இரண்டு மாதங்களில் முதல் முறையாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் கொவிட் தொற்று அதிகரிப்பை கண்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இது ஜூலை தொடக்கத்தில் இருந்த ஒரு நிலையான வீழ்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இந்த அதிகரிப்பு என்பது இங்கிலாந்தில் மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது, ஆனால், ஸ்கொட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தில் அளவுகள் குறைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. தேசிய புள்ளியியல் அலுவலகம் படி, நாடு முழுவதும் உள்ள தனியார் வீடுகளில் உள்ள சுமார் 927,900 பேர் செப்டம்பர் 14ஆம் திகதியுடன் முடிவடையும் வாரத்தில் கொரோனா வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்திருக்கலாம். இது முந்தைய வாரத்தில் 881,200 இல் இருந்து 5 சதவீதம் அதிகமாகும். ஒமிக்ரோன் பி.ஏ.4 மற்றும் பி.ஏ.5 வைரஸின் துணை வகைகளால் ஏற்பட்ட அலையின் உச்சத்தில், மொத்த எண்ணிக்கை 3.8 மில்லியனை எட்டிய ஜூலை தொடக்கத்தில் இருந்து பிரித்தானியா முழுவதும் நோய்த்தொற்றுகள் சீராக குறைந்து வருகின்றன. கொவிட் நோயால் மருத்துவமனையில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதற்கான…
Author: admin
சீனாவில் இருந்து அத்தியாவசிய மருந்துகளுடனான விமானமொன்று நேற்று (வெள்ளிக்கிழமை) இலங்கையை வந்தடைந்துள்ளது. அந்த விமானத்தில் சிறுநீரக நோயாளிகள் மற்றும் புற்றுநோயாளிகளுக்கு தேவையான அத்தியாவசிய மருந்துகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. மேலும் 06 மாதங்களுக்கு போதுமான விசர் நாய் தடுப்பூசிகளும் இந்த மருந்துகளுடன் உள்ளடங்குவதாக சுகாதார அமைச்சின் இணைப்பதிகாரி வைத்தியர் அன்வர் ஹம்தானி குறிப்பிட்டுள்ளார். சுகாதார அமைச்சு சீன அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்ட வேண்டுகோளுக்கு இணங்க இந்த மருந்துப் பொருட்களை இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதன் பெறுமதி சுமார் 500 மில்லியன் ரூபாயாகுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அஹுங்கல்ல போகஹபிட்டிய பகுதியில் இடம்’ பெற்ற துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் துரித விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது அஹுங்கல்ல போகஹபிட்டிய பகுதியில் அடையாளந் தெரியாத நபர்களினால் நேற்று இரவு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர் சம்பவத்தில் காயமடைந்த இருவர் சிகிச்சைகளுக்காக பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் அஹுங்கல்ல பகுதியைச் சேர்ந்த 24 மற்றும் 29 வயதுடைய இருவர் இவ்வாறு துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்துள்ளனர்
பாடசாலை மாணவி ஒருவர் மதிய உணவிற்கு தேங்காய்த் துண்டுகளை எடுத்து வந்த செய்தியில் உண்மையில்லை என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. வறுமைக் காரணமாக மாணவத் தலைவி ஒருவர் மதிய உணவுக்கு தேங்காய்த் துண்டுகளை பாடசாலைக்கு எடுத்துவந்ததாக தேசிய மற்றும் சமூக ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் ஜனாதிபதி அலுவலகம் கவனம் செலுத்தியுள்ளது. இதனையடுத்து குறித்த செய்தி தொடர்பில் தகவல்களைப் பெற ஜனாதிபதி அலுவலகம் நடவடிக்கை எடுத்தது. இதன்படி, மினுவாங்கொடை பிராந்திய பணிப்பாளர் வஜிர ரணராஜா, கம்பஹா மாவட்ட செயலாளர் டபிள்யூ. சத்தியானந்த, திவுலப்பிட்டிய பிரதேச செயலாளர், மினுவாங்கொடை கல்வி வலய திவுலப்பிட்டி கல்விப் பிரிவின் பணிப்பாளர், கொங்கொடமுல்ல புனித அந்தோனியார் கனிஷ்ட கல்லூரியின் அதிபர் ஆகியோரிடமிருந்து தகவல்கள் பெறப்பட்டன. அத்துடன், மாணவி வாழும் பிரதேச கிராம உத்தியோகத்தர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோரிடம் இருந்தும் தகவல்கள் பெறப்பட்டன. எனினும், இந்தத் தகவல்களின்படி அவ்வாறானதொரு சம்பவம் எதுவும் அப்பகுதியில் பதிவாகவில்லை என்பது உறுதியாகியுள்ளதாக…
