கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (10) 10 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இன்று காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த காலப்பகுதியில் கொழும்பு, தெஹிவளை, கல்கிஸ்ஸ, கோட்டே, கடுவெல மாநகர சபை பகுதிகள், மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ நகரசபை பகுதிகள், கொட்டிகாவத்தை, முல்லேரிய பிரதேச சபை பகுதிகள் மற்றும் இரத்மலானை மற்றும் கட்டுபெத்த ஆகிய பகுதிகளுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Author: admin
நாளாந்தம் சுமார் 850 பேர் தமது பணியகத்தில் பதிவு செய்து வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்வதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் 290,000 அதிகமானோர் வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறியுள்ளதாக அதன் பயிற்சி மற்றும் ஆட்சேர்ப்பு திணைக்களத்தின் பிரதிப் பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்தார்.
வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த மாண்டஸ் புயல் முழுமையாக கரையை கடந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தின் மாமல்லபுரத்திற்கு அருகில் புயல் கரையை கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மதியம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என தெரிவிக்கபட்டுள்ளது.
இலங்கையில் உள்ள இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துவதற்காக சர்வதேச லயன்ஸ் கழகம் வழங்கியுள்ள ஆதரவை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராட்டியுள்ளார். பியகம தொழிற்பயிற்சி நிலையத்தை நிறுவுவதற்கு லயன்ஸ் கழகம் வழங்கிய உதவியை அவர் வரவேற்றார். இளைஞர்களின் ஆக்கத் திறன்களைப் பயன்படுத்தி எதிர்காலத்தில் புதிய பொருளாதாரத்தை உருவாக்குவதன் மூலம் 2048 ஆம் ஆண்டளவில் இலங்கையை அபிவிருத்தியடைந்த நாடாக மாற்றும் ஜனாதிபதியின் தொலை நோக்கை நனவாக்குவதற்கு இத்தொழிற்பயிற்சி நிலையம் வழிவகுக்கும். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் சர்வதேச லயன்ஸ் கழகத்தின் தலைவர் லயன் பிரையன் எட்வர்ட் ஷீஹானுக்கும் இடையில் நேற்று (09) கொழும்பில் உள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
டிசம்பர் 14 ஆம் திகதி நள்ளிரவு முதல் புலமைப்பரிசில் பரீட்சைக்கான பிரத்தியேக வகுப்புகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 18 ஆம் திகதி நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சை நிறைவடையும் வரை இந்த தடை அமுலில் இருக்கும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், 14 ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சையுடன் தொடர்புடைய வகுப்புகள், பயிற்சி வகுப்புகள், கருத்தரங்குகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பூமியிலிருந்து ஏவுகனையில் சென்று நிலவை சுற்றிவர விரும்புவோர் அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் ஏவுகனையில் சுற்றுலா செல்லலாம் என அறிவிக்கப்பட்டது. கடந்த 2018-ம் ஆண்டு இந்த அறிவிப்பு வெளியானது. இதையடுத்து பலரும் நிலவை சுற்றி பார்க்க விருப்பம் தெரிவித்தனர். இந்த நிலையில் அடுத்த ஆண்டு நிலவை சுற்றி பார்க்க செல்லும் ஏவுகனை பயணத்தில் பங்கேற்க உள்ளோரின் விபரங்களை ஜப்பான் கோடீஸ்வரர் யுசாகு மசோவா அறிவித்தார். இந்த சுற்றுலாவில் அமெரிக்க திரைப்பட தயாரிப்பாளர் பிரென்டன் ஹெல், இங்கிலாந்து நாட்டை சேர்ந்த கலைஞர் யெமி ஏடி, என 8 பேர் இடம் பெற்றுள்ளனர். இதனை ஜப்பானை சேர்ந்த கோடீஸ்வரர் யுசாகு மசோவா அறிவித்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.
லங்கா சதொச நிறுவனம் மூன்று அத்தியாவசிய பொருட்களின் விலையை இன்று முதல் குறைத்துள்ளது. பொருட்களின் திருத்தப்பட்ட விலைகள் பின்வருமாறு: கீரி சம்பா அரிசி 1 கிலோ 10 ரூபாவால் குறைப்பு – புதிய விலை – 215 ரூபா பெரிய வெங்காயம் 1 கிலோ 16 ரூபாவால் குறைப்பு – புதிய விலை – 199 ரூபா 425 கிராம் பதிவு செய்யப்பட்ட மீன்: 35 ரூபாவால் குறைப்பு புதிய விலை – 495 ரூபா
அம்பாறையில் இருந்து நுவரெலியா நகரை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று பிற்பகல் நுவரெலியா பிரதான பேருந்து தரிப்பிடத்தினுல் வீதியினை கடக்க முட்பட்ட பாதசாரி ஒருவர் மீது குறித்த பேருந்து மோதுண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. நுவரெலியா சாந்திபுர பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய பி,ஏ ரோகித்த பெரேரா என்பவரே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றன . மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய சுங்க வரலாற்றில், இரண்டாவது தடவையாக ஆகக் கூடுதலான தங்கக் கடத்தல், இன்று (09) முறியடிக்கப்பட்டுள்ளது. 40 கோடி ரூபாய் பெறுமதியான 24 கரட் தங்கம் 22 கிலோகிராமுடன் நாட்டுக்குள் நுழைய முயன்ற இலங்கை பயணிகள் ஐவர் கைது செய்யப்பட்டனர். கைப்பற்றப்பட்ட தங்கத்தை அரசுடமையாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்திய புலனாய்வுதுறை அதிகாரிகள் வழங்கிய தகவல்கள் அடிப்படையிலேயே இந்த சுற்றிவளைப்பு தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தங்கம் ஜெல் போல தயாரிக்கப்பட்டு, உள்ளாடைகளில் மறைத்துவைத்தே கொண்டுவரப்பட்டுள்ளது. 24 கரட்டில் தயாரிக்கப்பட்ட தங்க ஆபரணங்கள் நிறைவு செய்யப்படாத வகையில் கைகள், கழுத்துகளில் அணிந்தும் இவர்கள் எடுத்துவந்துள்ளனர்.
வளிமண்டத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக மாண்டஸ் சூறாவளியால் மன்னார் மாவட்டத்தின் பல கிராமங்களில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. மரங்கள் முறிந்துள்ளதுடன் வீட்டு கூரைகள் சேதமடைந்துள்ளதோடு, விவசாய செய்கையும் பாதிப்படைந்துள்ளது. சூறாவளி தாக்கத்தினால் நேற்று இரவு மன்னார் மாவட்டத்தில் கடும் காற்று வீசியதுடன் கடுமையான குளிர் நிலை ஏற்பட்டதோடு மழையும் பெய்தது.இதனால் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளது. மேலும் மன்னார் தாழ்வுபாடு மீன கிராமத்தில் மீனவர்களின் மீன் வாடிகள் காற்றினால் சேதமடைந்துள்ளது.மேலும் படகுகள் மற்றும் மீன் வலைகள் சேதமடைந்துள்ளது.