Author: admin

இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்ட அரிய மற்றும் வரலாற்று பெறுமதி மிக்க புத்தகங்கள் மற்றும் ஆவணங்கள் உள்ளிட்ட விசேட புத்தக கண்காட்சியொன்று 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் இன்று (22) முற்பகல் 23 ஆவது கொழும்பு தேசிய புத்தகக் கண்காட்சியில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். சுதந்திர நினைவேந்தல் புத்தகக் கண்காட்சிக்கு இலங்கை புத்தகப் பதிப்பாளர் சங்கத்தின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதாக நம்புவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். இன்று காலை புத்தக கண்காட்சிக்கு வருகை தந்த ஜனாதிபதியை இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு.சமந்த இந்திவர மற்றும் குழுவினர் வரவேற்றனர். இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா அறக்கட்டளையின் தலைவர் சமன் அதாவுதஹெட்டி, புத்தக வெளியீட்டாளர்கள் சங்க உறுப்பினர்கள், விஜித யாப்பா, எச்.டி. பிரேமசிறி, ஆரியதாச வீரமன், அதுல ஜெயக்கொடி ஆகியோரும் இந்நிகழ்வில்…

Read More

குருந்தூர்மலைப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டமைக்கு நீதி கோரியும் பௌத்தமயமாக்கலுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் இன்றைய தினம் (வியாழக்கிழமை) பேரணி ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக இன்று நண்பகல் 12 மணியளவில் ஒன்றுகூடிய பல்கலைக்கழக மாணவர்கள் அங்கிருந்து கோஷங்களை எழுப்பியவாறு பேரணியாக இராமநாதன் வீதி ஊடாக பரமேஸ்வராச் சந்தியை அடைந்து அங்கிருந்து சிறிது நேரம் வீதியை முடக்கி போராட்டத்தில் ஈடுபட்டதுடன் பின்னர் பேரணியாக பல்கலைக்கழகத்தை வந்தடைந்தனர். முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையைச் சூழவுள்ள தமிழ் மக்களுக்குரிய 632ஏக்கர் பூர்வீக காணிகளை தொல்லியல் திணைக்களம் அபகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றமை மற்றும், நீதிமன்ற கட்டளையைப் புறந்தள்ளி பௌத்த கட்டுமானம் மேற்கொள்ளப்படுகின்றமை என்பவற்றைக் கண்டித்து நேற்றையதினம் (புதன்கிழமை) குருந்தூர்மலையில் அப்பகுதி மக்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள், சிவில்சமூகப் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள் பங்கேற்புடன் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட முன்னாள் வடமாகாணசபை…

Read More

வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளை எதிர்பார்க்கும் பொதுமக்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு சென்று வேலை வங்கி வகையை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது கிடைக்கும் அனைத்து வெளிநாட்டு வேலை வாய்ப்புகளையும் இந்த வேலை வங்கி காட்சிப்படுத்துவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். வேலைவாய்ப்பு வங்கியானது, அமைச்சினால் பதிவு செய்யப்பட்ட வேலைவாய்ப்பு நிறுவனங்களின் பட்டியலைக் கொண்டுள்ளதுடன், நாளாந்த அடிப்படையில் புதுப்பிக்கப்படுகிறது எனவும் அவர் தெரிவித்தார். கிடைக்கக்கூடிய தொழில் வாய்ப்புகள் தொடர்பில் பல தொலைபேசி விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தேவையான விவரங்களைப் பெறுவதற்கு அமைச்சின் இணையத்தளத்தை அணுகுவது பொதுமக்களுக்கு வசதியாக இருக்கும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Read More

சந்தையில் காணப்படும் திரிபோஷா பொருட்களில் அஃப்லாடொக்சின் கலந்துள்ளதாகத் தெரிவித்து தொடரப்பட்ட பல வழக்குகளை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதிவான் மஞ்சுள ரத்நாயக்க, உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து விநியோகிக்கும் 04 பிரதான நிறுவனங்களின் பணிப்பாளர்களை நீதிமன்றத்தில் நேற்று (21) ஆஜராகுமாறு உத்தரவிட்டார். கொத்தடுவ பொதுச் சுகாதார பரிசோதகர் அலுவலகம், பொது சுகாதார பரிசோதகர் பி. ஏ. சஜித கசுனால் தாக்கல் செய்யப்பட்ட 04 வழக்குகளைப் பரிசீலித்த நீதவான், சம்பந்தப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்து விநியோகம் செய்யும் நிறுவனங்களின் பணிப்பாளர்களை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்து அழைப்பாணையும் பிறப்பித்துள்ளார்.

