முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் பாடசாலை மாணவனை விபத்துக்குள்ளாகிவிட்டு, காயமடைந்த மாணவனை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதாக கூறி பாதிவழியிலேயே விட்டுச்சென்ற சம்பவமொன்று பதிவாகியுள்ளது. அதற்கமைய, குறித்த முச்சக்கரவண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கினிகத்தேன பொலிஸார் முச்சக்கரவண்டி சாரதியை நேற்று (26) கைது செய்து, ஹட்டன் மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதன் பின்னர் சந்தேகநபரை எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. எட்டியாந்தோட்டை-மீப்பிட்டிகந்த பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
Author: admin
ரஷ்யாவின் அணு ஆயுத தாக்குதல் தடுப்புப் படையின் தயார் நிலை குறித்து, அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆய்வு செய்துள்ளார். அணு ஆயுதத்தை சுமந்து சென்று கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கும் ஏவுகணைகள் மற்றும் குறைந்த உயரத்தில் அதிக வேகத்தில் பறந்து விமானப்படை மற்றும் கடற்படை இலக்குகளை துல்லியமாகத் தாக்கும் ஏவுகணைகளின் தயார் நிலை குறித்த ஒத்திகை நேற்று நடத்தப்பட்டது. இதனை ஜனாதிபதி புடின் ஆய்வு செய்ததாக ரஷ்ய ஜனாதிபதி மாளிகை கிரெம்ளின் தெரிவித்துள்ளது. முன்னதாக, சக்தி குறைந்த அணு ஆயுதங்களை தங்கள் நாட்டிற்கு எதிராக பயன்படுத்த உக்ரைன் திட்டமிட்டிருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் அணு ஆயுத பாதுகாப்புப் படையின் தலைவர் இகோர் கிரில்லோ குற்றஞ்சாட்டியிருந்தார். இந்த பின்னணியில் தற்போது உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா தொடங்கிய தாக்குதல் 9 மாதங்களை கடந்துள்ள நிலையில், ரஷ்யாவின் தற்போதைய அணு ஆயுத தாக்குதல் தடுப்புப் படையின் தயார் நிலை, உக்ரைன் போரில் ரஷ்யா…
ஒக்டோபர் மாதத்தின் முதல் 24 நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 31 ஆயிரத்து 828ஐ எட்டியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இவ்வருடம் இதுவரை நாட்டிற்கு வந்த மொத்த சர்வதேச பார்வையாளர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 58 ஆயிரத்து 68ஆக உயர்ந்துள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் பகிரப்பட்ட சமீபத்திய தற்காலிகத் தரவுகள், ஒக்டோபர் மாதத்திற்கான வாராந்த வருகையில் முன்னேற்றத்தைக் காட்டியுள்ளது. ஒக்டோபர் 01-24ஆம் திகதி வரையில், இந்தியா, ரஷ்யா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்தே அதிகளவானோர் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது. ரஸ்யாவின் ஏரோஃப்ளோட் இலங்கைக்கு மீண்டும் செயற்பாடுகளை ஆரம்பித்ததன் காரணமாக ரஷ்ய பயணிகளின் வருகையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் எதிர்வரும் நவம்பர் முதல் மார்ச் 2023 வரையிலான காலகட்டத்தில் இலங்கைக்கான 75 சதவீத பயணச்சீட்டுக்கள் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஏரோஃப்ளோட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதிக்கு