Author: admin

டீசல் விலை குறைப்பின் அடிப்படையில் எதிர்காலத்தில் பேரூந்து கட்டணத்தை குறைக்க முடியாது எனவும், எனவே உதிரி பாகங்கள் மற்றும் டயர்களின் விலையை குறைக்கும் வேலைத்திட்டம் தேவை எனவும் அகில இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பேருந்துகளில் பயன்படுத்தப்படும் பேட்டரி ஒன்றின் விலை 35,000 ரூபாவிலிருந்து 80,000 ரூபாவாக அதிகரித்துள்ளதாகவும், டயரின் விலை 1 இலட்சம் ரூபாவைத் தாண்டியுள்ளதாகவும் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்தார். ஒரு டயர் நிரப்புவதற்கு 25,000 ரூபா தேவைப்படுவதாகவும், இதற்கு மேலதிகமாக மசகு எண்ணெயின் விலை அதிகரித்துள்ளதாகவும், சில உதிரி பாகங்களின் விலை 500% அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் டீசல் விலை குறைப்பு தொடர்பில் பேரூந்து கட்டணங்கள் குறைக்கப்பட்டதாகவும், இதன் மூலம் பேரூந்து வருமானம் குறைந்ததாகவும், ஆனால் பேரூந்துகளின் பராமரிப்புக்கான செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் பொதுச் செயலாளர் குறிப்பிட்டார். எதிர்காலத்தில் டீசல் விலை குறைக்கப்பட்டாலும் பேரூந்து கட்டணத்தை திருத்த…

Read More

தெங்கு உற்பத்திப் பொருட்களை சவூதி அரேபியாவுக்கு ஏற்றுமதி செய்வது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று சவூதி அரேபிய தூதகரத்தில் நேற்று (30.05.2023) இடம்பெற்றது. இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் காலித் ஹமூத் அல் கஹ்தானிக்கும் தெங்கு அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் ரொஸான் பெரேராவிற்கும் இடையிலான குறித்த சந்திப்பு, சவூதி அரேபிய தூதகரத்தில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம் எஸ் தௌபீக் எம்.பியின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதன்போது தெங்கு உற்பத்திப் பொருட்களை சவூதி அரேபியாவுக்கு ஏற்றுமதி செய்வது சம்மந்தமாகவும் சவூதி முதலீட்டாளர்களை இலங்கைக்கு கொண்டுவருவது சம்மந்தமாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டு சாதகமான முடிவுகள் எட்டப்பட்டது. இச்சந்திப்பில் தெங்கு அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் திரு. சம்பத் சமரவிக்ரம மற்றும் நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் ஆலோசகர் கலாநி்தி கெரி (யான்போ) ஷாங் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Read More

பிரதமர் தினேஷ் குணவர்தன உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு தாய்லாந்து சென்றுள்ளார். பிரதமர் இன்று (31) காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து தாய்லாந்து நோக்கிப் புறப்பட்டுள்ளார். பிரதமருடன் 11 பேர் தாய்லாந்துக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read More

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா முடிந்து பல மாதங்களாகியும் பட்டதாரிகளுக்கான பட்டச் சான்றிதழ்களை வழங்குவதற்கு வெளிவாரிக் கற்கைகள் பிரிவு இழுத்தடித்து வருவதாகப் பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர். 2021 ஆண்டு வரை இறுதிப் பரீட்சைக்குத் தோற்றி, 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பட்டம் வழங்கப்பட்ட வியாபார முகாமைத்துவமாணி, வணிகமாணி, கலைமாணிப் பட்டதாரிகளே பட்டச் சான்றிதழ்கள் வழங்கப்படாமையினால் பல அசௌகரியங்களை எதிர் நோக்கி உள்ளனர். இவர்களுக்குரிய காலத்தில் பட்டச் சான்றிதழ்கள் வழங்கப்படாமை குறித்துத் தாம் கடிதம் மூலம் துணைவேந்தருக்குத் தெரியப்படுத்தியதன் காரணமாகவே தமது பட்டச் சான்றிதழ்கள் வேண்டுமென்றே இழுத்தடிக்கப்படுகின்றன என்று பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். பல்கலைக்கழகத்துக்கு அருகில் அமைந்துள்ள திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்துக்கு நேரில் சென்று தமது பட்டச் சான்றிதழ்களை வழங்குமாறு கேட்ட போது, துணைவேந்தரிடம் முறையிட்டது போல துணைவேந்தரிடமே போய் பட்டச் சான்றிதழையும் பெற்றுக் கொள்ளுங்கள்:” என்று அங்குள்ள அதிகாரிகள் கூறுவதாகவும், அச்சிடுவதற்று வசதிகள் இல்லை, மட்டை…

