதாக சுட்டிக்காட்டினார். வழமையாக அமுல்படுத்தப்படும் மின்வெட்டு தவிர்ந்த ஏனைய மின் உற்பத்தி முறைகளை மக்கள் தெரிவு செய்தமையே மின் நுகர்வு குறைந்தமைக்கான காரணம் என்றும் தெரிவித்தார். இதேவேளை, எதிர்வரும் ஒக்டோபர் இறுதி வாரம் வரையே நிலக்கரி கையிருப்பு போதுமானதாக உள்ளது என்றும் அதற்குள் நிலக்கரி இறக்குமதி செய்யப்படாவிட்டால் நீண்ட நேர மின்வெட்டை சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்திருந்தார். தேசிய மின்கட்டமைப்புக்கு 900 மெகாவோட் மின்சாரத்தை வழங்கும் நுரைச் சோலை லக்விஜய அனல் மின்நிலையத்தின் 3 மின்பிறப்பாக்கிகளில் 2 பிறப்பாக்கிகள் தற்போது இயங்கிவருவதாக…

Read More

இலங்கைக்கு மேலும் 60 மில்லியன் டொலர்களை உதவியாக வழங்குவதாக சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் நிர்வாகி சமந்தா பவர் தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் குறிப்பிட்டார். நேற்றையதினம் அறிவிக்கப்பட்ட 40 மில்லியன் டொலர்களுக்கு மேலதிகமாக 20 மில்லியன் டொலர்கள் வழங்கப்படும் என்று குறிப்பிட்டார். இலங்கை மக்கள் எதிர்கொள்ளும் அவசர மற்றும் இடைநிலைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் ஸ்திரநிலைக்குத் திரும்புவதற்கும் ஆதரவளிக்க அமெரிக்கா அர்ப்பணிப்புடன் செயற்படும் என்றார்.

Read More

பல்வேறு விடயங்களை முன்வைத்து உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மீண்டும் ஒருமுறை ஒத்திவைக்க அரசாங்கம் தயாராகி வருவதாக சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் செயற்பாடு (பஃப்ரல்) குற்றஞ்சுமத்தியுள்ளது. தேர்தலை ஒத்திவைக்கும் நடவடிக்கைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தயாராகி வருவதாக பஃப்ரலின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார். இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் உள்ளிட்ட தேர்தலை ஒத்திவைப்பதற்கு தாம் ஆதரவாக இல்லை என்று தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜி புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார். தேர்தலை ஒத்திவைப்பதன் மூலம் மக்களின் இறைமைக்கு பாரிய சேதம் ஏற்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு நம்புவதாகவும் 20ஆம் திகதிக்குப் பிறகு உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த ஆணைக்குழுவுக்கு அதிகாரம் கிடைக்கும் என்றும் குறிப்பிட்டார். 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் ஏற்கெனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Read More

பாராளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய, கைதி ஒருவரை பார்வையிடச் சென்ற போது அவரை சிறைச்சாலை அதிகாரிகள் தடுத்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு, வெலிக்கடை சிறைச்சாலைக்கு சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நடிகை தமிதா அபேரத்னவை சந்திப்பதற்காக வெலிக்கடை சிறைச்சாலையின் பெண் பிரிவுக்கு சனிக்கிழமை (10) சென்ற ஹரிணி எம்.பியை, 45 நிமிடங்கள் சிறைச்சாலை வளாகத்துக்குள் செல்ல சிறைச்சாலை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என எம்.பி தெரிவித்திருந்தார். நடிகை தமிதாவை சந்திக்க சென்றமையை தடுத்ததன் மூலம் குறித்த அதிகாரிகளால் பாராளுமன்ற உறுப்பினருக்கான தனது சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் ஹரிணி எம்.பி குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்தே வெலிக்கடை சிறைச்சாலை நிர்வாகத்திடம் இருந்து, குறித்த அறிக்கையை சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய கோரியுள்ளார். ஜூலை மாதம் ஜனாதிபதி செயலகத்துக்குள் பலவந்தமாக பிரவேசித்து பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை மற்றும் சட்டவிரோதமாக ஒன்றுகூடியமை போன்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நடிகை தமிதா எதிர்வரும் 14ஆம்…

Read More

உக்ரைனின் அதிவேக பதில் தாக்குதல்களுக்கு மேலும் பலன் கிடைத்துக் கொண்டிருக்கும் நிலையில், அந்நாட்டின் கிழக்குப் பகுதிகளில் உள்ள சில முக்கிய நகரங்களில் இருந்து ரஷ்யப் படைகள் பின்வாங்கின. இது குறித்துக் கூறிய உக்ரைன் அதிகாரிகள், குபியான்ஸ்க் நகருக்குள் தங்கள் படையினர் சனிக்கிழமை நுழைந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். உக்ரைனில் உள்ள ரஷ்ய படையினருக்கு பொருள்களை விநியோகம் செய்வதற்கான முக்கிய மையமாக இந்த நகரம் விளங்கி வந்துள்ளது. அருகில் உள்ள இஸ்யும் நகரில் இருந்து தங்கள் படையினர் பின்வாங்கியிருப்பதாகவும் திரும்ப ஒன்று சேரும் நடவடிக்கைக்காகவே இப்படிச் செய்திருப்பதாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மூன்றாவதாக, டானட்ஸ்க் போர் முனையில் தங்கள் படைகளை வலுப்படுத்துவதற்காக பாலாகியா என்ற இன்னொரு நகரில் இருந்தும் தங்கள் படைகள் பின்வாங்கியிருப்பதாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது. தற்போது தாங்கள் முன்னேறிய இடங்களை உக்ரைன்படைகள் தக்க வைத்துக்கொண்டால், கடந்த ஏப்ரலில் யுக்ரேன் தலைநகர் கீயவ் அருகில் இருந்து ரஷ்யா பின்வாங்கியதற்குப் பிறகு உக்ரைனுக்கு…

Read More

லண்டனில் ஃப்ரையரி கோர்ட்டுக்கு மேலே உள்ள பால்கனியில், கார்ட்டர் கிங் ஆப் ஆம்ஸ் சென்று மூன்றாம் சார்ல்ஸ் அரசராகும் பிரகடனத்தை வாசித்தார்.

Read More

வெளிநாட்டுக்கு சென்று வேலை செய்வதற்கான இலங்கையர்களின் தேவை வேகமாக அதிகரித்து வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் மாத்திரம் 2 இலட்சத்து 8,772 இலங்கையர்கள் வெளிநாடுகளில் வேலைக்காக சென்றுள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது. இவ்வாறு வெளிநாடு செல்பவர்களில் பெரும்பாலானவர்கள் ஆண்களாவர். மேலும் ஒரு இலட்சத்து இருபத்தி ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் வெளிநாடு சென்றுள்ளனர். இதேவேளை, இவ்வருடத்தில் இதுவரை 2,858 இலங்கையர்கள் தென்கொரியாவில் வேலைக்காக சென்றுள்ளனர். மேலும், இந்த ஆண்டு இறுதிக்குள் மொத்தம் 5,000 தொழிலாளர்களை கொரியாவுக்கு வேலைக்கு அனுப்ப எதிர்பார்த்திருப்பதாக பணியகம் தெரிவித்துள்ளது.

Read More