Author: admin

புயல் காற்று மற்றும் வெள்ளத்தினால் இதுவரை 10 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை (31) அறிக்கை ஒன்றில், மொத்தம் 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 9 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் DMC தெரிவித்துள்ளது.

Read More

வவுனியா கணேசபுரம் 8 ம் ஓழுங்கை பகுதியில் கிணற்றிலிருந்து நேற்று (30.05.2022) இரவு 7.30 மணியளவில் சிறுமியின் சடலம் மீட்கப்பட்டதினையடுத்து அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது. 16 வயதுடைய ராசேந்திரன் யதுசி என்ற சிறுமி தாய் தந்தையினையினை இழந்த நிலையில் மாமனாரின் அரவணைப்பில் வசித்து வசந்த நிலையில் நேற்று மதியம் தனியார் கல்வி நிலையம் சென்ற நிலையில் மாலை 5.30 வரை வீடு திரும்பவில்லை. இதனையடுத்து குறித்த சிறுமியினை தேடிய உறவினர்கள் அவரைக் கண்டுபிடிக்க முடியாமையால் நெளுக்குளம் பொலிஸில் முறைப்பாடு செய்தனர். முறைப்பாட்டிற்கு அமைவாக நெளுக்குளம் பொலிசார் உறவினர்கள் மற்றும் அயலவர்கள் துணையுடன் குறித்த சிறுமியினை தேடும் நடவைடிக்கையை முன்னெடுத்தனர். இதன்போது அப் பகுதியில உள்ள மக்கள் நடமாட்டம் அற்ற பகுதி ஒன்றில் உள்ள கிணற்றில் இரவு 7.30 மணியளவில் குறித்த சிறுமி சடலமாக கண்டு பிடிக்கப்பட்டார். உறவினர்களால் நெளுக்குளம் பொலிசாருக்கு வழங்கிய தகவலுக்கு அமைய வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்,…

Read More

“உயிரூட்டிய பாடசாலைக்கு உரமூட்டும் வேலை திட்டத்தின் “கீழ் அம்பாறை மாவட்டம் கல்முனை கமு/ அஸ்-ஸுஹரா வித்தியாலயத்துக்கு முதலாம் கட்டமாக ஒரு தொகுதி பாடசாலைக்கு தேவையான உபகரணங்கள் கையளிக்கப்பட்டது. “உயிரூட்டிய பாடசாலைக்கு உரமூட்டும் வேலை திட்டத்தின் “கீழ் முதலாம் கட்டமாக ஒரு தொகுதி புதிய கதிரைகள் மற்றும் மேசைகள் திருத்தியமைக்கப்பட்ட மாணவர்களுக்கான கதிரைகள்,மேசைகள், ஆசிரியர்களுக்கான கதிரைகள், வைட் வோர்ட் (White Board) மற்றும் Indicate Board  (சுட்டிகாட்டி பெயர் பலகை) தளபாடங்கள் என்பன கமு/ கமு/ அஸ்-ஸுஹரா வித்தியாலயத்தின் அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜீதியா அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு பாடசாலையின் பழைய மாணவர்களின் ஏற்ப்பாட்டில் இன்று (29)பிற்பகல் பாடசாலையில் இடம்பெற்றது இதன் போது பாடசாலை அபிவிருத்தி குழுவினரும் கலந்து கொண்டனர் . இத்திட்டத்திற்க்கு பாடசாலையின் பழைய மாணவர்கள்,நலன் விரும்பிகளின் பங்களிப்பில் சுமார் 7 லட்சம் ரூபாய் செலவில் குறித்த வேலைத்திட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டத்தில்,கல்முனை கல்வி வலயத்தின் கீழுள்ள கல்முனை…