Read More

கிழக்கு மாகாணத்தில், 4 ஆயிரத்து 200 ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்ற நிலையில், அதற்கு விரைவில் தீர்வு வழங்குவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானிடம் உறுதியளித்துள்ளார். கல்வி அமைச்சில், நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில், இந்த உறுதிப்பாடு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் 4 ஆயிரத்து 200 ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதாகவும், அதற்கு நிரந்தர தீர்வினை காண்பதற்காக ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் என மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், கல்வி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்தக் கோரிக்கையை ஏற்று, ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதாக உறுதியளித்த கல்வி அமைச்சர், முதற்கட்டமாக மூன்று மாத காலத்திற்குள், கல்வியியற் கல்லூரியில் இருந்து வெளியேறும் ஆசிரியர்களைக் கொண்டு பற்றாக்குறை உள்ள பாடசாலைகளுக்கு நியமனம் வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

Read More

தம்புத்தேகமவில் உள்ள பாடசாலை ஒன்றில் 14 வயதுடைய பாடசாலை மாணவிக்கு ஆபாசமான படங்கள் மற்றும் செய்திகளை அனுப்பிய அதே பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த மாணவியின் பெற்றோர், நன்னடத்தை அலுவலகத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து சந்தேகத்தின் பேரில் குறித்த ஆசிரியரை பொலிஸார் நேற்று (30) கைது செய்துள்ளனர். தம்புத்தேகம பிரதேசத்தை சேர்ந்த 44 வயதான குறித்த ஆசிரியர் இன்று (31) தம்புத்தேகம நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Read More

2023 ஆம் ஆண்டு மே மாதம் 28 ஆம் திகதி வரை இலங்கைக்கு வந்துள்ள மொத்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 516,946 என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதன்படி, 2023 மே மாதம் முதல் 28 நாட்களில் 75,769 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது. மே மாதத்தில் இதுவரை அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் அண்டை நாடான இந்தியா மற்றும் ரஷ்யா, ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இருந்து வந்துள்ளனர்.

Read More

மோட்டார் சைக்கிளில் சென்ற நபரை வெட்டி காயப்படுத்திய சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களை கைதுசெய்ய கல்முனை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதியில் நேற்று காலை மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த நபர் மீது மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவர் கூரிய ஆயுதத்தினால் வெட்டி காயப்படுத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர். இதன் போது இச்சம்பவத்தில் 41 வயது மதிக்கத்தக்க இஸ்மாலெப்பை சிறாஜ்டீன் என்ற மேசன் வேலை செய்யும் குடும்பஸ்தரே காயமடைந்துள்ள நிலையில் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு வருகை தந்த கல்முனை தலைமையக பதில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியுமான பிரதம பொலிஸ் பரிசோதகர் அலியார் றபீக் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. சம்பவத்தின் பின்னணி குறித்து தெரியவருவதாவது, இரண்டாவது திருமணத்தில் இணைந்த…

Read More

உலக சந்தையில் சீமெந்து, இரும்பு, அலுமினியம் உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் குறைந்துள்ள நிலையில், டொலரின் பெறுமதி வீழ்ச்சியின் அனுகூலத்தை இலங்கையின் நிர்மாணத்துறையை வலுவூட்டுவதற்கு பயன்படுத்த வேண்டுமென நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். விலை அதிகரிப்பு வீதத்துடன் ஒப்பிடுகையில் விலை குறைப்பு வீதம் மிகவும் மந்தமாகவே காணப்படுவதாக நிர்மாணத்துறையின் பிரதிநிதிகள் உள்ளிட்ட அதிகாரிகளுடனான கலந்துரையாடலில் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். கட்டுமானப் பொருட்களின் விலை வீழ்ச்சியை அவதானித்து ஒரு மாதத்தில் கூடி உரிய விலை குறைப்பு சதவீதத்தை சரியாக அறிவிப்பதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

Read More

இலங்கை மத்திய வங்கி பொது மக்களுக்கு விசேட அறிவித்தலொன்றை வழங்கியுள்ளது. அதன்படி பிரமிட் திட்டங்களில் பங்குபற்றுவது ஒரு தண்டனைக்குரிய குற்றமாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கிக்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் பிரகாரம், சில நிறுவனங்கள் வங்கித் தொழில் சட்டத்தின் 83(இ) பிரிவின் நியதிகளுக்கமைய தடைசெய்யப்பட்ட திட்டங்களைக் நடாத்துகின்றனவா அல்லது நடத்தியுள்ளனவா என்பதை உறுதிப்படுத்துவதற்கு, 1988ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க வங்கித் தொழில் சட்டத்தின் 83(இ) பிரிவிற்கமைவாக விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன. அதற்கமைய Tiens Lanka Health Care (Pvt) Ltd, Best Life International (Pvt) Ltd, Global Lifestyle Lanka (Pvt) Ltd, Mark-Wo International (Pvt) Ltd, V M L International (Pvt) Ltd, Fast 3Cycle International (Pvt) Ltd (F3C), Sport Chain App, Sports Chain ZS Society Sri Lanka, OnmaxDT ஆகிய நிறுவனங்கள் சொல்லப்பட்ட சட்டத்தின் 83(இ) பிரிவின் ஏற்பாடுகளுக்கு முரணாக…

Read More