Author: admin

புதன்கிழமை (17) தெற்கு தாய்லாந்தில் கிட்டத்தட்ட 17 இடங்களில் குண்டு வெடிப்புகள் மற்றும் தீ விபத்துகள் ஏற்பட்டதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர் என உள்ளூர் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். குண்டுவெடிப்புகள் மற்றும் தீ வைப்புத் தாக்குதல்கள் நள்ளிரவுக்குப் பிறகு நடந்துள்ளதோடு , மூன்று மாகாணங்களில் உள்ள வசதியான கடைகள் மற்றும் எரிவாயு நிலையத்தை குறிவைத்து இச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளது என காவல்துறை மற்றும் இராணுவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதல்களுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. மலேசியாவுடனான எல்லையில் உள்ள தெற்கு தாய்லாந்தில் உள்ள மாகாணங்கள் பல தசாப்தங்களாக நீடித்த கிளர்ச்சியைக் கண்டுள்ளன, இதில் பட்டானி, யாலா, நாரதிவாட் மற்றும் சோங்க்லாவா ஆகிய மாகாணங்களை இலக்கு வைத்தே தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2004 ஆம் ஆண்டு முதல் மோதலில் 7,300 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் என்று வன்முறையைக் கண்காணிக்கும் டீப் சவுத் வாட்ச் குழு தெரிவித்துள்ளது. 2013 இல் தொடங்கிய சமாதானப்…

Read More

வேலைவாய்ப்பிற்காக அவசரமாக வெளிநாடு செல்ல எதிர்பார்க்கும் இலங்கையர்களுக்கு கடவுச்சீட்டை வழங்குவதற்காக திங்கட்கிழமை (22) முதல் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் விசேட கவுன்டர் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. புதிய கடவுச்சீட்டைப் பெறுவதற்கு பத்தரமுல்லையில் உள்ள திணைக்கள அலுவலகத்தில் நியமனம் செய்வதற்கு குறைந்தது இரண்டு மாதங்களாவது காத்திருக்க வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் தொழில் நிமித்தம் அவசரமாக வெளிநாடு செல்ல வேண்டிய இலங்கையர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். இதனால், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கோரிக்கைக்கு அமைய, இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக புதிய கவுன்டர் ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

Read More

உள்ளூர் சந்தையில் முட்டை மற்றும் கோழி ஆகியவற்றின் விலை அதிகரிப்பு காரணமாக முட்டை மற்றும் கோழி ஆகியவற்றின் விற்பனை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தேசிய விலங்கு பண்ணையாளர்கள் ஒன்றிய அழைப்பாளர் சுஜீவ தம்மிக்க தெரிவித்துள்ளார். சந்தையில் வெள்ளை முட்டை ஒன்றின் விற்பனை விலை 63 ரூபாவுக்கும், சிவப்பு முட்டை 68 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. கோழித் தீவனம் மற்றும் புன்னாக்கு ஆகியவற்றின் விலை 15 ரூபாவில் இருந்து 115 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பால் கறக்கும் பசுக்களுக்கு வழங்கப்படும் சிறப்பு வகை கால்நடை தீவனம் 35 ரூபா அதிகரிக்கப்பட்டு 85 ரூபாவான விற்பனை செய்யப்படுகிறது. இந்தநிலையில் கால்நடைகளுக்கு வழங்கப்படும் மருந்தை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் தொழில்களை மேற்கொள்வதில் சிரமம் எதிர்நோக்கப்படுவதாக தேசிய விலங்கு பண்ணையாளர்கள் ஒன்றிய அழைப்பாளர் சுஜீவ தம்மிக்க குறிப்பிட்டார்.

Read More

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சிட்ரா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 6 பேர் பிணமாக கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து பொலிசார் அங்கு விரைந்து சென்று பிணங்களை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்காக அங்குள்ள அரசு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். பொலிஸ் விசாரணையில் அவர்கள் 6 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. செரினா பேகம், அவரது மகள்கள் நவீமா அக்தர், ரூபினா பனோ, மகன் ஜாபர் சலீம், மற்றும் உறவினர்கள் நூர்முகமது, ஹபீப் ஆகியோர் என்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் எப்படி இறந்தார்கள் என்பது தெரியவில்லை. தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது கொலை செய்யப்பட்டார்களா என்பது மர்மமாக உள்ளது. பிரேத பரிசோதனை முடிவில் தான் 6 பேரும் எப்படி இறந்தனர் என்பது தெரியவரும் என பொலிசார் தெரிவித்தனர்.

