Author: admin

பொலன்னறுவை, அரலகங்வில நெல் களஞ்சியசாலையில் 4000 கிலோகிராம் நெல் சம்பவம் தொடர்பில் அலட்சியமாக இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள, அம்பாறை மற்றும் பொலன்னறுவை பிராந்திய முகாமையாளர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் நீல் டி அல்விஸுக்கு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் குறித்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. பழுடைந்துள்ள நெல் கையருப்பு அம்பாறை பிராந்தியத்துக்கு சொந்தமானது என்பதால், இது தொடர்பாக, ஆறு நாட்களுக்குள் உடனடி அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அம்பாறை பிராந்திய முகாமையாளருக்கு, சபையின் தலைவர் பணிப்புரை விடுத்துள்ளார். விசாரணைகள் நிறைவடையும் வரை குறித்த அதிகாரிகளின் கட்டாய விடுமுறை தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு சொந்தமான கிடங்குகளில் உள்ள பழைய நெல்லை கால்நடை உணவுக்காக விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு 2020ஆம் ஆண்டில் அனைத்து பிராந்திய முகாமையாளர்களுக்கும் நெல் சந்தைப்படுத்தல் சபை அறிவுறுத்தியிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 2015ஆம் ஆண்டு கொள்வனவு செய்யப்பட்ட 4,000…

Read More

ராஜபக்ஷ ஆட்சியின் செயற்பாடுகளே நாட்டை பாரிய நெருக்கடி நிலைமைக்கு இட்டுச் சென்றுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். ராஜபக்ஷர்கள் மாத்திரமல்ல, அவர்களைச் சுற்றியிருக்கும் அரசாங்கப் பிரதிநிதிகள், அவர்களது நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளுமே நிலவும் நெருக்கடிகளுக்குக் காரணம் என்று சந்திரிக்கா குமாரதுங்க நிகழ்வு ஒன்றின்போது குற்றம் சுமத்தியுள்ளார். 2005 ஆம் ஆண்டின் பின்னர் ஆட்சிக்கு வந்த முன்னாள் ஜனாதிபதி, ராஜபக்ஷவினர் இந்த நாட்டையும் அதன் சொத்துக்களையும் தமக்கு சொந்தம் என நினைத்தனர். அவர்கள் தாம் விரும்பும் விதத்தில் செயற்பட முடியும் என்றும், அவர்கள் செய்யும் ஒவ்வொரு மோசமான வேலையிலிருந்தும் தப்பித்துவிடலாம் என்றும் அவர்கள் நினைத்தார்கள் என்றும் சந்திரிகா தெரிவித்துள்ளார். இந்தநிலையில் தமது ஆட்சியின் நடவடிக்கைக்கு எதிராக யாராவது ஆட்சேபனை தெரிவித்தால், அவர்கள் கொல்லப்பட்டனர் என்றும் சந்திரிக்கா சுட்டிக்காட்டினார்

Read More

சேவை மூப்பு பாதிக்காத வகையில், அரச ஓய்வூதியதாரர்களுக்கு அதிகபட்சமாக 05 வருடங்களுக்கு உள்ளூரில் சம்பளமற்ற விடுமுறை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பொதுச் சேவைகள், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சராக, பிரதமரினால் இதற்கான அமைச்சரவைப் பத்திரத்திற்கு இன்று(06) அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்த திட்டத்திற்கான பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

Read More

கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக கிட்டத்தட்ட 300 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக கூறப்படும் செய்தி பொய்யானது என்று இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பில் இன்றையதினம் (06) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள கூட்டுத்தாபனம் மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெளிவுபடுத்தியுள்ளது. கட்டணங்களைச் செலுத்துவதற்கான கால அவகாசம் நேற்று (05) காலை 10.30 மணி வரை நீடிக்கப்பட்டிருந்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், தனியார் பௌசர் உரிமையாளர்களும் கூட்டுத்தாபனமும் தாமதமின்றி எரிபொருளை விநியோகிப்பதற்கான இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கூட்டுத்தாபனம் அறிமுகப்படுத்திய புதிய கட்டண முறையின் காரணமாக நாடு முழுவதும் உள்ள சுமார் 300 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. புதிய கட்டண முறையாக, முற்பதிசெய்யும் தினத்துக்கு முதல் நாள் இரவு 9.30 மணிக்கு முன்னர் பணத்தைச் செலுத்த வேண்டும் என, கூட்டுத்தாபனம் அறிவித்திருந்தது.

