வரவு செலவுத் திட்டத்தில் திருத்தங்களுக்கு அமைய அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தாம் ஒருபோதும் மக்களை விட்டு ஓடியதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், “ஜனாதிபதி நிதியமைச்சர் என்ற வகையில் வரவு செலவுத் திட்டத்தில் புதிய பொருளாதாரத்தை உருவாக்கப் போவதாக குறிப்பிட்டார். அத்தகைய பொருளாதாரத்தை உருவாக்குவதற்கு நாம் செய்ய வேண்டிய பல நீண்ட கால மற்றும் குறுகிய கால செயற்பாடுகள் உள்ளன. இவை அனைத்தையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். உலகளாவிய பொருளாதார மற்றும் அரசியல் செயல்முறையின் யதார்த்தங்கள், அத்தகைய மூலோபாயத் திட்டத்தில் நாம் நகர்ந்தால் மட்டுமே சிறந்த எதிர்காலத்தை உருவாக்க முடியும். எனவே நாம் அனைவரும் திருத்தங்களுக்கு உட்பட்டு அதை ஆதரிப்பது முக்கியம். நல்லாட்சி அரசாங்கம் எங்களால் தாங்க முடியாத அளவுக்கு கடனைப்…
Author: admin
லுணுகலை பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள ஹொப்டன், அம்பலாங்கொடை தோட்டத்தில் வசித்த நபரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த தோட்டத்தில் வசித்து வந்த 65 வயது வேல்குமார் சுந்தரம் தனது வீட்டில் வளர்க்கப்படும் கால்நடைகளுக்கு இரை தேடுவதற்காக, அப்பகுதியில் உள்ள ஐம்பது ஏக்கர் தனியார் தோட்டத்திற்கு கடந்த 19 ஆம் திகதி சனிக்கிழமை சென்றுள்ளார். எனினும் குறித்த நபர் வீடு திரும்பாததால் அவரின் சகோதரர் லுணுகலை பொலிஸில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார். முறைப்பாட்டினை தொடர்ந்து பிரதேசவாசிகளுடன் இணைந்து கடந்த இரு நாட்களாக தேடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்தோனேசியாவின் மக்கள்தொகை மிகுந்த பிரதான தீவான ஜாவாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 162ஆக உயர்வடைந்துள்ளது. மேலும், நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர். எண்ணிக்கை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் புதிய மதிப்பீடுகள் எதுவும் உடனடியாக கிடைக்கவில்லை. சியாஞ்சூரில் வசிப்பவர்கள் பெரும்பாலும் ஒற்றை மற்றும் இரண்டு மாடி கட்டடங்கள் மற்றும் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் உள்ள சிறிய வீடுகளில் வசிக்கின்றனர். வீடுகள் கடுமையாக சேதமடைந்த 13,000க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தின் மையம், தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து தென்கிழக்கே 75 கிமீ (45 மைல்) தொலைவில் உள்ள மேற்கு ஜாவாவில் உள்ள சியாஞ்சூர் நகருக்கு அருகில் இருந்தது. இப்பகுதியில் 2.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக வட அகலாங்கு 11.9N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 84.2N இற்கும் இடையில் யாழ்ப்பாணத்திற்கு வடகிழக்காக 520 கிலோ மீற்றர் தூரத்தில் மையம் கொண்டுள்ள தாழமுக்கமானது படிப்படியாக வலுவிழந்து வடமேற்கு திசையில் நகரக்கூடியசாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது அடுத்த 24 மணித்தியாலங்களில் பெரும்பாலும் தமிழ்நாடு – பாண்டிச்சேரி கரையோரப் பிரதேசங்களை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. எனவே, அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு காங்கேசன்துறையிலிருந்து முல்லைத்தீவு மற்றும் தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பு ஊடாக திருகோணமலை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பரப்புகளில் கடற்படை மற்றும் மீனவ சமூகங்களை அவதானமாக இருக்குமாறு அத்திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் சிறிதளவில் மழை பெய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் எனவும் அத்திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
நடப்பு FIFA உலகக் கிண்ண தொடரின் குரூப் “B” சுற்றுப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஈரான் அணிகளுக்கு இன்று பலப்பரீட்சை நடத்தியிருந்தன. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி அபாராமாக விளையாடி 6-2 என்ற கோல்கள் அடிப்படையில் ஈரானை இலகுவாக வெற்றிகொண்டது. போட்டியின் 35ஆவது நிமிடத்தில் இங்கிலாந்தின் பெலிங்காம் முதலாவது கோல் அடித்தார். பின்னர் 43ஆவது நிமிடத்தில் சகாவும், 45 நிமிடங்களுக்கு பின்னர் மேலதிக நேரத்தில் முதலாவது நிமிடத்தில் ஸ்டர்லிங் கோல் அடித்து அசத்தினார். அதற்கமைய, இங்கிலாந்து அணி முதல் பாதியில் 3-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது. இதனையடுத்து, இரண்டாவது பாதியில் 62, 71, 89ஆவது நிமிடங்களில் இங்கிலாந்து கோல் மழை பொழியவே, மறுமுனையில் ஈரான் அணியால் 65ஆவது நிமிடத்திலும் 90 நிமிடங்களுக்கு பின்னர் வழங்கப்பட்ட மேலதிக நேரத்தில் ஒரு கோல் மாத்திரம் பெற்று 6-2 என்ற கணக்கில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது. கட்டார் தலைநகர் தோஹாவில் உள்ள கலீஃபா சர்வதேச…
