திங்கட்கிழமை (29) முதல் 2021 G.C.E உயர்தரப் பெறுபேறுகளை பாடசாலை அதிபர்கள் பதிவிறக்கம் செய்யலாம் என கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. உயர்தரப் பரீட்சையை மீள எழுத விரும்பும் விண்ணப்பதாரர்கள் செப்டம்பர் 8 ஆம் திகதி வரை ஆன்லைனில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என தர்மசேன தெரிவித்தார். 2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் ஞாயிற்றுக்கிழமை (28) வெளியிடப்பட்டன. பரீட்சைகள் திணைக்களத்தின் படி, மொத்தம் 272,682 பரீட்சார்த்திகள் A/L பரீட்சைக்கு தோற்றியிருந்தனர், அவர்களில் 171,497 பரீட்சார்த்திகள் பல்கலைக்கழக நுழைவுக்குத் தகுதி பெற்றுள்ளனர். 49 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
Author: admin
அரசாங்கத்தினால் பாடசாலை மாணவர்களின் போஷாக்கினை உறுதிப்படுத்துவதற்காக பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன . இதற்கென ஒதுக்கப்பட்டுள்ள நிதியின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதோடு பாடசாலை மாணவர்களுக்கு வழங்குவதற்காக 3000 டொன் துவரம் பருப்பு அமெரிக்காவிடமிருந்து கிடைக்கப் பெற்றுள்ளது. மேலும், 1700 டொன் டின் மீன் கிடைக்கப்பெறவுள்ளது இன்று கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் குறிப்பிடுகையில், ‘சிறுவர்களை பாதுகாப்போம்’ அமைப்புடன் கல்வி அமைச்சின் போஷாக்கு வேலைத்திட்ட பிரிவு ஒன்றிணைந்து பாடசாலைகளில் உணவு வழங்கும் வேலைத்திட்டத்தினை நாடளாவிய ரீதியில் முன்னெடுத்துள்ளது. ஆரம்பப் பிரிவில் 16 இலட்சத்து அதிகமான மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். அவர்களுக்கான உணவு வழங்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்காக பல்வேறு தனியார் நிறுவனங்கள் முன்வந்துள்ளன. இதற்கு முன்னர் பாடசாலைகளில் மதிய உணவு வழங்கப்படாத பாடசாலைகளிலும் அதற்காக வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டங்களுக்கான ஒத்துழைப்புக்களைப் பெற்றுக் கொள்வதற்காக நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் , அமெரிக்கா மற்றும் ரஷ்ய தூதுவர்களுடனும் கலந்துரையாடப்பட்டுள்ளது. அதற்கமைய பாடசாலைகளில் அதிகளவான மாணவர்களுக்கும் ,…
ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரியின் பிரிவிற்குட்பட்ட உணவகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது, மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற வகையில் உணவகங்களை நடத்திய 8 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. கடந்த 28ஆம் திகதி சுமார் 30 உணவகங்களில் பேரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு இருந்தன. இதன்போது, இராஜகிரியவில் உள்ள பிரபல உணவகத்தின் சமையல் அறையில் பூனை மலத்தை கண்ட சுகாதார வைத்திய அதிகாரிகள் அந்த உணவகம் மீது வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் இந்தச் சுற்றிவளைப்பில் குற்றம் சாட்டப்பட்ட எட்டு சந்தேகநபர்களும் கொழும்பு, அளுத்கடை மற்றும் கங்கொடவில நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். இந்த பரிசோதனையின் போது, சில கடைகளில் சமைத்த உணவுகளுடன் இறைச்சி மற்றும் மீன் குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளதை சுகாதார அதிகாரிகள் அவதானித்துள்ளனர்.
யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கான விமான சேவையை ஆரம்பிக்க எயார் இந்தியா நிறுவனம் தீர்மானித்துள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய எயார் இந்தியா நிறுவனம் அடுத்த மாதம் முதல் வாரத்திற்கு இரண்டு முறை பலாலிக்கு விமானங்களை இயக்கத் திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தாய்லாந்தில் தங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு உத்தியோகபூர்வ இல்லமொன்றை வழங்குவதற்கு சட்ட சிக்கல்கள் இருப்பதாக அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பதவிக்காலத்தை நிறைவு செய்யாமல் பதவியை இராஜினாமா செய்து தனது பொறுப்பை கோட்டாபய ராஜபக்ச கைவிட்ட நிலையில் அவருக்கு முன்னாள் ஜனாதிபதிக்கான சிறப்புரிமைகள் கிடைக்காது என தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும் கோட்டாபய ராஜபக்சவிற்கு உத்தியோகபூர்வ இல்லம் வழங்கப்படுமாயின் அதனை நீதிமன்றில் சவாலுக்கு உட்படுத்த நேரிடலாம் என்றும் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும், கோட்டாபய ராஜபக்ச இலங்கைக்கு வந்தால் அவருக்கு தேவையான பாதுகாப்பு வழங்கப்படும் எனவும், மிரிஹானில் உள்ள பிரத்தியேக வீட்டை உரிய முறையில் திருத்திக்கொடுக்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு கொழும்பு பௌத்தாலோக்க மாவத்தையில் உத்தியோகபூர்வ இல்லமொன்றை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முட்டைக்கான கட்டுப்பாட்டு விலை, அடுத்த இரண்டு வாரங்களில் திருத்தம் செய்யப்படும் என வர்த்தகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. பல்பொருள் அங்காடிகளில் விற்கப்படும் பொதி செய்யப்பட்ட முட்டைகளுக்கான தற்போதைய கட்டுப்பாட்டு விலை நியாயமற்றது என்பதால், பொதியிடல் செலவு உட்பட புதிய கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க அமைச்சு தீர்மானித்துள்ளது. அதன்படி, பொதிசெய்யப்பட்ட வெள்ளை மற்றும் சிவப்பு நிற முட்டைகளுக்கு தனித்தனியாக கட்டுப்பாட்டு விலைகள் நிர்ணயிக்கப்பட உள்ளன.
மே 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் போது நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள், சொத்துக்கள் மற்றும் அலுவலகங்களைத் தாக்கி, எரித்து, அழித்த சந்தேகநபர்கள் 3 பேர் நேற்று (28) கைது செய்யப்பட்டுள்ளனர். எம்.பிக்களான விமல் வீரவன்ச, லசந்த அழகியவன்ன மற்றும் அருந்திக பெர்னாண்டோ ஆகியோரின் சொத்துக்களை சேதப்படுத்தியமை தொடர்பிலேயே குறித்த மூவரும் கைது செய்யப்பட்டனர். ஹோகந்தர, கிரிந்திவெல மற்றும் தங்கொடுவ ஆகிய பகுதிகளில் வசிக்கும் 37, 43 மற்றும் 45 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு, மாலம்பே மற்றும் தங்கொடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 2ஆவது லீக் போட்டியில், இந்தியக் கிரிக்கெட் அணி, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. டுபாயில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், இந்தியக் கிரிக்கெட் அணியும் பாகிஸ்தான் அணியும் மோதின. குழு ‘ஏ’ பிரிவில் நடைபெற்ற இப்போட்டியில், நாணயசுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியக் கிரிக்கெட் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, 19.5 ஓவர்கள் நிறைவில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மொஹமட் ரிஸ்வான் 43 ஓட்டங்களையும் இப்தீகார் அஹமட் 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், புவனேஸ்வர் குமார் 4 விக்கெட்டுகளையும் ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட்டுகளையும் ஹர்ஸ்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும் அவீஷ்கான் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர். இதனைத்தொடர்ந்து 148 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இந்திய அணி, 19.4 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள்…
அமைச்சர்களான பந்துல குணவர்தன, பிரசன்ன ரணதுங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ஆகியோர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். கடந்த மே மாதம் 09 ஆம் திகதி மற்றும் அதன் பின்னர் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின்போது நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் எரிப்பு மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பான விசாரணைகள் தொடர்பிலேயே இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி விசாரணைக்கு தேவையான வாக்குமூலம் இன்று பதிவு செய்யப்பட உள்ளது.
சந்தையில் ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 350 ரூபாவாக அதிகரித்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கோதுமை மா இறக்குமதி செய்யும் இரண்டு பிரதான நிறுவனங்களிடமிருந்தும் நாளாந்தம் 25% மாத்திரமே சந்தைக்கு வெளியிடப்படுவதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. இந்தியா தற்காலிகமாக ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளதையடுத்து அங்கிருந்து இலங்கைக்கு கோதுமை மா கொண்டு வரும் வர்த்தகர்கள் மாவின் விலையை 350 ரூபாவாக உயர்த்தியுள்ளனர். எவ்வாறாயினும், இந்நிலை தொடர்ந்தால் பாண் ஒன்றை 250 முதல் 300 ரூபாவுக்கு வாங்க வேண்டிய நிலை ஏற்படுமென எச்சரித்துள்ளது.