Read More

துணியால் சுற்றப்பட்டு, தனது மார்பகங்களுடன் அணைத்து பொம்மையொன்றை வைத்திருந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தனது பிள்ளைக்கு கொடுப்பதற்கு பால் தேவை, பால்பக்கற் வாங்குவதற்கு தேவையான பணத்தை திரட்டிக்கொள்ளும் நோக்கிலேயே, அந்தப் பெண், பொம்மையொன்றை துணியால் சுற்றிவைத்துக்கொண்டு, ரயில்களில் பிச்சையெடுத்துள்ளார். அவ்வாறு பிச்சை எடுத்துக்கொண்டிருந்த போதே, மேற்படி பெண்ணை ரயில் பாதுகாப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். குழந்தையை துணியால் சுற்றியிருந்த விதம் மற்றும் அவ்வாறு இருந்தால், குழந்தைக்கு மூச்சு எடுப்பதில் சிரமம் ஏற்படும் என்பதை உணர்ந்த ரயில் பாதுகாப்புப் பிரிவினர். அந்தப் பெண்ணை அழைத்துச் சென்று விசாரணைக்கு உட்படுத்தினர். அதன்​போதே, மேற்படி விவகாரம் அம்பலமானது. கடுமையாக எச்சரித்த பாதுகாப்பு பிரிவினர். அப்பெண்ணை அங்கிருந்து அனுப்பிவைத்துள்ளனர். கோட்டை ரயில் நிலையத்திலேயே இந்த சம்பவம் கடந்தவாரம் இடம்பெற்றுள்ளது.

Read More

திருமண வீட்டுக்குச் சென்று அங்கு விருந்துபசாரத்தில் பங்கேற்ற பாடசாலை மாணவர்கள் ஐவருக்கு முழந்தாள் தண்டனை வழங்கப்பட்டு, அந்த ஐவரையும் பொலிஸில் ஒப்படைக்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. வெலிகம நகர சபையின் மண்டபத்தில் நடைபெற்ற திருமண விருந்துபசாரத்துக்கு அழைக்காத விருந்தாளிகளாக சென்றிருந்த பாடசாலை மாணவர்கள் ஐவருக்கே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. நகர சபைக்கு அண்டியதாக வசித்துவரும், 12, 13, 16 மற்றம் 17 வயதுகளைச் சேர்ந்தவர்களுக்கே இவ்வாறு முழந்தாள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. நகர சபையின் மேயரின் அறிவுறுத்தலுக்கு அமைய, அங்குவந்த பொலிஸார், பல மணிநேரத்துக்குப் பின்னர், அந்த ஐந்து மாணவர்களையும் மீட்டுள்ளனர். சம்பவத்துக்கு முகங்கொடுத்த மாணவர்கள் கருத்து தெரிவிக்கையில், “ இந்தத் திருமண வைபவத்துக்காக கூடுதலான பேர் சமைத்தனர். அதில் மீதப்படும் உணவை உட்கொள்வதற்காக சென்றோம். இதற்கு முன்னரும் இவ்வாறு சென்றிருக்கின்றோம். சமையல் செய்யும் மாமா ஒரு​வரை எங்களை இன்று (06) அழைத்து சாப்பிட்டுவிட்டுச் செல்லுமாறு கூறினார். நாங்கள் ஐவரும் சென்​றபோது, அங்கிருந்த ஒருவர்…

Read More

2022 ஆம் ஆண்டுக்கான பாடசாலை முதலாம் தவணை நாளையுடன் முடிவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி, அரச மற்றும் அரச அங்கீகரிக்கப்பட்ட தனியார் துறையின் கீழ் இயங்கும் அனைத்து பாடசாலைகளின் முதலாம் தவணை நாளையுடன் முடிவடைகிறது. இதேவேளை, பாடசாலையின் இரண்டாம் தவணை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (13) ஆரம்பமாகவுள்ளது.

