மே 18ஆம் திகதி விடுதலைப் புலிகள் திட்டமிட்டு தாக்குதல் நடத்துவது தொடர்பான அறிக்கைகள் உரிய முறையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. மே 18 ஆம் தேதி இலங்கையில் தாக்குதல் நடத்த விடுதலைப் புலிகள் திட்டமிட்டுள்ளதாக இந்திய உளவுத்துறையை மேற்கோள் காட்டி இந்தியாவில் வெளியாகும் ‘தி இந்து’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இதனையடுத்து, மேற்குறிப்பிட்ட தகவல்கள் தொடர்பில் வினவிய இந்திய புலனாய்வுப் பிரிவினர், அந்தத் தகவல் பொதுவான தகவலாகவே வழங்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு இலங்கைக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இலங்கைக்கு அறிவித்துள்ளனர். எவ்வாறாயினும், தேசிய பாதுகாப்பு தொடர்பாக உளவுத்துறை மற்றும் பாதுகாப்புப் படையினருக்குக் கிடைத்த தகவல்கள் மற்றும் அனைத்துத் தகவல்களும் முறையாக விசாரிக்கப்பட்டு, அந்தந்த பாதுகாப்புப் படையினருக்குத் தெரிவிக்கும் அதே வேளையில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சந்தேகிக்கப்படும் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் தொடர்பில் தமிழக…
Author: admin
மே 18ஆம் திகதி விடுதலைப் புலிகள் திட்டமிட்டு தாக்குதல் நடத்துவது தொடர்பான அறிக்கைகள் உரிய முறையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. மே 18 ஆம் தேதி இலங்கையில் தாக்குதல் நடத்த விடுதலைப் புலிகள் திட்டமிட்டுள்ளதாக இந்திய உளவுத்துறையை மேற்கோள் காட்டி இந்தியாவில் வெளியாகும் ‘தி இந்து’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இதனையடுத்து, மேற்குறிப்பிட்ட தகவல்கள் தொடர்பில் வினவிய இந்திய புலனாய்வுப் பிரிவினர், அந்தத் தகவல் பொதுவான தகவலாகவே வழங்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு இலங்கைக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இலங்கைக்கு அறிவித்துள்ளனர். எவ்வாறாயினும், தேசிய பாதுகாப்பு தொடர்பாக உளவுத்துறை மற்றும் பாதுகாப்புப் படையினருக்குக் கிடைத்த தகவல்கள் மற்றும் அனைத்துத் தகவல்களும் முறையாக விசாரிக்கப்பட்டு, அந்தந்த பாதுகாப்புப் படையினருக்குத் தெரிவிக்கும் அதே வேளையில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சந்தேகிக்கப்படும் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் தொடர்பில் தமிழக…
டீசல் இன்மையால் நாடு முழுவதும் பஸ் சேவைகளை 10 சதவீதமாக குறைக்க நேரிட்டுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. புகையிரதம் டீசல் கிடைக்காவிடத்து நாளை முதல் தனியார் பஸ்கள் சேவையில் இருந்து விலக நேரிடும் என அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். இதன்படி ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள காலப்பகுதியில் சகல பஸ்களும் வழமை போன்று சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. மேலும் இத்துடன் எதிர்வரும் சில நாட்களுக்கு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களுக்கு மாத்திரமே டீசல் கையிருப்பில் உள்ளதாக அதன் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார்.
