Author: admin

பாரிய ஆர்ப்பாட்டங்களிற்கு மத்தியில் கடந்த மாதம் நாட்டிலிருந்து தப்பிவெளியேறிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அடுத்தவாரம் இலங்கை திரும்பவுள்ளார் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இராஜதந்திர வட்டாரங்கள் கோட்டாபய இலங்கைக்கு வரவுள்ளார் என தெரிவித்துள்ளன என அலிசப்ரி குறிப்பிட்டுள்ளார். உத்தியோகபூர்வமாக எங்களிற்கு அவரது விஜயத்துடன் எந்த தொடர்பும் இல்லை, அவர் இலங்கை பிரஜை அவர் தனது விருப்பத்தின்படி பிரயாணம் செய்யலாம் என அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

Read More

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடுத்த மாதம் டோக்கியோவுக்குச் சென்று ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. பல தசாப்தங்களில் ஏற்பட்டுள்ள மோசமான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான வழியை நாடும் நிலையில், இருதரப்புக் கடன் மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைக்கு, சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட இந்தியப் பெருங்கடல் தீவின் முக்கிய கடன் வழங்கும் நாடுகளை அழைக்குமாறு ஜப்பானை இலங்கை கேட்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “யாராவது முக்கிய கடன் வழங்கும் நாடுகளை அழைக்க வேண்டும், ஜப்பானிடம் அதைச் செய்யுமாறு நாங்கள் கேட்டுக்கொள்வோம்” என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.

Read More

பல்கலைக்கழகங்களுக்கிடையிலான மாணவர் சம்மேளனத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் நான்கு மாணவ செயற்பாட்டாளர்கள் கொழும்பு யூனியன் பிளேஸில் வைத்து வியாழக்கிழமை (18) பிற்பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். கொழும்பு 02 இல் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்ட முதலிகேயே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். வசந்த முதலிகே கொழும்பு எரிவாயு தொழிற்சாலை சந்தியில் வைத்து கைது செய்யப்பட்டதுடன், அவரது மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

Read More

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் திணைக்களம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் 26ஆம் திகதி வரை உயர் தரப்பரீட்சைக்கான விண்ணப்ப படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

Read More

எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) மற்றும் Ceylon Petroleum Storage Terminals Limited (CPSTL) ஆகியவற்றுக்கு எதிராக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (CID) முறைப்பாடு செய்துள்ளார். அமைச்சர் தனது புகாரில், CPC மற்றும் CPSTL இன் நடவடிக்கைகள் குறித்து விசாரணைகளை தொடங்குமாறு CIDக்கு அழைப்பு விடுத்துள்ளார். எரிபொருள் கொள்வனவு, முன்மொழிவுகளை மதிப்பீடு செய்தல், ஆர்டர்கள் வழங்கப்படாமை, சப்ளையர்களைத் தெரிவு செய்தல், கொடுப்பனவுகளில் தாமதம், விநியோக முறைகேடுகள், தனிநபர்களால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Read More

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய மாணவர்களின் ஆர்ப்பாட்ட பேரணி மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைத் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதன்போது சிலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. VIDEO

Read More

முச்சக்கர வண்டிகளுக்கான பயண கட்டணம் மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, முதலாவது கிலோமீற்றருக்காக 120 ரூபாவும், இரண்டாவது கிலோமீற்றருக்காக 100 ரூபாவும் அறவிடப்படவுள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி தொழிற்சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.

Read More

அரசியலமைப்பின் 22வது திருத்தத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 9 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மேற்கூறிய மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Read More

எட்டு யூடியூப் தளங்களை இந்திய மத்திய அரசு இன்று முடக்கியது. முடக்கப்பட்ட யூடியூப் தளங்கள், 114 கோடிக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளதுடன், 85.73 லட்சம் சந்தாதாரர்களை கொண்டுள்ளது. அதன் உள்ளடக்கம் ஊடாக பணமும் ஈட்டப்பட்டு வந்துள்ளதாக உத்தியோகபூர்வ அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 2021 ஆம் ஆண்டின் தகவல் தொழில்நுட்ப சட்டத்துக்கமைய, ஏழு இந்திய யூடியூப் செய்தி தளங்களும், ஒரு பாகிஸ்தான் செய்தித்தளமும் முடக்கப்பட்டுள்ளன. தடைசெய்யப்பட்ட யூடியூப் சேனல்கள், இந்திய அரசால் மதக் கட்டமைப்புகளை சிதைத்தல், இந்தியாவில் மதப் போரைப் பிரகடனம் செய்தல் போன்ற பொய்யானதகவல்களை வெளியிட்டுவந்துள்ளதாக விசாரணைகளில் வெளிவந்துள்ளது. இந்திய ஆயுதப் படைகள் மற்றும் ஜம்மு-காஷ்மீர் போன்ற பல்வேறு விடயங்களில் போலி செய்திகளும் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. “தேசிய பாதுகாப்பு மற்றும் வெளி மாநிலங்களுடனான இந்தியாவின் நட்புறவு ஆகியவற்றின் கண்ணோட்டத்தில் உள்ளடக்கம் முற்றிலும் தவறானது” என்றும் இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Read More

இன்று(18) கொழும்பில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது. பல்வேறு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தே இவ்வாறு பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள போராட்டக்காரர்களை விடுவிப்பது, வாழ்க்கைச் செலவுகளை கொண்டு செல்ல நிவாரணம் வழங்கப்பட வேண்டும் மற்றும் செயலிழந்துள்ள பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை வழமைக்கு கொண்டு வருதல் உள்ளிட்ட விடயங்களை வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

Read More