Author: admin

ஜெட்சன் ஒன் மின்சார பறக்கும் கார் முழுமையாக விற்று தீர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காலம் மாற மாற மனிதர்களுக்கு மோட்டார் சைக்கிள், கார், என வீதிகளில் வாகனத்தை செலுத்தி சளித்து போயுள்ளதாகவே கூறலாம். அதனாலேயே தற்போது மனிதர்களுக்கு பறக்கும் கார்கள் மீது ஆசை பிறந்துள்ளது. அந்தவகையில், அண்மையில் டஸ்கனியை மையமாகக் கொண்டு இயங்கும் ஜெட்சன் என்ற நிறுவனம் பறக்கும் கார் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த பறக்கும் காருக்கு வாகன பிரியர்களிடமும், கோடீஸ்வரர்களிடமும் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

Read More

தமிழ்நாட்டைச் சேர்ந்த நரிக்குறவர், குருவிக்காரர் உள்ளிட்ட 4 சமூகங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. நரிக்குறவர், குருவிக்காரர் சமுதாய மக்களின் சமூக, கல்வி முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமை யில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இமாலயப் பிரதேசத்தை சேர்ந்த ஹாட்டீ, சத்தீஸ்கரைச் சேர்ந்த பிரிஜியா, தமிழ்நாட்டை சேர்ந்த நரிக்குறவர்கள் ஆகிய மூன்று சமூகங்களையும் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை காரணமாக 4 சமூகங்களையும் சேர்ந்த பல லட்சம் மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் முன்னுரிமையும், சமூகநீதியும் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Read More

உக்ரைன் ஜனாதிபதி வெலோடிமீர் ஸெலென்ஸ்கி கார் விபத்தில் சிக்கி, சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளார். உக்ரைனின் வடகிழக்குப் பகுதியில் ரஷ்ய ஆக்கிரமிப்பிலிருந்து அண்மையில் மீட்கப்பட்ட பகுதிகளுக்கு ஸெலென்ஸ்கி திடீர் பயணம் மேற்கொண்டார். அந்த பயணத்தின் ஒரு பகுதியான இஸியம் நகருக்கு அவர் சென்றார். போரால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்த அந்த நகரின் எரிந்துபோன நகராட்சி தலைமையகம் எதிரே உக்ரைன் கொடி ஏற்றி அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. போர்க்களப் பயணத்திற்குப் பிறகு ஸெலென்ஸ்கியின் கார் வியாழக்கிழமை அதிகாலை மற்றொரு வாகனத்துடன் மோதியது, இதில் அவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதாக அவரது செய்தித் தொடர்பாளர் நிகிபோரோவ் முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார். சிறு காயங்களுடன் அதிர்ஷ்ட வசமாக உயிர்தப்பிய ஸெலென்ஸ்கியுடன் சென்ற மருத்துவர்கள் உடனடியாக அவரை பரிசோதித்து முதலுதவி சிகிச்சை அளித்து ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அவர் வாகன ஓட்டுநருக்கும் மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக நிகிபோரோவ் கூறியுள்ளார். ஸெலென்ஸ்கிக்கு உடலில் எங்கு காயங்கள் ஏற்பட்டிருக்கிறது…

Read More

எயார் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், 141 பயணிகள் லேசான காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். எயார் இந்தியா எக்ஸ்பிரஸ் லிமிடெட் மூலம் இயக்கப்படும் போயிங் கோ. 737-800 விமானம் நேற்று (புதன்கிழமை) ஓமன் தலைநகர் மஸ்கட்டில் இருந்து புறப்படுவதற்கு முன், அவசர நிலை ஏற்பட்டதில் விமானம் திரும்ப வரவழைக்கப்பட்டது. மஸ்கட்டில் இருந்து கொச்சி வரை செல்லும் இந்த விமானம் மும்பை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் இறக்கையில் புகை வருவதை மற்றொரு விமானத்தில் உள்ள விமானி கவனித்து தகவல் அளித்ததையடுத்து அவசர நிலையால் விமானம் தரையிறக்கப்பட்டது. காக்பிட் பகுதியில் தீ பரவாததால் விமானம் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டது. பயணிகளும் அதிக பாதிப்பில்லாமல் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியதாக, இந்திய சிவில் ஏவியேஷன் தலைமை இயக்குனரகத்தின் தலைவர் அருண் குமார் தெரிவித்தார்.

