அண்மையில், ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இலட்சினை கொடியை, படுக்கை விரிப்பாக பயன்படுத்தி, சமூக வலைத்தளத்தில் காணொளியைப் பகிர்ந்திருந்த நபர், காவல்துறையால் கைதுசெய்யப்பட்டுள்ளார். 54 வயதான அவர் ஐக்கிய மக்கள் சக்தியின் துறைமுக தொழிற்சங்கத்தின் முன்னாள் தலைவர் களுதந்திரிகே உதேனி ஜயரத்ன என்பவராவார் என காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
Author: admin
2022 ஜூலை மாதம் நிலவரப்படி, உலகம் முழுவதும் 15,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு குரங்கம்மை நோய் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையங்கள் (CDC) தெரிவிக்கின்றன. உலக சுகாதார அவசரநிலை என உலக சுகாதார அமைப்பு WHO வகைப்படுத்த வேண்டுமா என்று விவாதிக்க குரங்கம்மை நோய் நிபுணர்கள் வியாழக்கிழமை சந்தித்தனர். இதன்பிறகு, குரங்கம்மை பாதிப்பை பொது சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்திருக்கிறது. சாவோ பாலோவில் வசிக்கும் பிரேசில் நாட்டைச் சேர்ந்தவரான தியாகோ, அதிக காய்ச்சல், சோர்வு, நடுக்கம் மற்றும் உடல் முழுவதும் புண்கள் உள்ளிட்ட அறிகுறிகளுடன் உள்ளூர் மருத்துவமனைக்குச் சென்ற பிறகு, அவர் குரங்கம்மை பாதிக்கப்பட்டவர்களுள் ஒருவர் என்பதை அறிந்தார். ஆனால், அவரது ஆணுறுப்பு பகுதியில் வலி, வீக்கம் மற்றும் எரியும் உணர்வு இருப்பதே அவரது முக்கிய பிரச்சினை. அந்த உறுப்பில் குறைந்தது ஒன்பது தோல் புண்கள் தோன்றின. “இது மிகவும்…
உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை நேற்றைய தினமும் குறைந்துள்ளது. இதன்படி, மசகு எண்ணெய் 3 அமெரிக்க டொலரால் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பிரேன்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை நேற்றைய தினம் 103 அமெரிக்க டொலராக காணப்பட்டது. நேற்று முன்தினம் பிரேண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 107 அமெரிக்க டொலராக பதிவானமை குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் போரில் சுமார் 15,000 ரஷ்யர்கள் கொல்லப்பட்டதாகவும் மேலும் 45 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளதாகவும் அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது.
இலங்கையில் நிலவும் பசி தொடர்பான பிரச்சினைகள் மனிதனால் உருவாக்கப்பட்டவை என பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பசி மற்றும் பஞ்சத்தைத் தடுப்பது தொடர்பான சர்வதேச குழு கலந்துரையாடலில் உரையாற்றிய பதில் ஜனாதிபதி, இலங்கையில் பாரியளவில் பாதிப்பை ஏற்படுத்திய உரத்தை தடை செய்வதற்கான தீர்மானத்தின் விளைவாக இலங்கை தனது அரிசி தேவையில் மூன்றில் ஒரு பங்கை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டியதாயிற்று. மேலும், நாடு அந்நிய செலாவணி பற்றாக்குறையை சந்தித்து வரும் நேரத்தில், இந்த கோரிக்கைகளை நிறைவேற்றுவது கடினம் என்றும் அவர் கூறுகிறார். தற்போது இலங்கையில் 5 மாதங்களுக்கு தேவையான அரிசி கையிருப்பு உள்ளதாகவும், 3 மாதங்களுக்கு இறக்குமதி செய்ய வேண்டிய அளவு அரிசி கையிருப்பில் இருப்பதாகவும் பதில் ஜனாதிபதி கூறுகிறார். எவ்வாறாயினும், அடுத்த நான்கு மாதங்களுக்கு தீர்வு கிடைக்காத பட்சத்தில், இலங்கை மற்ற மாற்றுகளை நம்பியிருக்க வேண்டும். எனவே, அரசாங்கம் உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை முன்னெடுத்து வருவதாகவும், இதன்…
உலக உணவு நெருக்கடி தொடர்பில் G7 கூட்டமைப்பு இலங்கைக்கு 14 மில்லியன் அமெரிக்க டொலர்களை உணவுக்காக செலவிட முன்வந்துள்ளதாக தெரிவித்த பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகள் மண்டியிடுவதைத் தவிர்ப்பதற்கு நிறைய செய்ய வேண்டியுள்ளது என்றார். உணவுப் பாதுகாப்பு தொடர்பான சர்வதேச மாநாட்டின் போது உரையாற்றிய பதில் ஜனாதிபதி விக்ரமசிங்கே, உயர் பணவீக்கம் காரணமாக உணவுப் பொருட்கள் மக்களுக்கு எட்டப்படவில்லை என்று கூறியுள்ளார். “இலங்கையில் சுமார் 6 மில்லியன் மக்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் அவதிப்படுவதாக கூறப்படுகிறது. மற்ற அறிக்கைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் 7.5 மில்லியன் பேர் வரை இருக்கலாம் என்று கூறுகின்றன. இலங்கையின் சராசரி நெல் உற்பத்தி பொதுவாக 24 மில்லியன் மெட்ரிக் டன் ஆகும். இருப்பினும், உற்பத்தி 2021 இல் 16 மில்லியன் மெட்ரிக் தொன்களாக காணப்பட்டன. எனவே இலங்கை தனது அரிசி தேவையில் மூன்றில் ஒரு பகுதியை இறக்குமதி செய்ய வேண்டும்.…