Read More

எதிர்வரும் நான்கு நாட்களில் மீனின் விலைகள் 50 வீதத்தினால் குறைவடையுமென மெனிங் சந்தை மீன் மொத்த வியபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள போதும், எதிர்காலத்தில் விலை குறைவடையுமென குறித்த சங்கத்தின் செயலாளர் ஜயந்த குரே தெரிவித்துள்ளார். இதேவேளை, கோதுமை மா கிலோ ஒன்றின் விலை 450 ரூபாவை எட்டியுள்ள நிலையில், பாண் இறாத்தல் ஒன்றின் விலையினை 350 ரூபாவாக அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படுமென உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். கோதுமை மா பற்றாக்குறை காரணமாக நாடளாவிய ரீதியில் பல்வேறு விலைகளில் பாண் விற்பனை செய்யப்பட்டு வருவதுடன், பாண் விற்பனையில் தொடர்ந்தும் நட்டம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அத்துடன், கோதுமை மா பிரச்சினைக்கு வர்த்தக அமைச்சு உரிய தீர்வினைக் காணத் தவறியுள்ளதாக உணவக உரிமையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதேவேளை, பாண் விலை அதிகரிப்பானது நாட்டின் போஷாக்கின்மை நிலைமையினை மேலும் அதிகரிக்கலாமென ரஜரட்ட ஊழல் எதிர்ப்பு சங்கம் தெரிவித்துள்ளது.…

Read More

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார். எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்பியுள்ளார். ஒவ்வொரு நாட்டுக்கும் சென்று இலங்கையை அவமானப்படுத்தி கொண்டிருப்பதைக் காட்டிலும் அவர் இலங்கைக்கு வந்தது நல்லது. நாட்டை நாசம் செய்துவிட்டு தப்பியோடிய கோட்டாபய நாடு திரும்பும்போது அவருக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டு அரச செலவில் தங்க வைக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவித்தார். எனவே, நாட்டையும் நாட்டுப் பொருளாதாரத்தையும் நாசம் செய்த கோட்டாவை கைது செய்து தண்டனை வழங்க வேண்டும் என்றார்.

Read More

கிழக்கு மாகாணத்தில் சீன அரசின் பல்வேறு திட்டத்தின் முதற்கட்டமாக கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் அனைத்து பீடங்களையும் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட 150 மாணவர்களுக்கு ஏழு மாதங்களுக்கான அன்பளிப்பு தொகையான 4.3 மில்லியன் ரூபாய் நிதியை சீன தூதுவரினால் இன்று செவ்வாய்க்கிழமை பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கணகசிங்கத்திடம் கையளிக்கப்பட்டது. சீன மக்கள் குடியரசின் புலமைப்பரிசில் வழங்கும் விழா மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழக சுகாதார பாதுகாப்பு அறிவியல் பீட மண்டபத்தில் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கணகசிங்கம் தலைமையில் இன்று நடைபெற்றது. இந் நிகழ்விற்கு பிரதம அதிதிகளாக சீன மக்கள் குடியரசின் தூதுவர் குய் ஜென்ஹாங் மற்றும் திருமதி.குய் ஜென்ஹாங் உள்ளிட்ட சீன தூதுவர் காரியாலய அதிகாரிகள் கலந்துகொண்டனர். சீன மக்கள் குடியரசின் ஊடாக கிழக்கு மாகாணத்தில் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் அதன் முதற்கட்டமாக கல்விசார்ந்த வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கும் வகையில், சீன மக்கள் குடியரசின் இலங்கை…

Read More