Author: admin

தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்கும் வகையில் 7800 கல்லூரி ஆசிரியர்களுக்கு எதிர்வரும் ஜூன் 15ஆம் திகதி புதிய நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். உயர்தர வகுப்புகளில் கல்வி கற்கும் குறைந்த வருமானம் பெறும் மாணவர்களுக்காக இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் மகாத்மா காந்தி புலமைப்பரிசில் நிகழ்ச்சி இன்று கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் கல்வி அமைச்சில் இந்தியர்களின் பங்களிப்புடன் நடைபெற்றது. அடுத்த ஆண்டு சாதாரண தர பரீட்சை மற்றும் உயர்தரப் பரீட்சைகள் இரண்டையும் ஒரே வருடத்தில் நடத்தும் வகையில் படிப்பை வழமைக்கு கொண்டு வருவதன் மூலம் பரீட்சை அட்டவணை புதுப்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், எதிர்காலத்தில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ள பாடப் பிரிவுகளுக்கு அங்கீகாரம் பெற்று 35 வயதுக்குட்பட்ட பட்டதாரிகளை தேசிய மற்றும் மாகாண மட்டங்களில் ஆசிரியர்களாக இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

Read More

டுபாயிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 16 கோடி ரூபா பெறுமதியான, ஹூக்கா புகையிலை அடங்கிய கொள்கலன் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. இலங்கை சுங்கத் திணைக்களத்தின் துறைமுகக் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் சேகரிக்கப்பட்ட புலனாய்வு தகவல்களுக்கமைய மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணையின் பின்னர் சந்தேகத்துக்கிடமான இந்த கொள்கலன் கைப்பற்றப்பட்டது. கொள்கலனை ஆய்வு செய்தபோது, ​​அதிலிருந்து நீராவி புகைப்பிடித்தலுக்கு தேவையான ஹூக்கா புகையிலை அடங்கிய பக்கட்டுக்கள் கைப்பற்றப்பட்டன. அதில் தலா 50 கிராம் கொண்ட 160,200 சிறிய பக்கட்டுக்கள் காணப்பட்டதாகவும் அவற்றின் மொத்த எடை 8010 கிலோகிராம் என்றும் தெரியவந்துள்ளது. இதன் சந்தைப் பெறுமதி சுமார் 16 கோடியே 40 இலட்சம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளதாக சுங்கத்தினர் தெரிவிக்கின்றனர். இதில் 0.05% நிகோடின் உள்ளதுடன், இது இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்கு தடைசெய்யப்பட்டுள்ள ஒரு பொருளாகும். இந்தநிலையில், இவை போலி நிறுவனம் ஒன்றின் பெயரில் இறக்குமதிசெய்யப்பட்டுள்ளன. இது சுங்கத்திணைக்களம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

Read More

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிலுள்ள குருக்கள்மடம் பிரதேசத்தில் சந்தேகத்துக்கிடமாக நடாடிய 3 இளைஞர்களை பொதுமக்கள் சுற்றிவளைத்தபோது இருவர் தப்பியோடிய நிலையில் ஏறாவூரைச் சேர்ந்த இளைஞன் ஒருவரை மடக்கிபிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்த சம்பவம் நேற்று புதன்கிழமை (17) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். களுவாஞ்சிக்குடி மட்டக்களப்பு பிரதான வீதி குருக்கள்மடம் வீதி வளைவை அண்மித்த பகுதியில் நேற்று பிற்பகல் 2 மணிக்கு சந்தேகத்துக்கு இடமாக 3 இளைஞர்கள் நடமாடிக் கொண்டிருப்பதை அந்தபகுதி மக்கள் அவதானித்த நிலையில் அவர்கள் சிறுவர்களை கடத்தும் கும்பல் என அவர்களை சுற்றி வளைத்தனர். இதன் போது அங்கிருந்த இரு இளைஞர்கள் தப்பியோடியதையடுத்து அதில் ஒருவரை பொதுமக்கள் மடக்கிபிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்ததையடுத்து அவரை பொலிசார் கைது செய்தனர். இதில் கைது செய்யப்பட்டவர் ஏறாவூர் பிரNதுசத்தைச் சேர்ந்தவர் எனவும் இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More

