போதையொழிப்பு தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு நற்பிட்டிமுனை அல் அக்ஸா மகா வித்தியாலயத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. கல்முனை தலைமையக பொலிஸாரின் ஏற்பாட்டில் கல்முனை பொலிஸ் நிலையத்தின் சமூக பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகர் ஏ எல்.ஏ.வாஹிட் நெறிப்படுத்தலில் இச்செயலமர்வு இடம்பெற்றது. மேலும் இச்செயலமர்வின் போது போதைப்பொருளின் தாக்கங்கள் சமூக ஊடகங்களின் தாக்கங்கள் வீதி போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பில் மாணவர்களுக்கு விளக்கவுரைகளும் நிகழ்த்தப்பட்டிருந்தையும் குறிப்பிடதக்கது.
Author: admin
ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இலங்கை மத்திய வங்கி 31.6 பில்லியன் ரூபாயை அச்சிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் மூலம் முதல் 8 மாதங்களில் மொத்தமாக 1,473.3 பில்லியன் ரூபாய் பணம் அச்சிடப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகின்றது. (R)
பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐநா பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் கலந்துகொள்ள மாட்டார் என பிரிட்டன் அரசு அறிவித்துள்ளது. பிரிட்டன் நாட்டின் அவசரகால பட்ஜெட் உள்பட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்த முடிவுகள் எடுக்கப்பட உள்ளதால் ஐநாவின் பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் கலந்துகொள்ள முடியாத சூழல் உருவாகியுள்ளதாக ரிஷி சுனக்கின் அலுவலகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் இந்த பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் கலந்து கொள்ளாத போதிலும், பிரிட்டன் அமைச்சர்கள் பலரும் இந்த மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசியின் கணவர், சுத்தியலால் தாக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வீட்டுக்குள் புகுந்த ஒருவரால் தாக்கப்பட்ட 82 வயதான பெலோசி, தலை மற்றும் வலது கையில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சந்தேக நபர் சன் பிரான்சிஸ்கோ வீட்டிற்குள் நுழைந்த பின்னர், சபாநாயகர் நான்சி பெலோசியைப் பார்க்க வேண்டும் என்று கோரியதாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில் கொலை முயற்சி உள்ளிட்ட குற்றச்சாட்டில் 42 வயதுடைய குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். எனினும் தாக்குதலுக்கான எந்த உள்நோக்கமும் தெரியவில்லை. தாக்குதலின் போது வோஷிங்டனில் இருந்த நான்சி பெலோசி – தனது கணவரை மருத்துவமனையில் பார்க்க விமானம் மூலம் திரும்பினார்.
கடந்த ஜனவரி மாதம் முதல் நேற்றைய தினம் (28) வரையில் மத்திய மாகாணத்தில் இலையான் கடிக்கு 24 பேர் இலக்காகி சிகிச்சை பெற்றுள்ளதாக மத்திய மாகாண சுகாதார அத்தியட்சகர் சாந்தி சமரசிங்க தெரிவித்துள்ளார். மத்திய மாகாண சுகாதார அத்தியட்சகர் காரியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வின்போது அவர் கருத்து தெரிவிக்கையில், லிஸ்பானியர் என்ற புதிய தோல் நோய் ஈ கடியினால் ஏற்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார். அவ்வாறு ஈ கடியினால் ஏற்பட்ட தோல் நோய் குணமாகாமல் உள்ள நோயாளிகளுக்கு உடன் தகுந்த வைத்தியரிடம் சிகிச்சை பெற்று கொள்ள வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த நோய் குணப்படுத்த முடியும் எனவும், பரவும் தன்மை கொண்டதால் உடனே சிகிச்சை பெற்று கொள்ள வேண்டும் எனவும் மத்திய மாகாண சுகாதார அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.
