வவுனியா வடக்கு நெடுங்கேனி பகுதியில் நேற்றையதினம் (24) கிணற்றிலிருந்து இளைஞரின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த இளைஞரின் வீட்டின் கிணற்றிலிருந்தே இளைஞரின் சடலம் மீட்பட்டதுடன் இளைஞரின் மரணம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நெடுங்கேனி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 26 வயதுடைய சந்திரபாலசிங்கம் பிரதாபன் என்ற இளைஞரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
Author: admin
தற்போதுள்ள தற்காலிக அமைச்சரவைக்கு பதிலாக, புதிய அமைச்சரவையை இடைக்கால பாதீடு முன்வைக்கப்பட்டதன் பின்னர் நியமிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சர்வகட்சி வேலைத்திட்டத்தின் கீழ் இந்த புதிய அமைச்சரவை நியமிக்கப்படுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் குறிப்பிடுகின்றன. திருத்தப்பட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் எதிர்வரும் 30ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன், அதன் பின்னர் இந்த புதிய அமைச்சரவையை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ள போதிலும், இதுவரையில் எவ்வித இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை. நியமிக்கப்படவுள்ள புதிய அமைச்சரவையில் தற்போது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் அமைச்சுப் பதவிகளை வகிக்கும் அமைச்சர்கள் பலர் உள்வாங்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
பயிர்ச்செய்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விலங்குகளின் பட்டியலில் இருந்து, காட்டு யானைகளை நீக்க நடவடிக்கை எடுக்குமாறு, விவசாயம், வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர, அதிகாரிகளை அறிவுறுத்தியுள்ளார். பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் விலங்குகளிடையே, காட்டு யானைகளால் பயிர்களுக்கு ஏற்படும் சேதம் 20 சதவீதம் என்ற அளவானதாகும் என வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. சுமார் 46 சதவீத சேதங்கள், குரங்கு, பன்றி, மயில், காட்டுப் பன்றி மற்றும் காட்டு அணில் என்பனவற்றால் ஏற்படுவதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
ரஷ்யாவிற்கு அஞ்சல் பொருட்களை அனுப்பும் பணி இன்று (25) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவிற்கு அனுப்பப்படும் தபால் பொருட்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்று (25) முதல் தபால் திணைக்களத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும் என அஞ்சல்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். விமானப் போக்குவரத்துக் சிக்கல் காரணமாக, ரஷ்யாவுக்கான அஞ்சல் பொருட்களை அனுப்பும் செயற்பாடு தற்காலிகமாக அஞ்சல் திணைக்களத்தால் இடைநிறுத்தப்பட்டது.
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்று அனுப்பி வைத்துள்ளார். கடந்த 22 ஆம் திகதி நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 10 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஜுன் மாதத்திலிருந்து தொடர்ச்சியாக 5 ஆவது சம்பவமாக இது பதிவாகியுள்ளது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிப்பதாகவும் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது வரை தமிழகத்தைச் சேர்ந்த 94 மீன்பிடிப் படகுகள் இலங்கை வசம் உள்ளன. அவற்றின் உரிமையாளர்கள் இலங்கை நீதிமன்றத்தில் நேரில் முன்னிலையாகி, அவர்களது படகிற்கான உரிமையைக் கோர வேண்டுமென்ற நிபந்தனையின் பேரிலேயே கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் முன்னதாக விடுவிக்கப்பட்டனர். தற்போது இலங்கையில் நிலவும் சூழ்நிலை காரணமாக அவர்கள் இலங்கை…
கைது செய்யப்பட்ட எமது மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சமன் பெரேரா எதிர்வரும் 31ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் நேற்றைய தினம் தங்காலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் 5ஆம் திகதி தங்காலை மொரஹட்டியார பகுதியில் நபர் ஒருவரைக் கொலை செய்ததுடன் இருவரைக் காயப்படுத்திய குற்றத்துடன் தொடர்புடைய, சந்தேகநபர் மறைந்திருப்பதற்கு உதவிகளை வழங்கிய குற்றச்சாட்டின் பேரில், நேற்று தங்காலை காவல்துறையினால் கைது செய்யப்பட்டார். சந்தேகநபர் கொஸ்கொட பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கடந்த மே மாதம் 9ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவரின் வீடுகள் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பில் 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கிரிந்திவெல பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவண்ணவின் வீடு மற்றும் சொத்துக்களை சேதப்படுத்தி தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் நேற்று இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று பல தடவைகள் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவில் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 75 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும். மழை பெய்யும் சந்தர்ப்பங்களில், தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களைக் கோருகிறது.