Read More

யுனெஸ்கோ பணிப்பாளர் நாயகம் Audrey Azule மற்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது, கல்வி மாற்றத்திற்கான மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக கல்வி அமைச்சர் நியூயோர்க் சென்றுள்ள நிலையில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில் இலங்கையில் கல்வித்துறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு யுனெஸ்கோ வழங்கிய உதவிகளுக்கு கல்வி அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார். அத்துடன் நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள பொருளாதார பிரச்சினைகள் தொடர்பிலும் அங்கு கலந்துரையாடப்பட்டதாக குறித்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. யுனெஸ்கோவின் ஆதரவை தொடர்ந்தும் எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மேலும் தெரிவித்துள்ளார்.

Read More

அனுராதபுரம் மாவட்டத்தின் விளச்சிய பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட 3 பாடசாலைகளைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட மாணவர்கள், உணவு இன்மையினால் நேற்று மயக்கமடைந்து விழுந்துள்ளதாக இன்று நாடாளுமன்றில் தெரிவிக்கப்பட்டது. அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.பி.எஸ் குமாரசிறி இதனை தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர், குறித்த பிரதேச செயலகத்தின் சித்தார்த்த மகா வித்தியாலயம், கிம்புலாவ காமினி வித்தியாலயம் மற்றும் ஆனந்த வித்தியாலயம் ஆகிய பாடசாலை மாணவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். பாடசாலை அதிபர்களை தொடர்புகொண்டு வினவியதாகவும் குறிப்பிட்டார்.

Read More

மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள கிளிவெட்டி, பாரதிபுரம் கிராமத்தில் குடும்பஸ்தர் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். செவ்வாய்க்கிழமை (20) இரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் கிளிவெட்டி பாரதிபுரம் கிராமத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையனா விவசாயி சோமசுந்தரம் சிறிகந்தராசா (வயது 50) என்பவரே குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவ தினத்தன்று, மின்சாரம் தடைப்பட்டிருந்த நேரத்தில் சிறிகந்தராசாவின் வீட்டுக்கு வந்து அவரை வெளியே வருமாறு அழைத்த சந்தேகநபர், அவரை கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் தொடர்பாக பாரதிபுரம் கிராமத்தைச் சேர்ந்த அருமைத்துரை கிருபாகரன் (வயது 47) எனும் சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Read More

புகையிரத திணைக்களத்தில் ஊழியர்களுக்கு பற்றாக்குறை நிலவிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. புகையிரத திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். சுமார் 7 ஆயிரம் ஊழியர்களுக்கு இவ்வாறு பற்றாக்குறை நிலவுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். புகையிரத ஊழியர்களின் பற்றாக்குறை காரணமாக புகையிரத திணைக்களத்தின் நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Read More

2022 க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் போது ஒரு நாள் சேவையின் கீழ் விநியோகிக்கப்படும் சான்றிதழை பெறுவது கட்டாயமில்லை என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன கருத்து வெளியிடுகையில், பாடசாலை விண்ணப்பதாரி ஒருவர் பாடசாலை விண்ணப்பதாரியாக இருந்தால் அதிபரினால் வழங்கப்பட்ட பெறுபேறு சான்றிதழ் அல்லது திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பெறுபேறுகளின் உறுதிப்பாட்டின் கீழ் பணம் செலுத்தி பெறப்பட்ட பெறுபேற்று ஆவணத்தை உறுதிப்படுத்துதல் போதுமானது என தெரிவித்தார். மேலும், வெளிநாட்டு விண்ணப்பதாரியாக இருந்தால், பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பெறுபேறுகளின் உறுதிப்படுத்தலின் கீழ் பணம் செலுத்தி பெறப்பட்ட பெறுபேற்று ஆவணமே போதுமானது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Read More

உடன் அமுலுக்கு வரும் வகையில் இனிப்பு வகைகளின் விலையை 10 முதல் 13 வீதத்தால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கை மிட்டாய் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் எஸ்.எம்.டி.சூரியகுமார இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய, அனைத்து தயாரிப்பு வகைகளிலும் தின்பண்டங்களின் விலை குறைவடையும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இரண்டு முக்கிய பொருட்களின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், இதனால் சந்தையில் இனிப்புகளின் விலையைக் குறைக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இனிப்பு உற்பத்திக்காகப் பயன்படுத்தப்படும் சீனியின் விலை கிலோ ஒன்றுக்கு 40 ரூபாவாலும், தாவர எண்ணெய் கிலோ ஒன்றின் விலை 250 ரூபாவாலும் குறைவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Read More