மீரிகம கல்லெலிய பிரதேசத்தில் கேக் உற்பத்திக்கு பழம் பதப்படுத்தும் ஒரு நிறுவனத்தில் காலாவதியானது மற்றும் கரையான்கள் கொண்ட ஒரு தொகை பேரீச்சம் பழங்களை சந்தைக்கு விநியோகிக்க தயார் நிலையில் வைத்திருந்த போது இன்று (18) விசேட புலனாய்வு அதிகாரிகள் குழுவினால் சோதனை நடத்தப்பட்டது. கம்பஹா நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சுற்றிவளைப்பின் போது, உற்பத்திப் பணிகள் இடம்பெற்று வந்தது தெரியவந்துள்ளது. காலாவதியான மற்றும் புழு தாக்கிய சுமார் 750 கிலோ கொண்ட பேரீச்சம் பழங்கள் தொழிற்சாலையில் கண்டுபிடித்துள்ளனர் இங்கு தயாரிக்கப்படும் பழங்கள் கேக் தயாரிப்பதற்காக கல்முனை பிரதேசம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பேக்கரிகள் மற்றும் கடைகளுக்கு விநியோகிக்கப்படுவதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அதிகாரிகள் அத்தனகல்ல நீதவான் நீதிமன்றத்தில் உரிமையாளருக்கு எதிராக வழக்குத் தொடர்ந்ததுடன், தொழிற்சாலையில் பணியாற்றிய நான்கு ஊழியர்களை அதிகாரிகள் கைது செய்து பிணையில் விடுவித்ததுடன், உரிமையாளரை அத்தனகல்ல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு அறிவிக்கப்பட்டது.

Read More

சிறுவர்களைக் கடத்த முற்பட்ட குழுக்கள் தொடர்பாக அக்மீமன பொலிஸார் அறிவித்தலொன்று விடுக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகப் பதிவு தொடர்பில் பொலிஸ் இன்று (18) விளக்கம் அளித்துள்ளது. அக்மீமன பொலிஸாரினால் அவ்வாறான எந்தவொரு பொது அறிவித்தலையும் வெளியிடவில்லை என்று குறிப்பிட்டுள்ள பொலிஸ் தலைமையகம், குறித்த சமூக ஊடகப் பதிவு ‘போலியானது’ என நிராகரித்துள்ளனர். மேலும், அக்மீமன அல்லது யக்கலமுல்ல பொலிஸ் பிரிவுகளில் இதுபோன்ற சிறுவர் கடத்தல்கள் அல்லது கடத்தல் முயற்சிகள் எதுவும் பதிவாகவில்லை என அக்மீமன பொலிஸ் பொறுப்பதிகாரியை (OIC) மேற்கோள் காட்டி பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. எனவே, சமூக வலைதளங்களில் பரப்பப்படும் இதுபோன்ற தவறான, பொய்யான பதிவுகளால் பொதுமக்கள் எவரும் பீதியடைய வேண்டாம் என பொலிஸ் கோரியுள்ளது.

Read More

மதங்களை புண்படுத்தும் வகையில் கருத்து வெளியிட்டதாக கூறப்படும் போதகர் ஜெரம் பெர்னாண்டோவை கைது செய்து சட்டத்தை அமுல்படுத்துமாறு கோரி உயலட நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த போதகருக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு உத்தரவு பிறப்பிக்குமாறும் மனுவில் மேலும் கோரப்பட்டுள்ளது. பூஜ்ய எல்லே குணவம்ச தேரர் உள்ளிட்டோரினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Read More