நாடாளுமன்றில் இன்று (23) ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்ட பகல் உணவில் நெத்தலி பொறியலில் ஒரு அடி நீளமான மூடை நூல் ஒன்று காணப்பட்டுள்ளது. ஊடகவியலாளர் ஒருவர் உணவு உண்ணும் போது இவ்வாறு நூல் கண்டுபிடிக்கப்பட்டதோடு, உணவுப் பிரிவின் பிரதானியிடம் இது தொடர்பில் அறியப்படுத்தியுள்ளதோடு, அந்த நூலையும் அவரிடம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு உணவில் நூல் இருப்பதை அறிந்தவுடன் குறித்த ஊடகவியலாளர் உணவு உண்ணுவதை நிறுத்திவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதேவேளை, நேற்று (22) நாடாளுமன்றில் ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்பட்ட உணவிலிருந்து பழுதடைந்த மனம் வெளியானதாகவும் குறித்த ஊடகவியலாளர் குறிப்பிட்டார். நாடாளுமன்ற உணவுப் பிரிவிலிருந்து விநியோகிக்கப்படும் உணவுகளில் புழு, பிளாஸ்டிக், நூல் துண்டிகள் என்பன இதற்கு முன்னரும் காணப்பட்டதாகவும், நேற்றை உணவை உட்கொண்ட இரு பொலிஸ் அதிகாரிகள் உணவு விஷமானதால் நாராஹென்பிட்ட பொலிஸ் மருத்துவமனையில் சிகிச்கைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து நாடாளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக்க தசநாயக்க தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளம் பிக்குகள் மீதான பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட பிரதம பௌத்த மதகுரு தொடர்பிலான மன்றில் சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கை பிரகாரம் பிணை கோரிக்கை மறுக்கப்பட்டு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை 07 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஹாரை ஒன்றில் வைத்து 3 இளம் பிக்குகள் பாலியல் துஸ்பிரயோகம் செய்தமை தொடர்பிலான வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட நிலையில் சந்தேக நபரான பௌத்த மதகுருவை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டார். அம்பாறை மாவட்டம் சடயந்தலாவை பகுதி ஒரு குடும்பத்தை சேர்ந்த 3 இளம் பிக்குகள் கல்முனை பகுதி விஹாரை ஒன்றில் வைத்து கடந்த சில தினங்களுக்கு முன்னர்…
அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலையை குறைப்பதற்கு லங்கா சதொச நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. குறித்த விலைக் குறைப்பானது செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி முதல் அமுலுக்கு வருமெனவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. பின்வரும் பொருட்களின் விலைகள் திருத்தப்பட்டுள்ளன: இறக்குமதி செய்யப்பட்ட பெரிய வெங்காயம் (1 கிலோ) பழைய விலை: ரூ. 175/- புதிய விலை: ரூ. 150/- வெள்ளை சர்க்கரை (1 கிலோ) பழைய விலை: ரூ. 285/- புதிய விலை: ரூ. 278/- இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை கெகுலு அரிசி (1 கிலோ) பழைய விலை: ரூ. 185/- புதிய விலை: ரூ. 179/- இறக்குமதி செய்யப்பட்ட நாட்டு அரிசி (1 கிலோ) பழைய விலை: ரூ. 194/- புதிய விலை: ரூ. 185/- இறக்குமதி செய்யப்பட்ட பருப்பு (1 கிலோ) பழைய விலை: ரூ. 429/- புதிய விலை: ரூ. 415/-