Read More

அம்பாறை மாவட்டத்தில் குரங்குகளின் தொல்லை காரணமாக பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் பலவிதமான சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். மாவட்டத்தின் நாவிதன்வெளி, சம்மாந்துறை, நிந்தவூர், சாய்ந்தமருது, மற்றும் கல்முனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு காடுகளில் இருந்து கூட்டம் கூட்டமாக வரும் குரங்குகள், விவசாயிகள் பயிரிட்டுள்ள காய்கறிகள் மற்றும் பழ மரங்களுக்கு பலத்த சேதத்தை விளைவிப்பதுடன், வீடுகளுக்கு மேலாக பாய்ந்து செல்வதால் வீட்டின் ஓடுகளும் சேதமடைவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இவ்வாறு குடியிருப்புகளுக்குள் கூட்டமாக வரும் குரங்குகள் வீடுகளுக்குள் நுழைந்து சமயலறையிலுள்ள உணவுப் பொருட்களை உண்டு நாசப்படுத்துகின்றன. மேற்குறித்த பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட கிராமங்களில் பயிர்செய்யப்பட்டுள்ள கொய்யா, வாழை, மா போன்ற பழ மரங்களின் பிஞ்சுகளை கடித்து சேதப்படுத்துவதால் விவசாயிகள் தமது விவசாய முயற்சிகளை தொடர முடியாதுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் காட்டு அணில்களையும் குரங்குகளையும் அருகிலுள்ள காட்டுப்பகுதியிலிருந்து சனநடமாட்டம் இல்லாத வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதேச மக்கள் கேட்டுள்ளனர்.

Read More

நாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் வெவ்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இதன்படி பேலியகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பேலியகொட ரயில் வீதி குருகுல வித்தியாலத்திற்கு அருகில் நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்கான நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் பேலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். களனி – பட்டிய சந்தியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஸ்கூட்டரில் வந்த இருவர் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர். குறித்த துப்பாக்கி பிரயோகம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. இதேவேளை உயிரிழந்த நபரின் தகவல்கள் இதுவரையில் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவிப்பதோடு, விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளமை…

Read More

2009 ஆம் ஆண்டு குருநாகலில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை குண்டு தாக்குதல் நடத்தி கொலைசெய்ய முயற்சித்த குற்றச்சாட்டில், முன்னாள் பொலிஸ் அத்தியட்சகர் லக்ஷ்மன் குரே உள்ளிட்ட 4 பேருக்கு கொழும்பு மேல்நீதிமன்றில் குற்றப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சட்டமா அதிபரால் மேல்நீதிமன்ற நீதிபதி மஹேன் வீரமனிடம் இந்த குற்றப்பத்திரங்கள் கையளிக்கப்பட்டுள்ளன. இதன்போது, குற்றபத்திரங்களை ஆராய்ந்த நீதிபதி, பிரதிவாதிகளின் கைவிரல் அடையாளங்கள் அடங்கிய அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

Read More

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு நாட்டில் உள்ள எந்தவொரு எரிபொருள் நிரப்பும் நிலையத்திலிருந்தும் எரிபொருள் ஒதுக்கீட்டை பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பங்களை வழங்குமாறு பொலிஸ்மா அதிபர் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார். முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு நாட்டில் உள்ள எந்தவொரு எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்தும் எரிபொருள் ஒதுக்கீட்டை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அண்மையில் நாடாளுமன்றத்தில் அறிவித்தார். எனினும் பொலிஸாரின் தலையீட்டினால் சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இது நடைமுறைப்படுத்தப்படவில்லை. எவ்வாறாயினும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நாடாளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க மற்றும் முச்சக்கரவண்டி சங்கத்தின் பிரதிநிதிகள் இன்று பொலிஸ் தலைமையகத்திற்கு சென்று இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடியதைத் தொடர்ந்து, ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அசோக் அபேசிங்க எம்.பி. இவ்வாறு குறிப்பிட்டார்.

Read More

இலங்கை அணியின் முன்னாள் வீரர் மஹேல ஜயவர்தனவுக்கு, மும்பை இந்தியன்ஸ் அணியில், புதிய பதவி ஒன்று வழங்கப்பட்டுள்ளது. மஹேல ஜயவர்தன, மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து விலகியுள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் உலகளாவிய செயற்திறன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு உலகளாவிய கிரிக்கெட் பாரம்பரியத்தை உருவாக்கும் நோக்கத்துடன், புதிய பதவி வழங்கப்பட்டுள்ளதாக, அந்த அணியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பை இந்தியன்ஸ், எமிரேட்ஸ் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கேப்டவுன் மும்பை இந்தியன்ஸ் முதலான மூன்று அணிகளின் செயற்பாடுகளை ஒருங்கிணைக்கும் நோக்கில், இந்தப் புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம், இந்திய அணியின் முன்னாள் வீரர் ஷஹீர் கான், மும்பை இந்தியன்ஸ் அணியின், உலகளாவிய கிரிக்கட் மேம்பாட்டுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Read More

எடின்பர்க் நகரில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த மறைந்த பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத்தின் சவப்பெட்டி மீது நேரடியாக ஒரு சூரிய ஒளிக்கதிர் விழுந்த காட்சியைப் பார்த்த மக்கள் நெகிழ்ந்து போயினர். முன்னதாக, பிரிட்டனில் இரட்டை வானவில் தோன்றிய அரிய நிகழ்வு, மக்களிடையே பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது, நேரடியாக சூரிய ஒளிக்கதிர் ஒன்று, எலிசபெத்தின் உடல் வைக்கப்பட்டிருக்கும் பெட்டியில் விழுந்ததை நேரில் பார்த்தவர்களும், அந்த புகைப்படத்தைப் பார்த்தவர்களும் நெகிழ்ச்சி அடைந்து வருகிறார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More