பூமியின் மிகக் குறைந்த ஈர்ப்பு விசை, இலங்கையின் தெற்கு முனையிலும் மாலைதீவுக்கு கிழக்கே இந்தியப் பெருங்கடலின் சில பகுதிகளிலும் காணப்படுவதாக ஆய்வொன்றில் நாசா கண்டறிந்துள்ளது. அத்துடன், ஹட்சன் விரிகுடா பகுதியைச் சுற்றியுள்ள வட கனடாவும் குறைந்த ஈர்ப்பு விசை கொண்ட பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளது. நாசாவின் கிரேஸ் மிஷன் (ஈர்ப்பு மற்றும் காலநிலை பரிசோதனை) பல ஆண்டுகளாக, மேற்கொண்ட செயற்கைகோள் ஆய்வுகளில் இந்த வேறுபாடுகளை கண்டறிந்துள்ளது. பூமியின் மேலோட்டத்தின் தடிமன் மற்றும் மேற்பரப்பிற்கு அடியில் உள்ள உருகிய பாறை மற்றும் மக்மாவின் அளவு ஆகியவற்றில் வேறுபாடு இருப்பதால், அவை ஈர்ப்பு விசைகளில் மாறுதல்களை உண்டாக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. திரவ மக்மா பகிர்வு மற்றும் கண்ட தட்டுகள் மாறும்போது ஈர்ப்பு விசையின் பரவல் மெதுவாக மாறுகிறது. வலிமையான புவியீர்ப்பு, பொலிவியா மற்றும் வடக்கு அந்திஸைச் சுற்றி அமைந்துள்ளது. துருவங்களைச் சுற்றியும், கெர்மடெக் அகழி மற்றும் நியூசிலாந்தின் வடக்குத் தீவின் உச்சியில் எடை அதிகரித்த…

Read More

ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் 3% மின்சார கட்டணத்தை குறைக்க இலங்கை மின்சார சபை முன்மொழிந்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், தற்போதைய நிலவரப்படி மின்சாரக் கட்டணத்தை உண்மையில் 27% குறைக்க முடியும் என இன்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் தெரிவித்தார். தவறான தரவுகளின் அடிப்படையில் அதிகாரிகள் மக்களை தவறாக வழிநடத்துவதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார். ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் 3% மின்சார கட்டணத்தை குறைக்க இலங்கை மின்சார சபை முன்மொழிந்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், தற்போதைய நிலவரப்படி மின்சாரக் கட்டணத்தை உண்மையில் 27% குறைக்க முடியும் என இன்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் தெரிவித்தார். தவறான தரவுகளின் அடிப்படையில்…

Read More

வெப்பமான காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. இந்த அறிக்கை இன்று (18) பிற்பகல் 2.30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள நிலையில் நாளை (19) வரை செல்லுபடியாகும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பம் “அவதானம்” செலுத்தப்பட வேண்டிய மட்டத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்தினால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடு வழங்குவதில் சிலர் இடையூறு ஏற்படுத்த முயற்சிப்பதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இல்லாத விடயங்களை காட்டி போராடினால் இழப்பீட்டுத் தொகை கிடைக்காமல் போகும் அபாயம் உள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, இந்தப் பிரச்சினையை சமாளிக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இலங்கையில் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தீப்பிடித்து எரிந்து நாசமடைந்ததன் காரணமாக பொருளாதார நெருக்கடிக்கு உள்ளான மீனவ மக்களுக்கு நட்டஈடு வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நேற்று (17) இதனைத் தெரிவித்தார். இந்த கப்பல் விபத்து காரணமாக மீனவ மக்களுக்கு 27 பிரிவுகளின் கீழ் மூன்று கட்டங்களாக சுமார் 1000 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்கப்பட்டுள்ளது. இம்முறை நான்காம் கட்ட இழப்பீடு வழங்கப்பட்டது. இங்கு கப்பல் விபத்தில் பாதிக்கப்பட்ட 300 மீனவர்களுக்கு அமைச்சர் இழப்பீடு…

Read More