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க உட்பட கட்சியில் இருந்து விலகிய சகலரின் கட்சி உறுப்புரிமையையும் பறிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு, இன்று (21) ஏகமனதாக தீர்மானித்துள்ளது. சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் கட்சி தலைமையகத்தில் இன்று (21) கூடிய போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவின் முக்கிய தீவான ஜாவாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் கிட்டத்தட்ட 20பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் குறைந்தது 300பேர் காயமடைந்துள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன. பெரும்பாலோர் கட்டடங்களின் இடிபாடுகளில் சிக்கி இருப்பதால், உயிரிழப்பு மற்றும் காயமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்ககூடுமென சியாஞ்சூர் நிர்வாகத்தின் தலைவர் ஹெர்மன் சுஹர்மன் கூறினார். இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் இன்று (திங்கள்கிழமை) 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பல வினாடிகள் தாக்கியதாக வானிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜகார்த்தாவில் இருந்து தென்கிழக்கே 75 கிமீ தொலைவில் உள்ள மேற்கு ஜாவாவில் உள்ள சியாஞ்சூரில் 10 கிமீ (6.2 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது, மேலும் சுனாமி ஏற்பட வாய்ப்பில்லை என்றும் வானிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் தெரிவித்துள்ளது. சிலர், ஜகார்த்தாவின் மத்திய வணிக மாவட்டத்தில் உள்ள அலுவலகங்களை விட்டு வெளியேறினர். மற்றவர்கள் கட்டடங்கள் குலுங்கியதாகவும், தளபாடங்கள் நகர்வதையும் உணர்ந்ததாகவும் தெரிவித்தனர்.
கட்டார் ஃபிஃபா கால்பந்து உலகக்கிண்ணத் தொடரின் முதல் போட்டியில், ஈக்வடார் அணி சிறப்பான வெற்றியை பதிவுசெய்துள்ளது. குழு ஏ பிரிவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற தொடக்க போட்டியில், தொடரை நடத்தும் கட்டார் அணியும் ஈக்வடார் அணியும் மோதின. அல் பேத் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், ஈக்வடார் அணி 2-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது. போட்டி ஆரம்பமாகி 15ஆவது நிமிடத்தில் கட்டார் வீரர் சாத் அல் ஷீபுக், ஈக்வடார் வீரர் எனர் வாலென்சியாவை தள்ளிவிட்டதால் மஞ்சள் அட்டை காட்டப்பட்டதோடு, ஈக்வடார் அணிக்கு பெனால்டி வாய்ப்பும் வழங்கப்பட்டது. இந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக்கொண்ட எனர் வாலென்சியா, போட்டியின் 16ஆவது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பை அணிக்காக கோலாக மாற்றினார். இதன்மூலம் அவர், நடப்பு கால்பந்து உலகக்கிண்ணத் தொடரில், முதல் கோலை அடித்த பெருமையை பெற்றார். இதனைத்தொடர்ந்து போட்டியின் 31ஆவது நிமிடத்தில், சக வீரர் பிரெசியாடோ தூக்கியடித்த பந்தை வாலென்சியா தலையால் முட்டி அணிக்காக இரண்டாவது…
அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மஸ்கெலியா புரன்வீக் ராணிதோட்டத்தை சேர்ந்த கிருஸ்ணகுமார் பாக்கியலெட்சுமி என்ற தாய் ஒரே பிரசவத்தில் மூன்று பெண் குழந்தைகளை பிரசவித்துள்ளார். நுவரெலியா மாவட்ட ஆதார வைத்தியசாலையில் இந்த மூன்று பெண் குழந்தைகள் பிறந்துள்ளதென வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் தெரிவித்தார். இவ்வாறு மூன்று குழந்தைகள் பிரசவித்த தாய்க்கு பத்து மற்றும் எட்டு வயதினை கொண்ட இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்த தாய்க்கு உதவி செய்ய தொண்டு நிறுவனங்கள் சமூக ஆர்வலர்கள் முன் வந்து உதவி கரம் கொடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.
தென்வங்காள விரிகுடாவின் மையப்பகுதியில் காணப்படுகின்ற குறைந்த அழுத்தப் பிரதேசம் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து வடஅகலாங்கு10.0N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 85.5E இற்கும் இடையில் யாழ்ப்பாணத்திற்கு கிழக்காக 600 கிலோ மீற்றர்தூரத்தில் மையம் கொண்டுள்ளது. அது அடுத்த 48 மணித்தியாலங்களில் தமிழ்நாடு – பாண்டிச்சேரி கரையோரப் பிரதேசங்களை நோக்கி நகரக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மாகாணத்தில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மழை நிலைமை : காங்கேசந்துறையில் இருந்து திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான…