தற்போது எரிவாயு விநியோகம் வழமைக்குத் திரும்பியுள்ள நிலையில், உலக சந்தையின் விலை, செலவு, நுகர்வோருக்கு எரிவாயு விற்பனை செய்யப்படும் சில்லறை விலை என்பன குறித்து அவதானம் செலுத்தி, எரிவாயு விலைக் கட்டுப்பாட்டுக்கு நடவடிக்கை எடுப்பதாக கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அதேநேரம், அண்மைக் காலமாக, சீமெந்து, இரும்பு, வயர் மற்றும் பிஸ்கட் உள்ளிட்ட பல உள்நாட்டு உற்பத்திகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். அந்த விலைகள் நியாயமானவையா? என்பதை ஆராய்வதற்காக, அவற்றின் விலைச் சூத்திரம் குறித்து, நுகர்வோர் அதிகார சபையில் முன்னிலையாகி அறிக்கை ஒன்றை வழங்குமாறு சம்பந்தப்பட்ட தரப்புக்கு அறியப்படுத்தப்பட்டுள்ளது. அந்த அறிக்கைக்கு அமைய, அவற்றின் கட்டுப்பாட்டு விலைக்கு உடனடி நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
Author: admin
இணையத்தளம் ஊடாக சிறுவர்கள் பாலியல் ரீதியான தொந்தரவுக்கு உட்படுத்துபவர்கள் தொடர்பிலான தகவல்களை 1929 என்ற இலக்கத்திற்கு வழங்குமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் கலாநிதி உதயகுமார அமரசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். இணையத்தளம் ஊடாக கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதன் காரணமாக சிறுவர்கள் ஸ்மார்ட் தொலைபேசிகளை பயன்படுத்துகின்றனர். இதன்போது, பலர் சிறுவர்களை பல்வேறுப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுத்துகின்றனர். இதுபோன்ற பல சம்பவங்கள் தற்போது பதிவாகியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் கலாநிதி உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போது விஜய்யின் சிறு வயதில் எடுக்கப்பட்ட அரிய வீடியோ ஒன்று டுவிட்டரில் வைரல் ஆகி வருகிறது. இவ் வீடியோவில் விஜய் தனது தங்கை வித்யாவின் புகைப்படத்திற்கு மலர்தூவி பிராத்தனை செய்கிறார். வாரிசு திரைப்படம் நடிகர் விஜய் தமிழ் சினிமா மட்டுமன்றி ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களின் மனம்கவர்ந்த ஒரு பிரபலம். தமிழை தாண்டி ஹிந்தியில் கூட விஜய்யின் படங்களுக்கு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இப்போது பீஸ்ட் படத்தை தொடர்ந்து வாரிசு எனும் திரைப்படத்தில் அவர் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் படத்தின் First லுக் மட்டும் இதுவரை வெளிவந்துள்ளது. அடுத்த அப்டேட்டிற்காக ரசிகர்கள் மரண வெயிட்டிங்.
பிஸ்கட், சவர்க்காரம், சலவை தூள், உடனடி நூடில்ஸ், சோயா உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் தற்போது வெகுவாக அதிகரித்துள்ளன. அரசாங்கத்தினால் அத்தியாவசிய உள்ளிட்ட ஏனைய பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலை விதிக்கப்படாவிட்டால் சில பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கக் கூடும் என நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரித்துள்ளது. அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை மாத்திரமே தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக சந்தையில் ஏனைய பொருட்களுக்கான விலைகளை வர்த்தகர்கள் மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் அடிக்கடி அதிகரிப்பதாக அந்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. பொதி செய்யப்பட்ட உற்பத்தி சார்ந்த பொருட்களின் விலைகள் அண்மைய காலமாக பல தடவைகள் அதிகரிக்கப்பட்டன. அரசாங்கத்தினால் கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்படாமையே இதற்கான காரணம் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. அதிக விலைக் காரணமாக சில பொருட்களை நுகர்வோர் கொள்வனவு செய்வதை தவிர்த்து வருகின்றனர்.
