Author: admin

இலங்கைக்கு கடன் வழங்கியவர்கள், கடன் மறுசீரமைப்புக்கான ஒப்புதலையும் விருப்பத்தை வெளிப்படுத்தியவுடன், சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கான முதலாவது நிதித்தொகையை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் இலங்கை, கடன் வழங்குனர்களுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அன்றுமுதல் கடன் மறுசீரமைப்புக்கான இணக்கப்பாட்டையும் ஒப்புதலையும் இலங்கை, கடன் வழங்குனர்களிடம் இருந்து பெற ஆரம்பிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். கடன் மறுசீரமைப்பு தொடர்பாக கடன் வழங்குநர்களின் ஒப்புதல் முக்கியமான விடயமாக கருதப்படுகிறது. இது சர்வதேச நாணய நிதியதிடம் இருந்து இலங்கை உதவியைப் பெற்றுக் கொள்வதற்கான முன்னுரிமையளிக்கப்பட்ட விடயமாக உள்ளது எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

Read More

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிக்கிரியை நிகழ்வில் கலந்துகொள்வதற்காக பிரித்தானியா சென்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட குழுவினர் இன்று காலை நாடு திரும்பியதுடன் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தனர். விமான நிலையத்திற்கு பொறுப்பான கடமை அதிகாரி இதனை உறுதிப்படுத்தியுள்ளார். துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமான சேவையில் காலை 8.23 ​​மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் மேற்கொள்ளும் முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயம் இதுவாகும். அவரது வருகையையொட்டி, விமான நிலைய வளாகத்தின் உள்ளேயும் வெளியேயும், வளாகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன

Read More

புதிய மின் கட்டண திருத்தம் காரணமாக மத வழிபாட்டுத் தலங்கள் எதிர்நோக்கும் பாரிய சிரமங்கள் குறித்துத் தெரிவித்து மகாநாயக்க தேரர்களுக்கு ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். இதுவரை மத வழிபாட்டுத் தலங்களுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகை மின் கட்டண முறையை ரத்து செய்திருப்பது வருத்தமளிப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று திங்கட்கிழமை சுமார் 400 இக்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். நேற்று மாலை மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக ஒலி பெருக்கி மூலம் எச்சரித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் கைது நடவடிக்கைக்கு அஞ்சி அங்கிருந்து சென்று, இன்று செவ்வாய்க்கிழமை காலை மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக மீனவர்களை நோக்கி கற்களை கொண்டு வீசி விரட்டியுள்ளனர். மேலும் விசைப்படகில் இருந்த மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படை மீன்பிடி வலைகளை வெட்டி கடலில் வீசியுள்ளனர். நடுக்கடலில் மீனவர்கள் மீன் பிடிக்க விடாமல் இலங்கை கடற்படை தொடர்ந்து விரட்டியதால் மீனவர்கள் மீன் பிடிக்க முடியாமல் கரை திரும்பியுள்ளதுடன், படகு ஒன்றுக்கு…

Read More

உடன் அமுலுக்கு வரும் வகையில் தின்பண்டங்களின் விலைகளை 10-13 வீதத்தால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தின்பண்ட உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இரண்டு முக்கிய மூலப்பொருட்களின் விலை குறைவடைந்துள்ளதால் விலைகளை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனி ஒரு கிலோவுக்கு 40 ரூபாவினால் குறைந்துள்ளதுடன், தாவர எண்ணெய்யின் விலை ஒரு கிலோ சுமார் 250 ரூபாவினால் குறைந்துள்ளது. மேலும் தற்போதைய பொருளாதார நெருக்கடியால் பொது மக்கள் அதிக விலைக்கு தின்பண்டங்களை கொள்வனவு செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read More

யூரியா 50 கிலோ உர மூடையின் விலை 10 ஆயிரம் ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக உர இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். அதற்கமைய, மூடையொன்றின் புதிய விலை 29,000 ரூபா என இறக்குமதியாளர்கள் குறிப்பிட்டனர். மேலும், 50 கிலோகிராம் தேயிலை உர மூடையின் விலையும் 1000 ரூபாவினால் குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் உர இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Read More

