இலங்கை மத்திய வங்கி (CBSL) தனது உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் தினசரி மாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. இன்றைய மாற்று விகிதங்கள் இங்கே: USD Buy 357.2753 Sell 368.5064 GBP Buy 433.3179 Sell 450.6927 EUR Buy 363.8068 Sell 378.5549 JPY Buy 2.6851 Sell 2.7922 AUD Buy 247.9039 Sell 259.5715
Author: admin
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு சிங்கப்பூர் அரசாங்கம், எந்த சலுகையும், விருந்தோம்பலும் அளிக்கவில்லை என்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கோட்டாபய ராஜபக்ஷவின் சிங்கப்பூர் வருகை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஜெரால்ட் கியாமின் கேள்விக்கு பாலகிருஷ்ணன் நேற்று (08) எழுத்துப்பூர்வமாக இந்த பதிலை வழங்கியுள்ளார். பொதுவாக, சிங்கப்பூர் அரசாங்கம் முன்னாள் அரச தலைவர்கள் அல்லது தலைவர்களுக்கு சலுகைகள், மற்றும் விருந்தோம்பல் ஆகியவற்றை வழங்குவதில்லை. இதன் அடிப்படையில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் எந்தவித சலுகைகளோ, விருந்தோம்பலோ வழங்கப்படவில்லை என்று பாலகிருஸ்ணன் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு 03 இல் அமைந்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, நேற்றிரவு (ஓகஸ்ட் 01) பிலியந்தலை மற்றும் நாரஹேன்பிட்டி பகுதிகளில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள், 18 மற்றும் 22 வயதுடையவர்கள், மடபாத மற்றும் கொழும்பு 05 பிரதேசங்களில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த மாதம், ஜூலை மாதம் 09 ஆம் திகதி இடம்பெற்ற இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை நாடவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்கள் தொடர்பிலான தகவல்களை வட்ஸ்அப் அல்லது தொலைபேசி அழைப்புகள் ஊடாக 0718 594950 / 0718 594929 / 0112 422176 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு வழங்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதலில் அல்-கொய்தாவின் தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரியை கொன்றதாக அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் உறுதிப்படுத்தியுள்ளார். 11 ஆண்டுகளுக்கு முன்பு ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதில் இருந்து அல்-கொய்தா அமைப்பிற்காக சர்வதேச அளவில் தோன்றிய ஒரே தலைவராக ஜவாஹிரி அறியப்படுகிறார். ஆப்கானிஸ்தானின் காபூலில் பாதுகாப்பான வீட்டில் இருந்தபோது அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஜவாஹிரி தனது 71 வயதில் இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
புதிதாக பிறக்கும் குழந்தைக்கு வழங்கும் பிறப்புச் சான்றிதழில் தேசிய அடையாள இலக்கத்தை உள்ளீடு செய்யும் நடைமுறை நேற்று (01) முதல் ஆரம்பகட்டமாக முன்னெடுக்கப்படுவதாக இலங்கை ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த 2021 டிசம்பர் 14ம் திகதியின் அமைச்சரவை தீர்மானத்துக்கமைய, குழந்தை பிறப்பின்போது, பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் வழங்கப்படும் பிறப்புச்சான்றிதழில் ஆட்பதிவு திணைக்களத்தினால் வழங்கப்படும் தேசிய அடையாள இலக்கம் உள்ளீடு செய்யப்படும். இதற்காக மேற்படி இரு திணைக்களங்களுக்கும் இடையில் இணையம் மூலம் தகவல்கள் பரிமாற்றம் இடம்பெறும். இந்த புதிய பிறப்புச் சான்றிதழ் வழங்கும் பரீட்சார்த்த திட்டம் கம்பஹா, தெஹிவளை, ஹங்குராங்கெத்த, குருணாகல், இரத்தினபுரி மற்றும் தமன்கடுவ ஆகிய பிரதேச செயலகங்கள் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ளது. இவ்வாறு பிறப்புச் சான்றிதழை பெறும் ஒருவர் தனக்கு 15 வயது முடிவடைந்ததன் பின்னர் தேசிய அடையாள அட்டையை பெற விண்ணப்பிக்கையில், மேற்படி பிறப்பு சான்றிதழில் உள்ள அடையாள இலக்கத்திலேயே தனக்கான தேசிய அடையாள அட்டையை பெறமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது.…