சமீபத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள் விவகாரத்தில் அவர்கள் வாடகைத் தாய் முறை மூலம் குழந்தை பெற்றுக் கொண்டிருப்பது தற்போது விசாரணை அறிக்கை மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. அந்த அறிக்கையின் விவரத்தை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. திரைப்பட நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோருக்கு கடந்த ஜூன் 9ஆம் தேதி சென்னைக்கு அருகே உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், அக்டோபர் 9ஆம் தேதி, இரட்டை குழந்தைகளுடன் இருக்கும் படங்களை விக்னேஷ் சிவன் தமது சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்து தங்களுடைய குடும்பத்து புதிய வரவை வரவேற்பதாக தெரிவித்திருந்தார். ஆனால், திருமணமான சில மாதங்களிலேயே குழந்தையுடன் படத்துக்கு போஸ் கொடுத்த இந்த தம்பதி, செயற்கையாக குழந்தை பெற்றுக் கொண்டதாகவும் வாடகைத்தாய் முறை மூலம் அவர்கள் இந்த குழந்தைகளை பெற்றிருந்தால் அதற்கான விதிகளை அவர்கள் முறையாக கடைப்பிடித்தார்களா என்றும் சமூக ஊடகங்களில் விவாதம்…
இலங்கையின் தெற்கிலிருந்து வடக்கே 600 கிலோமீட்டர் தூரத்தை உள்ளடக்கியதாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 24 மணி நேர சைக்கிளோட்டப் போட்டியின் ஐந்தாவது சுற்று ‘Race the Pearl’ நவம்பர் 5, 2022 அன்று தென் மாகாணத்தில் உள்ள தேவேந்திர முனையிலிருந்து ஆரம்பமாகவுள்ளது. ஆறு சிறந்த சைக்கிள் ஓட்டுநர்கள், அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர், பிரிட்டனைச் சேர்ந்த மூன்று பேர் மற்றும் இரண்டு இலங்கையர்கள் ‘Race the Pearl’ போட்டியை வழிநடத்துவார்கள். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் இந்த சைக்கிளோட்டப் போட்டியில் இணைந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தெவுந்தரை தொடங்கி, இது இலங்கையின் வடக்கின் மிக உயரமான இடமான பருத்தித்துரையை அடையவுள்ளதுடன், இது ஐந்து சுற்றுக்களைக் கொண்டுள்ளது. முதற்கட்டமாக தேவேந்திர முனை முதல் வெல்லவாய வரையிலான 145 கிலோமீற்றர் தூரமும், இரண்டாம் கட்டமாக வெல்லவாய முதல் மஹியங்கனை வரையிலான 116 கிலோமீற்றர் தூரமும் இந்த சைக்கிளோட்டப் போட்டி இடம்பெறவுள்ளது. மூன்றாம் கட்டமானது மஹியங்கனையிலிருந்து தம்புள்ளை வரையிலான 92…
இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய இலங்கையர்களின் குடியுரிமை பெறுதல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான எதிர்வரும் 31ஆம் மற்றும் நவம்பர் மாதம் முதலாம் திகதிகளில் நடமாடும் சேவைகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 7,000 குடும்பங்களைச் சேர்ந்த 12, 500 இற்கும் மேற்பட்டவர்கள் வட மாகாணத்திற்கு திரும்பி மீண்டும் குடியேறியுள்ளனர். அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மேற்பார்வையில், அமைச்சுடன் தொடர்புடைய நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளின் பங்களிப்புடன் இந்த நடமாடும் சேவை இடம்பெறவுள்ளது.