Read More

தலைமன்னார் குருசபாடு கடற்பரப்பில் நேற்று (ஒகஸ்ட் 16) இரவு மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர். சட்டவிரோத குடியேற்றம் மற்றும் பிற வகையான குற்றச் செயல்களைத் தடுக்கும் நோக்கத்துடன், இலங்கை கடற்படையினர் தீவைச் சூழவுள்ள கடல் மற்றும் கரையோரப் பகுதிகள் முழுவதும் வழக்கமான நடவடிக்கைகள் மற்றும் ரோந்துப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பான நடவடிக்கையில், நேற்று ஒகஸ்ட் 16ஆம் திகதி, குருசபாடு அருகே கடலில் சந்தேகத்திற்கிடமான படகை கண்டுள்ளனர். விசாரணையைத் தொடர்ந்து, வேறு நாட்டுக்கு சட்டவிரோதமாக கடல்வழியாக குடியேற முயன்றதாகக் கருதப்படும் 10 பேரை கடற்படையினர் கைது செய்தனர். இரண்டு படகு நடத்துநர்கள் உட்பட நான்கு ஆண்கள், 18 வயதுக்கு மேற்பட்ட இரண்டு பெண்கள் மற்றும் 18 வயதுக்குட்பட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். சந்தேகநபர்கள் பேசாலை, உருமலை, கிளிநொச்சி மற்றும் கந்தளாய் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டு, அவர்கள் தலைமன்னார்…

Read More

இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடா தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள வாழ்த்துக் கடிதத்தில் ஜப்பானிய பிரதமர், இலங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மை உறுதிப்படுத்தப்படுவதை எதிர்பார்த்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை மற்றும் கடன் மறுசீரமைப்பு மற்றும் அனைத்து கடன் வழங்குநர்களிடையே நியாயமான சுமை பகிர்வு ஆகியவற்றுடன் ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் தலைமையின் கீழ் விரைவாக முன்னேற்றம் ஏற்படும் என்று அவர் மேலும் எதிர்பார்க்கிறார். “சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக்” ஒன்றை அடைவதற்கான ஒத்துழைப்பு உட்பட இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவை மேலும் மேம்படுத்துவதற்கு ஜனாதிபதி விக்கிரமசிங்கவுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாகவும் Fumio Kishida மேலும் கூறினார்.

Read More

பெரும் போகத்தில் மக்காச்சோளம் பயிரிடும் விவசாயிகளுக்கு யூரியா உரம் வழங்குவதற்கான ஒன்லைன் பதிவு தொடங்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. www.agrarian.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக விவசாயிகள் பதிவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2022/23 பருவத்தில் சோளம் பயிரிடும் விவசாயிகளுக்கு யூரியா உரத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர பணிப்புரை விடுத்துள்ளார். நெல் பயிரிட்ட விவசாயிகளுக்கு யூரியா உரம் வழங்கப்பட்ட அதே விலையில் அதாவது 50 கிலோ எடை கொண்ட யூரியா மூட்டை 10,000 ரூபாவுக்கு சோள விவசாயிகளுக்கு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

Read More

சிறையில் இருந்தபடியே பல நூறு கோடி ரூபாய் பணத்தை முறைகேடாக வெளிநாடுகளுக்கு பினாமி பெயரில் பரிவர்த்தனை செய்ததாக சுகேஷ்குமார் மற்றும் அவர் மனைவி லீனா மரியா பால் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. குறித்த வழக்கு தொடர்பில் நடிகை ஜாக்குலின் ஃபெர்ணான்டசிடம் இந்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர். ஜாக்குலினிடம் பணப் பரிவர்த்தனை தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. அவருக்கும் சுகேஷ் சந்திரசேகருக்கும் அவர் மனைவி லீனா மரியா பாலுக்கும் உள்ள தொடர்பு குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஜாக்குலின் வங்கிக் கணக்குகளும் ஆராயப்பட்டன. இந்நிலையிலேயே குறித்த சம்பவம் தொடர்பில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றம் சாட்டப்பட்டவராக பெயரிடப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

Read More

இலங்கையில் நடப்பவற்றை உன்னிப்பாக அவதானித்து வருவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். தாய்லாந்து தலைநகர் பேங்கொக்கில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார். எமது அயல் நாடான இலங்கையில் நடப்பவை, இந்தியாவின் பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படும் எந்த வளர்ச்சியாக இருந்தாலும் நாங்கள் மிக கவனமாக அவதானித்து வருகின்றோம் என ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். சீனாவின் யுவான் வாங் 5 கப்பல் இலங்கைக்கு வந்துள்ள நிலையில், பதில் நடவடிக்கையாக இந்தியா ராமேஸ்வரம் பகுதியில் தனது கடற்படையினரின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளதுடன் கண்காணிப்புகளையும் அதிகரித்துள்ளது. மேலும் இந்திய கடற்படையின் உலங்குவானூர்திகள் இலங்கையின் வடக்கில் அமைந்துள்ள இந்தியாவின் தென் பகுதி கடல் எல்லையில் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Read More

இலங்கையில் நடைபெறும் படப்பிடிப்பிற்காக வருகை தந்திருக்கும் இந்திய திரைப்பட நடிகர் மம்முட்டியை இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், இலங்கையின் சுற்றுலாத் தூதுவருமான சனத் ஜயசூரிய சந்தித்துள்ளார். இது தொடர்பில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சனத் ஜெயசூர்யா, ”மூத்த மலையாள நடிகர் மம்முட்டியை சந்தித்தது பெருமையாக இருந்தது. நீங்கள் தான் உண்மையான சூப்பர் ஸ்டார். இலங்கை வந்ததற்கு நன்றி. அனைத்து இந்திய நட்சத்திரங்களையும் நண்பர்களையும் எங்கள் நாட்டை பார்க்க அழைக்க விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Read More