2021 ஆம் ஆண்டு சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை சுமார் ஒரு மணித்தியாலத்தின் பின்னர் இலங்கை பரீட்சைகள் திணைக்களம் வெளியிடும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதன் மூலம் மாணவர்கள் பெறுபேறுகளை அறிய முடியும் கடந்த மே மாதம் நாடளாவிய ரீதியில் 3,844 பரீட்சை நிலையங்களில் க.பொ.த சாதாரண தரப்பரீட்சை நடைபெற்றிருந்தமைமை குறிப்பிடதக்கது.
Author: admin
சீனாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட டீசல் சரக்குகளை ஏற்றிய ‘சூப்பர் ஈஸ்டன்’ என்ற கப்பல் சிங்கப்பூரில் இருந்து நாட்டிற்கு வரவுள்ளதாக சீன தூதரகம் அறிவித்துள்ளது. அந்த கப்பலில் இருந்து 10.6 மில்லியன் லீற்றர் (9,000 மெட்ரிக் தொன்) டீசல் இலங்கைக்கு கொண்டு வரப்படுவதாக சீன தூதரகம் தனது ருவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது. இந்த கப்பல் நாளை கொழும்பை வந்தடையவுள்ளதாகவும் சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்காக சீனாவினால் இந்த டீசல் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.
தேசிய பேரவையினால் முன்வைக்கப்படும் பிரேரணைகள் மற்றும் பரிந்துரைகளை செயற்படுத்துவதைக் கண்காணிப்பதற்கு சட்டரீதியான விசேட நிறுவனமொன்றை அமைப்பது தொடர்பில் தேசிய பேரவையில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. தேசிய பேரவையினால் முன்வைக்கப்படும் பிரேரணைகள் மற்றும் பரிந்துரைகள் ஆவணங்களாக மட்டுப்படுத்தப்படக் கூடாது எனவும், அவை செயற்படுத்தப்பட வேண்டும் எனவும், அவை பின்தொடரப்பட வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ மற்றும் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோர் இதன்போது சுட்டிக்காட்டினர். அதற்காக சட்டரீதியான நிறுவனமொன்றை உருவாக்க வேண்டும் அல்லது ஏற்கனவே காணப்படும் நிறுவனமொன்றை மீள் கட்டமைப்பு செய்ய வேண்டும் என அவர்கள் குறிப்பிட்டனர். பிரதமர் தினேஷ் குணவர்தன இந்தப் பிரேரணை தொடர்பில் தனது இணக்கத்தை வெளியிட்டதுடன், விரைவில் இவ்வாறான நிறுவனமொன்றை அமைப்பதற்கான வாய்ப்புக் குறித்து ஆராய்ந்து பார்ப்பதாகவும் தெரிவித்தார். பிரதமர் தினேஷ் குணவர்தனவின் பங்குபற்றலுடன் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தில் நேற்றுக் (24) கூடிய தேசியப் பேரவைக் கூட்டத்திலேயே இது பற்றிக் கலந்துரையாடப்பட்டது.…
அடுத்த ஆண்டில் பாடசாலை விடுமுறை நாட்களை குறைத்து, அந்த வருடத்திற்குள்ளேயே பாடத்திட்டங்களை பூர்த்தி செய்யக்கூடிய வகையிலான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். திட்டமிட்டவாறு இந்த ஆண்டு இறுதிக்குள் பாடத்திட்டங்களை நிறைவு செய்யவே தீர்மானித்திருந்த போதிலும், உயர்தரப் பரீட்சையை ஜனவரிக்கு ஒத்தி வைக்க நேரிட்டதால், தவணைகள் தள்ளிப் போயுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் பாடசாலை உபகரணங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள செஸ் வரியை குறைப்பது தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சுற்றுலாப் பயணிகளுக்கான முதல் 20 இடங்களுக்குள் இலங்கை தரப்படுத்தப்பட்டுள்ளது. பிரபல மற்றும் செல்வாக்கு மிக்க சஞ்சிகையான கொன்டே நாட் ட்ரவலர்ஸ் நடத்திய 2022 வாசகர்களின் தெரிவுகளின்படி, பயணிகளுக்கான சிறந்த நாடாக இலங்கை 17வது இடத்தைப் பெற்றுள்ளது. போர்த்துக்கல், ஜப்பான் மற்றும் தாய்லாந்து ஆகியவை பயணிகளுக்கான முதல் மூன்று இடங்களாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இந்தநிலையில் இஸ்ரேல், துருக்கி மற்றும் தென்னாபிரிக்கா போன்ற நாடுகளை விட இலங்கை, இந்த தரப்படுத்தலில் முன்னணியில் உள்ளது.
பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் விரைவில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதன்படி, எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, பாடசாலை உபகரணங்களுக்கான செஸ் வரியை நீக்குவது தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் பிரேரணை சமர்ப்பிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் பதவியை பொறுப்பேற்க தான் ராஜபக்சர்களிடம் மலர்த் தட்டை ஏந்திச் செல்லவில்லை எனவும்,கோட்டாபய ராஜபக்ச விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க எழுத்துப்பூர்வமாக பகிரங்கமாக தனது பதிலைத் தெரிவித்ததாகவும், இது கட்சியின் பாராளுமன்ற குழு,ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணிக் கட்சிகளின் கூட்டுப் உடன்பாடு மற்றும் பங்களிப்புடனும் மேற்கொள்ளப்பட்ட ஒன்றாகும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று(25) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். தாம் எழுதிய கடிதத்தின் ஒரு பகுதியை மாத்திரம் முன்வைத்த வன்னம் ஜனாதிபதி உண்மையான நிலைப்பாடுகளை திரிபுபடுத்தியுள்ளார் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,தான் உட்பட ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணி நிபந்தனைகளுடனையே உரிய கோரிக்கையை முன்வைத்ததாகவும் அவர் தெரிவித்தார். நிபந்தனையின்றி பட்டம் பதவி சலுகைகளை ஏற்றுக் கொள்வதற்காக தான் ஒருபோதும் செயற்படவில்லை என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்,அவ்வாறான பதவி வெறி தனக்கோ அல்லது ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணிக்கோ இல்லை எனவும் அவர் தெரிவித்தார். ஜனநாயக ரீதியிலான மக்கள் போராட்டமும்,…
2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதத்தின் 03வது நாள் விவாதம் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெறுகிறது. மின்சாரம், எரிசக்தி மற்றும் நீர் வழங்கல் அமைச்சுக்கள் தொடர்பான செலவின தலையீடுகள் குறித்து இன்று விவாதிக்கப்படவுள்ளது. நேற்றைய தினம் பாதுகாப்பு, பொது பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப அமைச்சகங்கள் தொடர்பான செலவின தலைப்புகள் மீது விவாதம் நடத்தப்பட்டது. இதன்போது பாதுகாப்பு அமைச்சின் வரவு செலவு திட்டம் தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் தெரிவித்திருந்தார். இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட, வாக்கெடுப்பில் அதற்கு ஆதரவாக 91 வாக்குகளும் எதிராக 10 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
கோட்டாபய ராஜபக்சவுக்கு வழங்கப்பட்ட தவறான புலனாய்வு தகவல்களே அவர் நாட்டில் இருந்து வெளியேற காரணமாக அமைந்தது என முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று -24- வரவு செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். பாதுகாப்பு படைகளை வலுப்படுத்தி,படைகளுக்கு வசதிகளை வழங்கி,அவற்றுக்கு கட்டடங்களை வழங்குவதன் மூலம் நாட்டில் இருக்கும் அரசியல், சமூக, பொருளாதார நெருக்கடியை தீர்க்க முடியாது. இதனை நாம் அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டும். 2019 ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்பு என்ற பிரதான கோஷத்தை முன்வைத்தே தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. நாட்டிற்கு பாதுகாப்பு இல்லாமல் போயுள்ளது என்று என்னை கடுமையாக விமர்சித்தனர். நாட்டுக்கு பாதுகாப்பு வழங்க கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவு செய்யுங்கள் எனக்கூறினர். தேசிய பாதுகாப்பு என்பதே அனைவரதும் கோஷமாக இருந்தது. ஈஸ்டர் தாக்குதலை ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற சர்வதேச அமைப்பு செய்தது. அரசியல் ரீதியான…
கட்டாரில் நடைபெற்று வரும் 22-வது உலகக் கிண்ண உதைபந்து தொடரில் நேற்று நடைபெற்ற குழு – எச் பிரிவுக்கான லீக் போட்டியில் போர்த்துகல், கானா அணிகள் மோதின. முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதனால் 0-0 என சமனில் இருந்தது. இறுதியில், கானாவுக்கு எதிரான போட்டியில், 3-2 என்ற கோல் கணக்கில் போர்த்துகல் அணி வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில், போர்த்துகல் அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோ 65-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இந்நிலையில், 5 உலகக் கிண்ணத் தொடர்களில் (2006, 2010, 2014, 2018, 2022) கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ரொனால்டோ படைத்துள்ளார்.