நாடாளுமன்றத்தின் மாதாந்த மின் கட்டணம் 60 இலட்சம் ரூபாயை அண்மித்துள்ளமை தெரியவந்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும மற்றும் மின்சக்தி எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஆகியோருக்கு இடையில் நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற கேள்வி பதிலின்போதே இந்த விடயம் குறித்து தெரியவந்துள்ளது. இதன்போது நாடாளுமன்றத்தின் மாதாந்த மின்சாரக் கட்டணம் 60 இலட்சம் ரூபாய் எனவும் அதனைக் குறைக்கும் வகையில் சூரிய மின்கலங்கள் மூலம் மின்சாரம் பெறும் முறை தயாரிக்கப்பட வேண்டுமெனவும் அஜித் மான்னப்பெரும குறிப்பிட்டார். அதற்குப் பதிலளித்த அமைச்சர் காஞ்சன விஜேசேகர, நாடாளுமன்றத்தில் 60 இலட்சம் ரூபாய் மின்சாரக் கட்டணத்தை செலுத்துவதற்குப் பதிலாக சூரிய ஒளி மின்சார அமைப்பை ஏற்படுத்துவதே முக்கியம் என குறிப்பிட்டார். எவ்வாறாயினும் அதற்கான பணத்தை தமது அமைச்சு வழங்க முடியாது எனவும் தேவைப்பட்டால் தொழில்நுட்ப ஆதரவை வழங்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

Read More

செப்டம்பர் 2021 முதல் ஓகஸ்ட் 2022 வரை, 53 நாடுகளில் உணவுப் பாதுகாப்பு குறித்த புதிய அறிக்கையை உலக வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி, உலகில் உணவுப் பணவீக்கம் அதிகம் உள்ள 10 நாடுகளில் இலங்கை நான்காவது இடத்தில் உள்ளது. இலங்கையில் உணவுப் பணவீக்கம் 91 சதவீதமாக உள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021 செப்டெம்பர் மாதத்தில் இலங்கையில் உணவுப் பணவீக்கம் 9.9 சதவீதமாக இருந்ததுடன் கிட்டத்தட்ட ஒரு வருடத்தில் 90.9 சதவீதமாக பத்து மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து உணவுப் பணவீக்கம் வேகமாக அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே அதிக உணவுப் பணவீக்கம் உள்ள நாடுகளின் பட்டியலில் சிம்பாப்வே முதலிடத்தில் உள்ளது. லெபனான் மற்றும் வெனிசுலா முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளன. துருக்கி, ஈரான், அர்ஜென்டினா, மால்டோவா, எத்தியோப்பியா, ருவாண்டா ஆகிய நாடுகள் இந்தப் பட்டியலில் முதல் 10 இடங்களில் உள்ள மற்ற நாடுகள்…

Read More

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவை நாட்டின் பிரதமராக நியமிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குழுவொன்று ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும், குறித்த கட்சியின் பிரிதொரு குழு தினேஷ் குணவர்தன தொடர்ந்தும் பிரதமராக இருக்க வேண்டும் என்று கூறி வருவதாக அறியமுடிகிறது. எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்வது தொடர்பில் எந்தவிதமான அறிவிப்பையும் வெளியிடப் போவதில்லை எனவும், மீண்டும் அரசியலில் பிரவேசிப்பது தொடர்பில் அவர் எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

Read More

பஞ்சாபில் தனியார் பல்கலைக்கழக மாணவி ஒருவரே தமது சக மாணவிகளை ஆபாசமான வகையில் வீடியோ எடுத்து தமது ஆண் நண்பருக்கு அனுப்பியதாகவும், அவை இணையத்தில் வைரலானதாகவும் பஞ்சாபில் உள்ள சண்டிகர் பல்கலைக்கழகத்தில் பெரும் போராட்டம் வெடித்தது. இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவிகள் சிலர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர் என செய்திகளில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் காவல்துறையினர் அதை மறுத்துள்ளனர். பஞ்சாபின் மொஹாலி நகரின் அருகே உள்ள சண்டிகர் பல்கலைக்கழகம் எனும் தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் நேற்று நள்ளிரவு மாணவர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் குறித்து இன்று அதிகாலை 3 மணியளவில் காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவி ஒருவர், விடுதியில் சக மாணவிகள் குளிக்கும்போது வீடியோ எடுத்து, அவற்றை இமாச்சல பிரதேசம் மாநில தலைநகர் சிம்லாவில் உள்ள தமது ஆண் நண்பருக்கு அனுப்பியதாகவும், அவை வைரலானதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தைக் கண்டித்து மாணவர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில்…

Read More