Read More

சமீப காலமாக இலங்கையில் பல இடங்களில் கொலை சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. அந்தவகையில், களுத்துறை தெற்கு – ஹினட்டியன்கல பகுதியில் வீடொன்றிலிருந்து தந்தையும் மகளும் உயிரிழந்த நிலையில் நேற்றிரவு(30) சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். நவகத்தேகம முல்லேகம பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரனும் சகோதரியும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும், தெமடகொட புகையிரத நிலையத்தில் உள்ள உணவகம் ஒன்றில் பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Read More

அடுப்புகளை இயக்குவதற்கு தேவையான டீசல் மற்றும் எரிவாயு பற்றாக்குறையால் சுமார் 2000 பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சுமார் 100,000 வேலைகள் இழக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

Read More

“எல்லாவற்றிற்கும் காரணம் இந்த போதைப் பொருள், என் பிள்ளையை பறிகொடுத்து விட்டேன்” : கண்ணீர் மல்க சிறுமி ஆயிஷாவின் தந்தை. ஆயிஷாவிற்கு நடந்தது இன்னொரு பிள்ளைக்கு நடக்கவே கூடாது. போதைப்பொருள் வீட்டிற்கும் நாட்டிற்கும் கேடு. இன்றோடு விட்டுவிடுங்கள் இல்லையேல் அது உங்களை கொள்ளாமல் விடாது.

Read More

கடந்த 27ஆம் திகதி காணாமல் போயிருந்த சிறுமி பாத்திமா ஆயிஷா, மறுநாள் தமது வீட்டுக்கு அருகில் உள்ள சதுப்பு நிலம் ஒன்றில் வைத்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார். அன்னாரின் ஜனாஸா இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் அதில் கலந்துகொண்டனர்.

Read More

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இங்கிலாந்து பிரதமர் பொரிஸ் ஜோன்சனுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். “இன்று பொரிஸ் ஜோன்சன் உடனான கலந்துரையாடலின் போது, இலங்கையின் நிலைமை குறித்து நான் அவருக்கு விளக்கினேன். குறிப்பாக காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது மற்றும் ஏற்றுமதி சார்ந்த திறந்த பொருளாதாரமாக இலங்கை மாறுவதற்கு உதவுவது போன்ற துறைகளில் எமக்கு ஆதரவளிப்பதாக அவர் உறுதியளித்தார்” என்று கலந்துரையாடலுக்குப் பின்னர் பிரதமர் ட்வீட் செய்தார்.

Read More

கொழும்பு கோட்டை பஸ்டியன் மாவத்தை பஸ் டிப்போவில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 30 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் பேருந்து நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து அவர்கள் அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த மேலும் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் பின்வருமாறு.

Read More

போலி கடவுச்சீட்டு வழக்கில் சசி வீரவங்ச தாக்கல் செய்த பிணை கோரிக்கை மனு நாளை வரை பிற்போடப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் மனைவியான சஷி வீரவங்ச கொழும்பு நீதவான் நீதிமன்றில் சற்றுமுன்னர் முன்னிலையாகியிருந்தார். போலி ஆவணங்களை கொண்டு, கடவுச்சீட்டை தயாரித்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்த வழக்கில், சஷி வீரவங்சவுக்கு 2 வருட சிறைத்தண்டனையும், ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதித்து கடந்தவாரம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, கொழும்பு நீதிவான் நீதிமன்றினால் வழங்கப்பட்ட உத்தரவை சவாலுக்கு உட்படுத்தி தமது சட்டத்தரணி ஊடாக சஷி வீரவங்ச மேன்முறையீடு செய்திருந்தார். தாக்கல் செய்த மேன்முறையீடு தொடர்பான பரிசீலனையை இன்று (30) வரை கொழும்பு மேல் நீதிமன்றம் ஒத்திவைத்திருந்த நிலையில், சஷி வீரவங்ச இன்று நீதிமன்றில் முன்னிலையானார். இதன்போது, அவர் தாக்கல் செய்திருந்த பிணை கோரிக்கை மனு நாளை வரை பிற்போடப்பட்டது.

Read More