தலவத்துகொட பகுதியிலுள்ள வீடொன்றிற்குள் நுழைந்த இரு பெண்கள் உட்பட ஐவர் அடங்கிய கும்பல் பல லட்சம் ரூபா பெறுமதியான தங்கத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். வீட்டின் உரிமையாளரை கத்தியை காட்டி மிரட்டியதுடன் கடுமையாக தாக்கியுள்னளர். அவருக்கு தூக்க மாத்திரைகளை கொடுத்து இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது. வாடகைக்கு வீடு பெற்றுக் கொள்வதாக கூறி முன்னெடுக்கப்பட்ட கொள்ளை சம்பவத்திற்கு தொடர்புடையவர்கள் 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் குறித்த ஐவரில் நால்வர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 7 நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற இந்த கொள்ளை சம்பவம் தொடர்பில் தலங்கம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. இந்தக் குற்றச் செயல் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், பேராதனை பிலிமதலாவ மற்றும் தொம்பே பிரதேசங்களில் வைத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் முறைப்பாட்டாளரின்…
Author: admin
தலையில்லாத மனித உடலை காவிச்சென்ற முதலை; காணாமற்போனவரைத் தேடும் ஹூலந்தாவ கிராம மக்கள்
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் வீசிய ‘இயான்’ புயல் அந்தப் பகுதியில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியால் 25 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். அமெரிக்காவைத் தாக்கிய மிக உக்கிரமான புயல்களில் ஒன்றாக பார்க்கப்படும் ‘இயான்’ புயல், ஃபுளோரிடா மற்றும் தென்கிழக்கு அட்லாண்டிக் கடலோரப் பகுதிகளை மணிக்கு 241 கி.மீ. வேகத்தில் தாக்கியது. இந்த புயல் கடந்து சென்றுள்ள போதிலும், கடந்து சென்ற பாதைகளில் மிகப் பெரிய பேரழிவை ஏற்படுத்தியது. புயல் காரணமாக வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்தது. வீதி இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. மின் கம்பங்கள் சாய்ந்ததால் மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக, 25 லட்சம் பேர் மின்சாரமின்றியும், தங்களது வீடுகளை விட்டு வெளியே வர முடியாமலும் தவித்து வருகின்றனார். இதனிடையே, இந்தப் புயல் கியூபாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கு 2 பேர் இதனால் உயிரிழந்துள்ளனர். சுமார் 1 கோடியே 10 லட்சம் மக்கள் மின்சார வசதி பாதிப்பால் அவதியுற்றுள்ளனர்.
கம்பஹா – நெதகமுவ பகுதியில் இன்று (30) அதிகாலை பொலிஸார் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் 35 வயதான லசந்த சஞ்சீவ என்ற சந்தேக நபரே உயிரிழந்துள்ளார். கம்பஹா – பஹலகம பகுதியில் கடந்த 20ஆம் திகதி வீடொன்றில் கொள்ளையிட்டு, நபரொருவரை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவரே இவ்வாறு பொலிஸ் துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார். நெதகமுவ பகுதியிலுள்ள வீடொன்றில் மறைந்திருந்த சந்தேகநபரை பொலிஸார் இன்று அதிகாலை கைது செய்ய முயற்சித்துள்ளனர். இதன்போது சந்தேக நபர் கூரிய ஆயுதத்தினால் பொலிஸார் மீது தாக்குதல் நடத்த முயற்சித்தால், பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்தியுள்ளதாக பொலிஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு அரைவாசி சம்பளம் வழங்கப்படும் என நிதி அமைச்சின் செயலாளர் தெரிவித்ததாக மக்கள் விடுதலை முன்னணியின் மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சுனில் வட்டகல தெரிவிக்கின்றார். அரசாங்கத்திடம் பணம் இல்லாததே இதற்குக் காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இணைய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள உயர் பாதுகாப்பு வலய வர்த்தமானி மூலம் மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனிடையே, போராட்டம் நடத்தும் மக்கள் மீது பொலிஸார் அசுத்த நீரை கொண்டு அடிக்கிறார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
2011ஆம் ஆண்டு தொடக்கம் 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் மோசமான பாலியல் துன்புறுத்தல்களுக்கு 30,896 சிறுவர்கள் உள்ளாகியுள்ளனர் என தெரிவித்த முன்னாள் சிரேஸ்ட பிரதிபொலிஸ்மா அதிபர் பிரியந்த ஜயகொடி, நாளொன்று 8.7 சதவீதமான சிறுவர்கள் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகின்றனர் என்றார். இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தில் இன்று (29) “சிறுவர் வன்முறையை நிறுத்துங்கள்” என்ற தலைப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவித்த அவர், இவை தவிர குழந்தைகயின் எதிர்காலம், பாடசாலை ,சிறுவர்கள் தமக்கு ஏற்படும் துன்புறுத்தல்கள் குறித்து வெளி சொல்லாமை காரணமாக, அறிக்கையிடப்படாத சம்பவங்கள் இதனைவிட அதிகமாக இருக்கலாம் என்றார். இதற்கமையவே எப்பாவெல பிரதேசத்தில் பெற்ற தகப்பன் உள்ளிட்ட உறவினர்கள் 30 பேரால் தொடர்ச்சியாக 6 வருடங்கள் சிறுமியொருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாகத் தெரிவித்த அவர், 18,377பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டாலும் இந்த 9 வருடங்களில் இவர்களுள்…
கல்விக்கு தேவையான உதவிகளை வழங்குவதாக இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் Misukoshi Hideiki தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுடன் கொழும்பில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் அவர் இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.