யாழ்ப்பாணம் – மூளாய் பகுதியில் நேற்றைய தினம் வீடொன்றில் திருட சென்ற திருடர்கள் இருவர் அந்த வீட்டில் சமைத்து சாப்பிட்டு, அங்கிருந்த மதுபானத்தை அருந்தி விட்டு, படுத்து உறங்கிய நிலையில் ஒருவர் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளார். மற்றையவர் தப்பியோடியுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த வீட்டில் வசிப்பவர்கள், நேற்று முன்தினம் வெளியே சென்றுள்ளனர். அப்போது இரவு நேரம் வீட்டினுள் திருடும் நோக்குடன் இருவர் உள்நுளைந்துள்ளனர். வீட்டினுள் இருந்த மதுபான போத்தல்களை கண்டு, வீட்டில் சமைத்து சாப்பிட்டு, மது அருந்தி உள்ளனர். மது அருந்தியவர்கள், நிறை போதையில் திருடச் சென்ற வீட்டிலேயே ஆழ்ந்த உறக்கம் கொண்டுள்ளனர். காலையில் வீட்டார் வந்து பார்த்த போது, வீட்டினுள் இருவர் மது அருந்திய நிலையில் உறக்கத்தில் இருப்பதைக் கண்டு சத்தம் போட்டு அயலவர்களை அழைத்துள்ளார். சத்தம் கேட்டு எழுந்த திருடர்கள் இருவரும் வீட்டில் இருந்து தப்பியோடியுள்ளனர். தப்பி ஓடியவர்களை அயலவர்கள் துரத்தி சென்ற போது ஒருவர் மாத்திரமே…
யாழ். நகரில் மனிதப் பாவனைக்குதவாத நிலையில் பழப்புளியை வைத்திருந்த களஞ்சிய உரிமையாளரை இரண்டு வாரங்கள் விளக்கமறியலில் வைக்கவும், கைப்பற்றப்பட்ட பழப்புளியை அழிக்கவும் யாழ்ப்பாண மேலதிக நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணம் ஜும்மா பள்ளிவாசல் வீதியில் உள்ள களஞ்சியம் ஒன்றில் 6000 கிலோ கிராம் வரையான மனிதப் பாவனைக்கு உதவாத பெருந்தொகையான பழப்புளியை சுகாதாரமின்றி பொதியிட்டுக் கொண்டிருந்த நிலையில், நேற்று முன்தினம் (25) பொதுச் சுகாதார பரிசோதகர் பிரிவினரால் களஞ்சியம் முற்றுகையிடப்பட்டது. இதனையடுத்து, களஞ்சிய உரிமையாளருக்கு எதிராக நேற்றைய தினம் (26) யாழ்ப்பாண மேலதிக நீதவான் நீதிமன்றில் யாழ் நகர பொதுச்சுகாதார பரிசோதகர் சஞ்ஜீவனால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் களஞ்சிய உரிமையாளரை இரண்டு வாரங்கள் விளக்கமறியலில் வைக்கவும், கைப்பற்றப்பட்ட பழப்புளியை அழிக்கவும் யாழ்ப்பாண மேலதிக நீதவான் நளினி சுபாஸ்கரன் உத்தரவிட்டார். அத்துடன், எதிர்வரும் நவம்பர் 9 ஆம் திகதி வரை குறித்த வழக்கை நீதவான் நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டது.
கடந்த 2020இல் கத்தார் ஏர்வேஸ் விமானங்களின் பெண் பயணிகளுக்கு ஆடை களைந்து சோதனை நடத்தப்பட்டது. அதற்கு காரணம் காணாமல் போன குழந்தை ஒன்றின் தாயை கண்டுபிடிக்க வேண்டும் என்பதே.
இலங்கையில் இந்த வருடத்தில் இதுவரை 435 கொலைகள் பதிவாகியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இன்று (26) தெரிவித்தார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், செப்டெம்பர் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த காலப்பகுதியில் இந்த கொலைகள் பதிவாகியுள்ளதாக தெரிவித்த அவர், கடந்த ஆண்டு (2021) முழுவதும் 521 கொலைகள் மட்டுமே பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டினார். 90 இதற்கிடையில், பிரேத பரிசோதனைகளை நடத்துவது தொடர்பான குற்றவியல் நடைமுறைகள் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரேத பரிசோதனைகளை நடத்துவது தொடர்பாக தற்போதுள்ள சட்டங்கள், நடைமுறைகள் மற்றும் நடைமுறைகளில் பொருத்தமான திருத்தங்களைச் செய்வதற்குப் பரிந்துரைகளை வழங்குவதற்காக பேராசிரியர் ரவீந்திர பெர்னாண்டோ தலைமையில் ஒரு குழு நியமிக்கப்பட்டது. மேற்படி குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்காக குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டியதன் அவசியம் கண்டறியப்பட்டுள்ளது. இதன்படி, நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட மேற்படி பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.