புகையிரதம் தடம் புரண்டமையால் பாதிப்படைந்திருந்த பிரதான புகையிரத மார்க்கத்தில் புகையிரத போக்குவரத்து இன்று முற்பகல் வழமைக்கு கொண்டு வரப்படும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. புகையிரதம் ஒன்று தடம்புரண்டமையை அடுத்து பிரதான மார்க்கத்தில் சேவை, றம்புக்கணை வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.மலையகத்திற்கான புகையிரத மார்க்கத்தினை வழமைக்கு கொண்டு வரும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக புகையிரத திணைக்களத்தின் பிரதிப் பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார். அத்துடன் 102 குறுந்தூர புகையிரத சேவைகளும் 6 நெடுந்தூர புகையிரத சேவைகளும் தற்போது முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரவை இன்னும் உத்தியோகபூர்வமாக நியமிக்கப்படாத போதிலும், தனக்கு நிதியமைச்சர் பதவி வேண்டும் என பிரதமர் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, சர்வதேச நாணய நிதியத்திற்கான இலங்கைக் குழுவை பிரதமர் இனிமேல் வழிநடத்துவார். முன்னதாக, நிதியமைச்சராக பதவியேற்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும், அவர் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள கடுமையாக மறுத்திருந்தார். இதன் பின்னேர் அதனை அவர் வழிநடத்துவதற்க்காய் தீர்மானித்துள்ளதாக அரசியல் உயர் மட்டங்கள் தெரிவிக்கின்றன.
வெசாக் நோன் மதி தினத்தை முன்னிட்டு மின்சாரத் துண்டிப்பு மேற்கொள்ளப்படாது என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. எரிபொருள் இல்லாமை காரணமாக 8 மின்னுற்பத்தி நிலையங்கள் செயலிழந்திருப்பதாக மின்சார சபை தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், மின்னுற்பத்தி நிலையங்களை அண்டிய பகுதிகளில் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக நீர்மின்னுற்பத்தி அதிகளவில் மேற்கொள்ளப்படுவதாகவும் மின்சார சபை தெரிவித்துள்ளது
நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் (மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்) தற்போது நிலவும் மழையுடனான வானிலை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 150 மி.மீ க்கும் அதிகமானமிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 150 மி.மீ க்கும் அதிகமானமிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு மாகாணத்திலும் அனுராதபுரம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும்…
பிரதி சபாநாயகர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்னவை பரிந்துரைப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, தனது டுவிட்டர் பதிவில் சற்று முன்னர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் ராஜபக்ஷவை பதவிக்கு முன்மொழியவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் ஏற்பட்ட வன்முறையின்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அரசியல்வாதிகளினது வீடுகள் மற்றும் வாகனங்கள் சேதமாக்கப்பட்டதால், சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாவுக்கு அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளது என பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், காப்புறுதி செய்யப்பட்ட சொத்துகளுக்காக நஷ்ட ஈடு வழங்குவதற்கு ஒரே முறையில் பெருந்தொகையான நிதி தேவைப்படுவதால், காப்புறுதி நிறுவனங்களும் பெரும் பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்துள்ளன. கடந்த வாரம் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களின் பின்னர் 55 அமைச்சர்கள் அரசியல்வாதிகளின் வீடுகள் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவங்களில் 200க்கும் அதிகமான வாகனங்கள் தீ இடப்பட்டுள்ளதாகவும் சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் அலரிமாளிகையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி உள்ளூராட்சி சபைகளின் பிரதிநிதிகள கூட்டத்துக்கு வந்த பிரதிநிதிகள் மற்றும் ஆதரவாளர்களை அழைத்து வந்த 40 பஸ்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் சர்வ கட்சிகளின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ள வேண்டும் என சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. அறிக்கை ஒன்றை விடுத்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இதனைக் குறிப்பிட்டுள்ளது. அத்துடன் நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு பிரதமர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டியமை முக்கியமான விடயமாகும் என குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் மக்களின் நம்பிக்கை பெற்றுக் கொள்ளும் வகையில் பிரதமர் உள்ளிட்ட அரசாங்கம் அமைய வேண்டும். இலங்கையிலும் சர்வதேசத்திலும் நம்பிக்கையைக் கட்டியெழுப்பி, நாட்டின் பொருளாதாரத்தை மாற்றக் கூடிய ஒரு ஒன்றிணைந்த அரசாங்கம் உருவாக்கப்பட வேண்டும் எனவும் சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.