ஏர்போர்ட் அண்ட் ஏவியேஷன் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் தனது புதிதாக நிறுவப்பட்ட சேவைத் தயாரிப்பான ‘கோல்ட் ரூட்’ இன்று பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) அறிமுகப்படுத்தியது. கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக பயணிக்கும் அதன் பெறுமதிமிக்க பயணிகளுக்கு ‘பிரீமியம் விமான நிலைய அனுபவத்தை’ வழங்கும் நோக்கில் புதிய சேவை தயாரிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக, விமான நிலையம் வணிக ரீதியில் முக்கியமான பயணிகளுக்கு பட்டு வழி சேவை வசதியை மட்டுமே கட்டண அடிப்படையில் வழங்கியது. எனவே, விமானப் போக்குவரத்து மற்றும் சுற்றுலாத் துறையின் பயணத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், நாட்டிற்கு கூடுதல் அந்நியச் செலாவணியைப் பெறுவதற்கும் பங்களிக்கும் நோக்கத்துடன் ‘GOLD ROUTE’ தொடங்கப்பட்டது. இந்தச் சேவையின் தனித்துவமான அம்சம் என்னவென்றால், உயர்நிலைப் பயணிகள் பிரீமியம் சேவை அனுபவத்துடன் வருகை மற்றும் புறப்பாடு செயல்முறைகளை விரைவுபடுத்த பிரத்யேக வழியைப் பயன்படுத்த முடியும் என்பதாகும். கோல்ட் ரூட்டில் விருந்தினர்கள் அனைவரும் சுங்கம், குடிவரவு மற்றும்…
காதலி உயிரிழந்த சோகத்தில் 10ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். காதலியை அடக்கம் செய்த இடத்திலேயே தன்னையும் அடக்கம் செய்யுமாறு அந்தச் சிறுவன் உருக்கமாக பேசியிருக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. தமிழகத்தின் தென்காசி மாவட்டம், மடத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கபிலன் என்பவரின் 16 வயது மகனே தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். குறிப்பிட்ட சிறுவன் இன்னொரு சிறுமியைக் காதலித்து வந்துள்ளார். அந்தச் சிறுமி அண்மையில் உயிர் இழந்ததையடுத்து, அந்த சோகத்திலேயே இருந்த சிறுவன், தன் கழுத்தில் தூக்குக்கயிறு மாட்டிக்கொண்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுவிட்டு, தற்கொலை செய்து கொண்டுள்ளார். அந்த வீடியோவில், “என் காதலி இறந்த சோகத்தில் நானும் தற்கொலை செய்து கொள்கிறேன். என் காதலியை புதைத்த இடத்திலேயே என்னையும் புதைத்து விடுங்கள்” என உருக்கமாகப் பேசி உள்ளார். இதனிடையே சிறுவனின் பெற்றோர் சிறுவனின் தற்கொலையை மறைத்து அடக்கம் செய்ய முயன்றுள்ளனர். இதுகுறித்து தேவகுளம் பொலிஸாருக்குப் புகார் சென்றுள்ளது. அவர்கள்…
மன்னார் நீதிமன்றத்தில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த சான்றுப் பொருட்கள் சிலவற்றை திருடிய மன்னார் நீதிமன்றத்தில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் காவலாளி ஆகிய இருவரையும் இன்று (18) காலை மன்னார் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,, மன்னார் நீதவான் நீதிமன்றில் சான்றுப் பொருட்களாக காணப்பட்ட ஒரு தொகுதி பொருட்களை கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மற்றும் காவலாளி ஆகிய இருவரும் திருடி உள்ளதாக மன்னார் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் இன்று(18) காலை விரைந்து செயல்பட்ட மன்னார் பொலிஸார் மன்னார் நீதிமன்றத்தின் காவலாளி தங்குமிட பகுதியை சோதனையிட்டுள்ளனர். இதன் போது திருடப்பட்ட சான்றுப் பொருட்களான ஒரு தொகுதி கேரள கஞ்சா பொதி, முந்திரிகை விதைகள், மீன்பிடி வலைகள் மற்றும் சட்டவிரோத மதுபானம் (கசிப்பு) ஆகியவற்றை மன்னார் பொலிஸார் மீட்டுள்ளனர். இதன் போது குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்ட மன்னார்…
தனது 3 வயது குழந்தைக்கு முன்னால் இளம் தாய் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளான சம்பவம் ஒன்று அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட மாளிகைக்காடு கிழக்கு பகுதியில் பதிவாகியுள்ளது. கடந்த மாதம் 03 ஆம் திகதியன்று 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கணவன் வீட்டில் இல்லாத வேளை அவரது 3 வயது பிள்ளை பார்த்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அயலவர் ஒருவரினால் கத்தி மூலம் அச்சுறுத்தபட்டு பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளானதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் குறித்த முறைப்பாட்டில் பாதிக்கப்பட்ட பெண் சுமார் 1 வயது மற்றும் 3 வயது பெண் குழந்தைகளின் தாய் என்பதுடன் மாளிகைக்காடு கிழக்கு பகுதியில் உள்ள வீடொன்றில் வாடகை அடிப்படையில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் கணவன் இல்லாத நேரத்தில் குறித்த பெண் தனிமையில் இருந்துள்ளதுடன் இரவு 7 மணியளவில் அத்துமீறி பிரவேசித்த நபர் 3 வயதான தனது மகள் பார்த்து கொண்டிருந்த வேளை கத்தி மூலம் அச்சுறுத்தி…
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கோரிக்கை விடுத்துள்ளது. ராஜபக்ச வருகையை தொடர்ந்து அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் தேவையான வசதிகளை செய்து தருமாறும் SLPP கேட்டுக்கொள்கிறது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
QR கோட்டாவை விட அதிகமாக எரிபொருள் வழங்க மறுத்த சிபெட்கோ முகாமையாளர் ஒருவர் மீது குண்டர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மொனராகலையில் உள்ள சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையத்தின் முகாமையாளர் ஒருவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அங்கிருந்த CCTV கெமராவில் பதிவாகியுள்ளது. தாக்குதலுக்குள்ளான எரிபொருள் நிரப்பு நிலையத்தின் முகாமையாளர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.