வெயங்கொடை பிரசேத்தில் கூரிய ஆயுதத்தினால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு இரண்டு பிள்ளைகளின் தாயொருவர் கொலை செய்யப்பட்டுள்ளது. சம்பவத்தில் 37 வயதுடைய வெயங்கொடை, ஹேபனாகந்த பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 20 வருடங்களுக்கு முன்னதாக குறித்த பெண் காதலித்த நபரே இந்த கொலையை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். கடந்த பல வருடங்களுக்கு முன்னதாக காதல் முறிந்ததைத் தொடர்ந்து இந்த பெண் வேறு ஒரு நபரை திருமணம் செய்துள்ளதோடு, அவர்களுக்கு 9 மற்றும் 11 வயதுடைய இரு பிள்ளைகள் இருக்கின்றனர். உயிரிழந்த பெண் வத்துபிட்டிவல பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலையொன்றில் கடமையாற்றி வந்துள்ளார். இந்த கொலையை மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் குறித்த பெண்ணின் பழைய காதலன், கடந்த சில வருடங்களாக இவருடன் தொடர்புகொள்வதற்கு முயற்சித்து வந்துள்ளமை பொலிஸாரின் விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது. எவ்வாறாயினும், அந்த பெண் இதனை நிராகரித்ததன் காரணமாக அவரை பழிவாங்குவதற்கு சந்தேகநபர் தீர்மானித்தே இந்த கொலையை மேற்கொண்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில்…
அம்பேபிட்டியைச் சேர்ந்த அல்ஹாஜ் பாரூக் மற்றும் பாஹிமா ஸஹீம் அவர்களது மகள் Dr.Farwin Farook அவர்கள் இன்று கொழும்பு பல்கலை கழகத்தில் பட்டம் பெற்று தனது மருத்துவ படிப்பினை நிறைவு செய்துள்ளார். அல்ஹாஜ் பாருக் தம்பதிகள் தமது நான்கு பிள்ளைகளையும் மருத்துவர்களாக உருவாக்குவதற்கு அரும்பாடுபட்டுள்ளார்கள். (இவர்கள் அம்பேபிட்டிய பள்ளியில் நீண்டகாலம் முஅல்லிம் ஆக பணியாற்றிய தங்கள் லெப்ப யின் பேரப்பிள்ளைகள்) மூத்த மகன் Dr.Anfas Farook அவர்கள் தற்போது களுபோவிலை போதனா வைத்திய சாலையில் பணியாற்றி வருகின்றார். மகள் Dr.Farwin Farook தற்போது பட்டம் பெற்று வெளியாகியுள்ளார். மூன்றாவது மகன் Althaf Farook கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் இறுதி ஆண்டு மருத்துவ படிப்பை முடித்து, பட்டமளிப்புக்காக காத்திருக்கிறார். நான்காவது மகன் Ajmal Farook கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் முதலாம் ஆண்டு மருத்துவ மாணவராக கல்வி கற்று வருகின்றார். அல்லாஹ் இக்குடும்பத்துக்கு இம்மையிலும் மறுமையிலும் ரஹ்மத் செய்வானாக.. இந்த…
காத்தான்குடியிலுள்ள முஸ்லிம்கள் சிலர் எனது காணொளிகளால் வருத்தம் அடைந்திருப்பதால் இதனை எழுதுகிறேன். இது எமது இலங்கை, சவூதி அரேபியா அல்ல, எனவே நீங்கள் கவலைப்பட வேண்டாம். காத்தான்குடியில் அமைந்துள்ள இப்பள்ளிவாசலைப் பார்வையிடப் பெண்களும் அனுமதிக்கப்படுவதை அறிந்து, உரியவர்களிடம் அனுமதி பெற்று இங்கு வந்தோம். இதற்குக் காரணம், இவ்வாறானதொரு இடத்தை நாம் பார்த்ததில்லை. நான் ஒரு சிங்கள பௌத்தராக இருந்த போதும், இப்பள்ளிவாசல் உங்களது புனிதமான இடம் என்பதை அறிந்து பார்வையிடச் சென்றேன், தனியாக அல்ல உங்கள் மதத்தைச் சேர்ந்த சில பெண்களுடனேயே. கொழும்பிலிருந்து மட்டக்களப்பிலுள்ள நண்பர்களைப் பார்க்க வந்தேன். அவர்கள் தங்கள் ஊரிலுள்ள மிக அழகான இடங்களைக் காட்டினார்கள். இன, மத வேறுபாடின்றி உண்டு, குடித்துவிட்டு மகிழ்ச்சியாக கொழும்பு திரும்பினோம். ஆனால், இவ்வீடியோவைப் பகிர்வதன் மூலம் இம்முட்டாள்தனத்தைப் பரப்பும் முஸ்லிம்களிடம், உங்களை நினைத்து நாங்கள் வெட்கப்படுகிறோம் எனக் கூற விரும்புகிறேன். ஒரு சிங்கள பௌத்த பெண் என்ற வகையில் என் நண்பர்களுக்கு…