Author: admin

நாடு முழுவதும் 60 வீதமான எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பின் சில பகுதிகளில் இன்று (29) எரிபொருள் வரிசைகள் குறைவடைந்துள்ள போதிலும், நாட்டின் ஏனைய பகுதிகளில் இன்னும் நீண்ட வரிசைகள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எரிபொருள் பற்றாக்குறையால் பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளமையும் அவதானிக்க முடிவதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Read More

ஜனாதிபதியும், சபாநாயகரும் குறிப்பிட்டது போன்று அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்),அரசாங்க கணக்குகள் பற்றிய குழு (கோபா) ஆகிய குழுக்களுக்கு தலைவர்கள் எதிர்கட்சியில் இருந்து நியமிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு அப்படியே நடைமுறைப்படுத்தப்படுமா என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார். இன்று நாடாளுமன்றில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்து கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர், தற்போது நிலைமை வேறுவிதமாக உள்ளதால் அந்த தீர்மானங்களை மாற்றுவதற்கு ஏதாவது ஏற்பாடுகள் உள்ளதா என எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார். கோப் மற்றும் கோபா குழுக்களின் தலைவர் பதவிகளுக்கு இரான் விக்ரமரத்ன மற்றும் கபீர் ஹாசிம் நியமிக்கப்படுவார்களா என்று மீண்டும் ஒருமுறை கேள்வி எழுப்பினார். அதேபோன்று, கோப் மற்றும் கோபா குழுக்களின் தலைவர் பதவிகளை எதிர்க்கட்சிக்கு வழங்குவதற்காக நிலையியற் கட்டளைகளில் மாற்றம் கொண்டு வரப்படுமா எனவும் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பினார்.

Read More

பல்வேறு காரணங்களால் நியமனம் கிடைக்காத பட்டதாரிகளுக்கு விரைவில் நியமனம் வழங்கப்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர், பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற ரீதியில் வேலையற்ற பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறியுள்ளார். தற்போது வேலையில்லாமல் இருக்கும் 461 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குவதற்கு அமைச்சின் செயலாளர் ஏற்கனவே கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். பொது நிர்வாக அமைச்சின் கீழ் உள்ள திணைக்களங்களில் தற்போது பணிபுரியும் அனைத்து தகுதி வாய்ந்த நபர்களுக்கும் நிரந்தர வேலை வழங்குவது குறித்து அமைச்சின் செயலாளர் ஆராய்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read More

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் இருந்து சட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்ல முற்பட்ட 17 பேர் இன்று (29) பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 15 பேர் சிலாபம் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் இருவர் கிளிநொச்சி பகுதியை சேர்ந்தவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. குறித்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் குழுவொன்று நடமாடுவதாக பருத்தித்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் அவர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணைகளில் அவர் சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக வெளிநாட்டொன்று செல்ல முற்றபட்டதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில், குறித்த அனைவரும் தற்போது பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

Read More

மன்னார் மாவட்டத்தில் இடம் பெறும் கணிய மண் அகழ்வு மற்றும் ஆய்வு நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த கோரியும் மன்னார் தீவுப்பகுதிக்குள் கடற்கரையை அண்டிய பகுதிகளில் அமைக்க திட்டமிடப்பட்டிருக்கு காற்றாலை மின்செயற்திட்டத்தை நிறுத்த கோரியும் பொது அமைப்புக்களால் நாளை திங்கட்கிழமை காலை 8.00 மணிதொடக்கம் விழிப்புணர்வு போராட்டம் இடம்பெறவுள்ளது மன்னார் மாவட்ட சிவில் சமூக அமைப்புக்கள்,மக்கள் பிரதி நிதிகள் சமூக செயற்பாட்டாளர்கள், மீனவ சங்கங்கள், தனியார் பஸ் சேவையினர் உட்பட பலரும் இணைந்து நாளைய தினம் மாபெரும் எதிர்ப்பு நடவடிக்கைகளை மன்னார் பிரதான பஸ் நிலையத்திற்கு முன்பாக மேற்கொள்ளவுள்ளனர் குறித்த போராட்டத்தில் மன்னார் தீவின் எதிர்காலத்தில் அக்கறை உள்ள ஒவ்வொரு பொதுமக்களையும் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்துமாறு பொது அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