கடன் நிவாரணம் தொடர்பான தனது நிலைப்பாட்டை வியத்தகு முறையில் மாற்றிக்கொள்ளுமாறு சீனாவை இலங்கை வலியுறுத்துகிறது என்று இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிக்கேய் ஏசியாவிற்கு (Nikkei Asia) வழங்கிய பிரத்தியேக நேர்காணலில், இது தொடர்பில் சீனாவுடன் உடன்பாட்டை எட்டுவது எளிதான காரியம் அல்ல என்பதை ஏற்றுக்கொண்டுள்ளார். பொருளாதாரத்தில் திவாலாகிவிட்ட இலங்கையின் சார்பில், நாட்டின் நிதிக் குழுவை வழிநடத்தும் ரணில் விக்ரமசிங்கவுக்கு, இது ஒரு வலிமையான சவாலாக அமைந்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் இன்று புதிய சுற்றுக் கலந்துரையாடல் ஆரம்பமாகியுள்ளது. இந்தநிலையில், ஏற்கனவே பெற்ற கடனை மறுசீரமைக்க வேண்டியதன் அவசியத்தை, சீன அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளதாக ரணில் விக்ரமசிங்க நிக்கேயிடம் கூறியுள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடனான சந்திப்புக்கு மத்தியில், சீனாவின் கடன் மறுசீரமைப்புக் காரணியே இலங்கையின் பொருளாதார அதிர்ஷ்டத்தை வடிவமைக்க உள்ளது என்பது யதார்த்தமான விடயமாகும். இலங்கைக்கு பல பில்லியன் டொலர் பிணை…
சீன உர நிறுவனத்துக்கு செலுத்தப்பட்ட பணத்தை மீள பெறுவது தொடர்பான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில், ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைத் தெரிவித்தார். இது குறித்து தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், சீனா உர நிறுவனத்துக்கு 6.9 மில்லியன் அமெரிக்க டொலர் செலுத்தப்பட்டுள்ளது. எனினும், நாம் திருப்பியனுப்பிய சேதன உரத்துக்கு பதிலாக சீன நிறுவனம் வேறு உரம் எதனையும் வழங்க இதுவரை முன்வரவில்லை. இது தொடர்பான நீதிமன்ற ரீதியான செயற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன. அத்துடன், அமைச்சின் மேலதிக செயலாளர் ஒருவர் தலைமையிலான குழுவினர் அந்நிறுவனத்துடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர். செலுத்தப்பட்ட பணத்தை மீள பெறுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், அது பலனளிக்கவில்லை. இரண்டாவது முயற்சியாக குறித்த நிறுவனத்திடம், திருப்பியனுப்பிய சேதன உரத்துக்கு பதிலாக இரசாயன உரம் கோரப்பட்ட போதும் அதற்கு இணங்கவில்லை. எமது…
இலங்கை எதிர்கொண்டுள்ள நிதி நெருக்கடிக்குத் தீர்வு வழங்குவதற்காக சர்வதேச நாணய நிதியத்துடனான ஆரம்ப கட்ட கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (24) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இலங்கையின் நிதி நெருக்கடியின் தற்போதைய நிலைமை குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது. மேலும் எதிர்வரும் 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இந்தக் கலந்துரையாடலில் மற்றொரு சுற்றுக் கலந்துரையாடலை நடத்துவதற்கும், எதிர்காலத்தில் மத்திய வங்கி அதிகாரிகளுடன் தொழிநுட்ப விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது. சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவர் பீட்டர் புரூபர், பிரதித் தலைவர் ஒசைரோ கொசையிகோ, சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி டுபாகன்ஸ் மற்றும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க உட்பட பலர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.