வலுவான பொருளாதார அமைப்பு இல்லாத அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் பொருளாதார வீழ்ச்சிக்கு இலங்கை சிறந்த உதாரணம் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. தற்போதைய உலகப் பொருளாதார நிலை காரணமாக அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருவதாக அதன் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியாவா சுட்டிக்காட்டியுள்ளார். G20 நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் கூட்டத்தில் உரையாற்றிய கிறிஸ்டலினா ஜோர்ஜியாவா இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். உக்ரைன் போருடன், உலக உணவு மற்றும் பொருட்களின் விலைகள் கடுமையான அழுத்தத்தில் இருப்பதாகவும், உலகளாவிய நிதி நிலைமைகள் எதிர்பார்த்ததை விட இறுக்கமாகி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த நிலையில், அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு வலுவான கொள்கைத் தலையீடு தேவை எனவும், இலங்கையை எச்சரிக்கை அடையாளமாக சுட்டிக்காட்ட முடியும் எனவும் கிறிஸ்டலினா ஜோர்ஜியாவா மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தொலைபேசி மற்றும் இணைய சேவைக் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உடன் நடைமுறைக்கு வரும் வகையில் பெறுமதி சேர் வரி (வட் வரி) 12% ஆக நேற்று முன் தினம் முதல் அதிகரிக்கப்பட்டிருந்தது. பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன், தொலைத்தொடர்புகள் தீர்வை 15%ஆகவும் அதிகரிக்கப்படுமென மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையிலேயே வரி அதிகரிப்பு காரணமாக தொலைபேசி மற்றும் இணைய சேவைக் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. என்ற போதும் குறித்த கட்டண அதிகரிப்புக்கான விபரங்கள் தொடர்பிலான அறிவிப்புக்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் விடைத்தாள் மதிப்பீடு பணிகள் எதிர்வரும் 17ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார். சாதாரண தரப் பரீட்சை நேற்று(01) நிறைவடைந்தது. விடைத்தாள் மதிப்பீடுப் பணிகள் இரண்டு கட்டங்களாக இடம்பெறவுள்ளன. முதல் கட்டம் எதிர்வரும் 17ஆம் திகதியிலிருந்து 26ஆம் திகதி வரை நடைபெறும். இரண்டாம் கட்டம் எதிர்வரும் 30ஆம் திகதியிலிருந்து ஜூலை மாதம் 9ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. விடைத்தாள் மதிப்பீடுப் பணியில் ஈடுபடவுள்ள ஆசிரியர்களை தெளிவூட்டும் கருத்தரங்கு எதிர்வரும் 5ஆம் திகதியிலிருந்து 8ஆம் திகதி வரை இரண்டு கட்டங்களாக இடம்பெறும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார். சவால்களுக்கு மத்தியில் இம்முறை கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சையை வெற்றிகரமாக நடத்த முடிந்துள்ளது. பரீட்சைகள் பற்றி சில முறைபாடுகள் மாத்திரமே கிடைக்கப் பெற்றதாகவும் அவர் கூறினார். அந்த முறைபாடுகள் பற்றிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் பரீட்சைகள்…
கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதியில் இருந்து மே மாதம் 15 ஆம் திகதி வரையான காலத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற தீ வைப்பு சம்பவங்கள், கொள்ளைச் சம்பவங்கள் மற்றும் ஆட்கொலை சம்பவம் தொடர்பில் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதியினால் ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற நீதியரசரான ஜனாதிபதி சட்டத்தரணி P.B.அலுவிஹாரே இந்த ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.