நுவரெலியா மாவட்டத்தில் நேற்று (31) இரவு ஆரம்பித்த கடும் மழையினால் இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காணாமல் போயுள்ளார். நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. ஹட்டன் பகுதியில் புகையிரத சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், மலையக பிரதேசங்களில் வீதி போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. கினிகத்தேன – பொல்பிட்டிய பிரதேசத்தில் களனி ஆற்றின் மேல் நீரோடை கிளையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஒரு பெண் (60) மற்றும் அவரது பேத்தி (05) ஆகியோர் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, கினிகத்தேன விதுலிபுர கிராமத்தில் மண்சரிவினால் இரண்டு வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன. இதனையடுத்து இரண்டு வீடுகளிலும் வசிக்கும் 6 பேரில் 38 வயதுடைய நபர் ஒருவர் காணாமல் போயுள்ளதுடன் அவரை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். மேலும், மண்சரிவு மற்றும் பாறைகள் வீதியில் விழுந்துள்ளதால் பல வீதிகள் மூடப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ரஞ்சித் அழககோன் தெரிவித்தார். ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் மண்சரிவு…
அமைச்சர் கஞ்சன விஜேசேகர டுவிட்டர் செய்தியின்படி இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்புக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன் அடிப்படையில் ஒரு மாத காலத்துக்குள் குறித்த முன்மொழிவுகள் பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அபுதாபி: துபாயில் நடந்த சர்வதேச திருமதி அமீரகம் 2022 என்ற திருமணம் செய்தவர்களுக்கான அழகி போட்டியில் மதுரையை சேர்ந்த பெண் ஜனனி ஷங்கர் Mrs.Elegant என்ற பட்டம் வென்று இருக்கிறார். மதுரையை சேர்ந்த ஜனனி ஷங்கர். சென்னையில் குடியேறிய இவர் தற்போது அரபு நாடுகளில் ஒன்றான பஹ்ரைனில் உள்ள முன்னணி நிறுவனத்தில் பொறியியல் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது தந்தை பஹ்ரைனில் பணிபுரிந்து வந்ததால் 4 வயதிலேயே பஹ்ரைனுக்கு செல்லக்கூடிய வாய்ப்பை இவர் பெற்றோர். கல்வி எட்டாம் வகுப்பு வரை பஹ்ரைனில் உள்ள இந்திய பள்ளியில் படித்த அவர், 9 மற்றும் 10 ஆகிய வகுப்புகளை திருச்சி தனியார் பள்ளியிலும், 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளை திருச்சி தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் படித்தார். அதன் பின்னர் புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன்ஸ் பிரிவில் பொறியியல் பட்டப்படிப்பை நிறைவு செய்தார். சமூக…
இன்று (01) முதல் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை 2022ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பங்கள் ஒன்லைன் முறையின் மூலம் கோரப்படவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி விண்ணப்பிக்கும் அனைத்து மாணவர்களும் www.doenets.lk அல்லது www.onlineeexams.gov.lk/eic என்ற பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தின் ஊடாக தமது விண்ணப்பங்களை ஒன்லைனில் சமர்ப்பிக்க முடியும். மேலும் இப்பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் அரச பாடசாலை மாணவர்கள் ஏற்கனவே தமது பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை (username and password) பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. தனிப்பட்ட விண்ணப்பதாரர்களை பொறுத்தவரை, அவர்கள் உரிய அறிவுறுத்தல்களின்படி விண்ணப்பப் படிவத்தை ஆன்லைனில் பூர்த்தி செய்ய முடியும். மேலும் அதன் அச்சிடப்பட்ட நகல் கிடைத்த பின்னர், தேவை ஏற்படும் பட்சத்தில் அதனை வழங்குவதற்காக தம்வசம் வைத்திருக்க வேண்டும் என பரீட்சை திணைக்களம் அறிவுறுத்துகிறது.
இங்கிலாந்தின் பர்மிங்ஹாமில் நடைபெற்றுவரும் 22 ஆவது பொதுநலவாய விளையாட்டு போட்டியில் இலங்கை தனது முதலாவது பதக்கத்தினை பெற்றுள்ளது. ஆண்களுக்கான பளுதூக்கும் போட்டியின் 55 கிலோ கிராம் எடைப்பிரிவில் இலங்கை பளுதூக்கும் வீரர் திலங்க இசுரு குமார வெண்கலப் பதக்கத்தை வென்று இலங்கைக்கு முதலாவது பதக்கத்தை பெற்றுக் கொடுத்துள்ளார்.