மனித கடத்தலுடன் தொடர்பிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்ட ஓமானுக்கான இலங்கை தூதரகத்தின் மூன்றாம் நிலை செயலாளர் ஈ. குஷானின் இராஜதந்திர வெளிநாட்டு கடவுச்சீட்டு முடக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் அவரது வெளிநாட்டு கடவுச்சீட்டு முடக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
Author: admin
இந்தியா-நியூசிலாந்து இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி ஒக்லண்டில் உள்ள ஈடன்பெர்க்கில் இன்று நடைபெறும். இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணித் தலைவர் கென் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்த நிலையில். இந்திய அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. 20 ஓவர் தொடரை இழந்ததால் அதற்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் நியூசிலாந்து அணி வீரர்கள் இருக்கிறார்கள். இரு அணிகளும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் மோதுவதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. 20 ஓவர் தொடருக்கான இந்திய அணியை ஹர்திக் பாண்ட்யா வழிநடத்தினார். ஒரு நாள் போட்டி அணிக்கு தலைவராக ஷிகர் தவான் செயற்பட உள்ளார். ரோகித் சர்மா, விராட் கோலி, ஹர்திக் பாண்ட்யா, லோகேஷ் ராகுல், பும்ரா, மொஹமட்…
நாடு முழுவதுமுள்ள சிறு விற்பனையாளர்களுக்கு, கடன் அடிப்படையில் சமையல் எரிவாயுவை விநியோகம் செய்யுமாறு லிட்ரோ நிறுவனம் அதிரடி அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. சிறு விற்பனையாளர்கள், எரிவாயுவை வாங்க சிரமப்படுவதாலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதால் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு 7 இல் அமைந்துள்ள வீடொன்றில் மின்சாரத்தை துண்டிக்கச் சென்ற மின்சார சபை ஊழியர்கள் இருவரை முன்னாள் பிரதியமைச்சர் தாக்கியதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். குறித்த வீட்டிற்கான மின்கட்டணம் பெருந்தொகை நிலுவையில் இருப்பது தொடர்பில் பல தடவைகள் தெரியப்படுத்திய போதும், கட்டணத்தை செலுத்தாததால் மின்சாரத்தை துண்டிக்க சென்றதாகவும், முன்னாள் அமைச்சர் தம்மை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளியதாகவும் மேற்படி ஊழியர்கள் முறைப்பாடு செய்துள்ளனர் .
தேசிய லொத்தர் சபையின் கீழ் சீட்டிழுக்கப்படும் மஹஜன சம்பதவின் 5000ஆவது சீட்டிழுப்பை முன்னிட்டு இன்று (24) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மஹஜன சம்பத டிக்கட் ஒன்றினை கொள்வனவு செய்தார். இந்நிகழ்வு நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றிருந்தது. ஜனாதிபதிக்கு குறித்த லொத்தர் சீட்டை தேசிய லொத்தர் சபையின் பதில் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் டி பெரேரா வழங்கிவைத்தார்.
மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநர் மாதாந்தம் 25 இலட்சம் ரூபா சம்பளம் பெறுவதாகவும் அதற்கு மேலதிகமாக சர்வதேச நாணய நிதியத்தில் ஓய்வூதியம் பெறுவதாகவும் பல அரசியல்வாதிகள் கடந்த காலங்களில் பல சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டிருந்தனர். எவ்வாறாயினும், இந்த விடயம் தொடர்பில் பதிலளித்த இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, இந்தக் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யானவை என தெரிவித்துள்ளார். இன்று (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை வலியுறுத்தியுள்ளார். நாட்டின் பொறுப்புள்ள அரசியல்வாதிகள் இவ்வாறான பொய்யான அறிக்கையை வெளியிடும் போது, எல்லா இடங்களிலும் அதனை உண்மையென அறிவிப்பது மிகவும் வருத்தமளிக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார். மத்திய வங்கியின் ஆளுநர் என்ற வகையில் எனது சம்பளம் மாதம் 4 இலட்சம் ரூபா மாத்திரமே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக தேர்ந்தெடுப்பதற்காக 2019 ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டதாக இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க குற்றஞ்சாட்டியுள்ளார். ஊடகங்களுக்கு இன்று (24) கருத்து தெரிவித்த அவர், தாக்குதல்களுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பொறுப்பேற்க வேண்டும் என சிலர் கோரிக்கை விடுக்கின்றனர். அந்த குற்றச்சாட்டுகளை தான் நம்புவதாக தெரிவித்தார். எனினும், இந்த விஷயத்தில் நீதிமன்றம் விரைவில் முடிவு செய்யும் என்றார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்திக்கொள்வதற்கு ராஜபக்ஷ குழாம் முயற்சிக்கின்றது என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
தமிழகத்தின் மதுரை திருப்பாலை ஜி.ஆர். நகரைச் சேர்ந்த 35 வயதான செந்தில்குமார், என்பவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்த நிலையில். இவருக்கும் இராமநாதபுரத்தை சேர்ந்த 24 வயதான வைஷ்ணவிக்கும் திருமணம் முடிந்து ஒரு பெண் குழந்தை உள்ளது. செந்தில்குமார் ஆண்டுக்கு ஒரு முறை ஊருக்கு வந்து செல்வது வழக்கம். இதன்படி மதுரைக்கு வந்த அவர் கடந்த மாதம் 27 ஆம் திகதி மகளை பாடசாலையில் விட்டுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்த போது ஜி.ஆர்.நகர், பொன்விழா நகர் அருகே மோட்டார் சைக்கிளில் தலைகவசம் அணிந்த 2 பேர் அவரை வாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்றர். இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து திருப்பாலை பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையில் செந்தில்குமாரின் மனைவி வைஷ்ணவி, தனது கணவர் மீதான தாக்குதல் வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றில்…
இன்புளுவன்சா போன்ற அறிகுறிகளுடன் கூடிய வைரஸ் நோயொன்று, இந்நாட்களில் நாட்டின் பல பகுதிகளிலும் பரவி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுடன் ஒப்பிடுகையில், இந்த நோயினால் ஏற்படும் சிக்கல்கள் ஒப்பீட்டளவில் குறைவாகவே காணப்படுவதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார். சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் ஒருவருக்கு இந்நோய் பரவும் அபாயம் உள்ளதால், முறையான சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றுவது அவசியம் என வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
திருத்தம் செய்யப்பட்டுள்ள நச்சு பொருள், அபின் மற்றும் அபாயகர ஒளடதங்கள் சட்டம் இன்று முதல் அமுலில் இருக்கும். இந்த புதிய சட்டத்தின் கீழ் ஐந்து கிராமிற்கு அதிகமான ஐஸ் ரக போதைப்பொருளை வைத்திருக்கும் அல்லது விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்கக்கூடிய வகையில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் தெரிவித்துள்ளது. கடந்த ஒக்டோபர் 19 ஆம் திகதி, நச்சுப்பொருள், அபின், அபாயகர ஒளடதங்கள் சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டது. போதைப்பொருளை கொண்டு வருதல், வைத்திருத்தல் மற்றும் பயன்படுத்தல் தொடர்பில் காலத்தின் தேவைக்கு ஏற்ப சட்டங்களை வலுப்படுத்தும் வகையில் இந்த சட்டம் திருத்தப்பட்டுள்ளது.