கொவிட் தொற்றுநோய் மற்றும் உக்ரேன் யுத்தம் காரணமாக ஏற்பட்ட உலகப் பொருளாதார ஸ்திரமின்மையின் பாதகமான விளைவுகள், உணவு, எரிபொருள் மற்றும் உரம் என்பவற்றின் விலைகள் அதிகரித்து, பாரிய சுமையாக மாறியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். உலகளாவிய அரசியல் போக்குகள் பொருளாதார நெருக்கடியை மேலும் மோசமாக்கியுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். பிலிப்பைன்ஸின் மணிலா நகரிலுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைமையகத்தில் இன்று (29) காலை நடைபெற்ற ஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர்களின் 55 ஆவது வருடாந்த கூட்டத்தின் பிரதான அமர்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பெர்டினான்ட் ஆர்.மார்கஸ் ( ஜூனியர்) மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசட்சுகு அசகாவா ஆகியோரின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற இக்கூட்டத்தில் உறுப்பு நாடுகளின் மத்திய வங்கி ஆளுநர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விகிரமசிங்க மேலும் தெரிவிக்கையில், உணவு…
உலகம் முன்னோக்கிச் சென்றாலும் எமது நாடு ஓரிடத்தில் அசையாமல் நிறுத்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். வெல்லவாய தனமல்வில சபைக் கூட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தற்போதைய ஜனாதிபதியும், அரசாங்கமும் ஒரே இடத்தில் சுழன்று கொண்டிருக்க, உலகம் முன்னோக்கிச் செல்கிறதென அவர் தெரிவித்துள்ளார். நாடு ஓரிடத்தில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் நாட்டின் எதிர்காலம் குறித்த புரிதல் அவர்களுக்கு இல்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். இவ்வாறான நிலையிலும் எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி மக்களுக்காக பல பணிகளை செய்துள்ளதாகவும் அதற்கு சக்வாலா மற்றும் காஸா திட்டங்கள் சிறந்த எடுத்துக்காட்டு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலை அதிபர் ஒருவர் மாணவி ஒருவரை தும்பு தடியால் தாக்கிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கொட்டக்கலை போகாவத்தை பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவி ஒருவரையே அதிபர் தும்புதடியால் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிபரின் தாக்குதலுக்கு இலக்கான மாணவி காயங்களுடன் கொட்டகலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா – கிளங்கன் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக கொட்டகலை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி சாவித்திரி சர்மா தெரிவித்துள்ளார். பாடசாலையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த ஆசிரியர் விருந்து விழாவிற்கு 300 ரூபாவினை தலா ஒவ்வொரு மாணவரும் தரவேண்டும் என பாடசாலையின் நிர்வாகம் அறிவித்துள்ளது. சில மாணவர்கள் குறித்த தொகையை செலுத்தியுள்ளதோடு சிலர் செலுத்தவில்லை. இந்நிலையில், பணம் செலுத்தாத மாணவர் ஒருவரை, உடனடியாக பணத்தினை செலுத்துமாறு தகாத வார்த்தை பிரயோகங்களினால் நிந்தித்துள்ளார். இதனை பார்வையிட்ட மாணவரின் மூத்த சகோதரி ” ஐயா, தந்தை…