ஹெலிகொப்டரில் அழைத்து வரப்பட்ட முக்கியத்தர் ஒருவர், கொழும்பு தேசிய மருத்துவமனையின் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் கடற்படையின் முன்னாள் தளபதி என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹெலிகொப்டரில் அழைத்து வரப்பட்ட அவர், சாதாரண நடைமுறைகளுக்கு அப்பால், நேரடியாக அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்துடன் தேசிய மருத்துவமனையின் மருத்துவர்களுக்கு மேலதிகமாக வெளி மருத்துவர்களும் அவருக்கு சிகிச்சையளிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து மருத்துவமனை பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் பல மாதங்களாக மின்சாரக் கட்டணம் செலுத்தப்படாமையால் வைத்தியசாலையின் ஒரு பகுதியில் மின்சாரத்தை துண்டிக்க மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக வைத்தியசாலையின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார் . வைத்தியசாலையின் சிற்றுண்டிச்சாலை உட்பட பல பிரிவுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் நோயாளிகள் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கான 30 மில்லியன் ரூபா பணம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டதன் காரணமாக முன்னறிவிப்பு இன்றி மின்சாரம் துண்டிக்கப்படுவது பாரிய அநீதி என அவர் சுட்டிக்காட்டினார். எனினும் மின்சாரம் துண்டிக்கப்பட்ட சில மணித்தியாலங்களின் பின்னர் 16 மில்லியன் மின்சாரக் கட்டணம் செலுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார். கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் மின்சார கட்டணம் 8 மில்லியன் ரூபாவாக இருந்ததாகவும், ஆகஸ்ட் மாதத்தில் வைத்தியசாலையின் மின் கட்டணம் 13 மில்லியன் ரூபாவாக உயர்ந்ததாகவும் அவர் கூறியுள்ளார் . மருத்துவமனையின் துணை இயக்குநர் டொக்டர்…
பௌத்த துறவிகள் கல்வி கற்கும் பல்கலைக்கழகங்களில் ஒழுக்கம் சீர்குலைந்து வருவதாகவும், பொதுவாக பௌத்த பல்கலைக்கழகங்களுக்குள் நுழையும் துறவிகளில் 45% பேர் இறுதியாண்டில் துறவறத்தை நிறுத்திக்கொள்வது குறித்தும் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தலைமையில் கூடிய பௌத்தசாசன, சமய மற்றும் காலாசார அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் விவாதிக்கப்பட்டது. இந்நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் குழு வலியுறுத்தியது. அதற்கமைய, எதிர்காலத்தில் உயர்கல்வி அமைச்சுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார். அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற பௌத்தசாசன, சமய மற்றும் காலாசார அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் கூட்டம் நடைபெற்றபோதே அமைச்சர் இதனைக் கூறினார். வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் ஒருசில பௌத்த பிக்குமார் காரணமாக ஒட்டுமொத்த பௌத்த மதத்துக்கும் பாதிப்பு ஏற்படுவதாகவும், இவற்றை நிறுத்துவதற்கு அமைச்சு விரைவில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குழுவில் வலியுறுத்தப்பட்டது. மேலும், குறைந்த வயதில் சிறுவர்களைத் துறவறம் புகச் செய்வது தொடர்பில்…
ரி20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்காக அவுஸ்திரேலியா சென்ற வீரர் ஒருவருக்கு நாளை (29) சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. போட்டியின் போது உபாதைக்கு உள்ளான இலங்கை வேக பந்து வீச்சாளர் துஷ்மந்த சமிரவே இவ்வாறு சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். ரி20 உலகக் கிண்ணப் கிரிக்கெட் போட்டியின் போது ஏற்பட்ட உபாதை காரணமாக, அவர் அந்த போட்டியில் இருந்து விலகினார். அதன்படி அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நாளை காலை அவருக்கு சத்திரசிகிச்சை நடைபெற உள்ளது.
ஆசிய கிளியரிங் யூனியன், பொறிமுறையின் மூலம் இலங்கையுடன் பரிவர்த்தனைகளை செய்ய வேண்டாம் என்று, பங்களாதேஸின் மத்திய வங்கி, அந்த நாட்டின் வணிக வங்கிகளிடம் கோரியுள்ளது. 2022,அக்டோபர் 14, முதல் ஆசிய கிளியரிங் யூனியன் பொறிமுறையை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. இதனையடுத்து அனைத்து அங்கீகரிக்கப்பட்ட பங்குதாரர்களும், வர்த்தகம் மற்றும் எந்தவொரு வியாபாரத்தையும் அந்த பொறிமுறையின் ஊடாக மேற்கொள்ள வேண்டாம் என்று பங்களாதேஸ் மத்திய வங்கியான பங்களாதேஸ் வங்கியால் அறிவுறுத்தப்படடுள்ளார்கள். ஆசிய கிளியரிங் யூனியன் என்பது ஒரு ஏற்பாடாகும், இதன் மூலம் பங்கேற்கும் நாடுகள் உள்-பிராந்திய பரிவர்த்தனைகளுக்கான இறக்குமதி கட்டணங்களை தீர்த்துக்கொள்கின்றன.