Read More

எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள உடன்படிக்கையின் பிரகாரம், இரண்டு மாதங்களுக்கும் மேலாக நீர் கட்டணத்தை செலுத்த தவறிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கான நீர் விநியோகத்தை துண்டிப்பதற்கு பொது நிர்வாக அமைச்சின் செயலாளரினால் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பிரதி பொது முகாமையாளர் குறிப்பிட்டார். ஏற்கனவே நீர் கட்டணத்தை செலுத்தத் தவறிய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்து நிலுவைத் தொகையை வசூலிப்பது குறித்து பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் எழுத்து மூலம் சபாநாயகருக்கு அறிவித்துள்ளதாக தெரிவித்தார்.

Read More

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தை பராமரிக்க சீன நிறுவனத்திற்கு 12 வருடங்களாக செலுத்திய பணத்தில் நாடு மற்றுமொரு அனல் மின் நிலையத்தை நிர்மாணித்திருக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். குறித்த மின் நிலையத்தை பராமரிக்க இலங்கையின் பொறியியலாளர்களும் தொழில்நுட்ப அதிகாரிகளும் இல்லையா என கேள்வி எழுப்பிய அவர், சீன நிறுவனத்தை இன்னும் தக்கவைத்துள்ள காரணத்தால் நுகர்வோர் சுமையை எதிர்நோக்குவதாக தெரிவித்தார். இன்று திங்கட்கிழமை நாடாளுமன்றில் மின் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பான சபையை ஒத்திவைக்கும் பிரேரணையை முன்வைத்து உரையாற்றும் போதே முஜிபுர் ரஹ்மான் மேற்கண்டவாறு தெரிவித்தார். மக்கள் அத்தியாவசியப் பொருட்களை உட்கொள்ள முடியாமல் மரத்தில் இருந்து விழுந்த மனிதனைப் போன்ற நிலையில் இருக்க 64% மின்சாரக் கட்டணம் அதிகரித்துள்ள நிலையில் ஏழை மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவருவதாக சுட்டிக்காட்டினார். முஜுபுர் ரஹ்மான் அவர்கள், ஏழை மக்களுக்கு நிவாரணம் தருவதாகச் சொன்னாலும், அரசால் முன்மொழிவோ, வேலைத்திட்டமோ முன்வைக்கப்படவில்லை…

Read More

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் 49 சதவீத உரிமையை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மேலும், 51 சதவீத உரிமையை அரசாங்கம் வைத்துக்கொள்ளும் என விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

Read More

தனக்கு எந்த பதவியும் வேண்டாம் எனக் கூறும் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவுக்கு எதிராக ஏன் பிரச்சனை செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அ.தி.மு.க வில் சசிகலாவையும், டி.டி.வி.தினகரனையும் இணைக்க ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துள்ளார். இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் விடுத்துள்ள அழைப்பு அவரின் தனிப்பட்ட நிலைப்பாடு என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதேவேளை வாக்குறுதி வழங்கியபடி கல்விக் கடன் இரத்து, பெண்களுக்கு மாத உதவித்தொகை போன்ற திட்டங்களை தி.மு.க. அரசு செயல்படுத்தவில்லை என சுட்டிக்காட்டினார். இந்த நிலையில் 80 கோடியில் கருணாநிதிக்கு பேனா சின்னம் அமைப்பது அவசியமா என எடப்பாடி பழனிசாமி கேள்வியெழுப்பினார்.

Read More

சவூதி அரேபியாவின் துணைப் பிரதமரும், பாதுகாப்பு அமைச்சருமான;முடிக்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மான், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடமிருந்து எழுத்துமூல கடிதமொன்றை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பெற்றுக்கொண்டதாக சவூதி ஊடகமொன்று தெரிவித்துள்ளது இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை ஊக்குவிப்பதற்காகவும், அவற்றை அனைத்துத் துறைகளிலும் மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்போது வெளிவிவகார அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் பின் அப்துல்லா சார்பாக பிரதி வெளிவிவகார அமைச்சர் வலீத் பின் அப்துல்கரீம் அல்-குரைஜி இந்த கடிதத்தை பெற்றுக்கொண்டமை குறிப்பிடதக்கது.

Read More