தமிழகத்தில் படிப்பு முடித்து வெளியேறுபவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வருகின்றனர். அவ்வாறு பதிவு செய்தோர், ஒவ்வொரு காலக்கட்டத்திலும், தங்களுடைய வேலைவாய்ப்பு பதிவை புதுப்பித்தும் வருகின்றனர். குறிப்பாக 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பதிவை புதுப்பிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் 2 மாதங்கள் சலுகைகள் வழங்கப்படுகிறது. இந்த நிலையில், தற்போது வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மொத்தம் எத்தனை பேர் பதிவு செய்துள்ளனர் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் 30-ந் திகதி நிலவரப்படி, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பதிவுதாரர்கள் பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளது. அதனடிப்படையில், 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் 23 லட்சத்து ஆயிரத்து 800 பேரும், அதேபோல் 19 முதல் 30 வயது வரை உள்ள பல தரப்பட்ட கல்லூரி மாணவர்களை பொறுத்த வரையில் 29 லட்சத்து 88 ஆயிரத்து 1 பேரும் பதிவு செய்து உள்ளனர். 31 முதல் 45…
Author: admin
வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மற்றும் அதற்கு ஆதரவானவர்களுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்தார். மேலும், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் போதைப் பொருள் கடத்தலை தடுத்து நிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதேவேளை சமூக வலைதளங்களை தவறான பிரசாரங்களுக்கு பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் சட்டத்தை கொண்டுவருவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கமல் குணரத்ன தெரிவித்தார். பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சர்கள் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டத்தில் கலந்துகொண்டு கருது தெரிவிக்கும்போதே பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பன்னிபிட்டிய பகுதியில் உள்ள மருந்தகம் ஒன்றில் இருந்து 50,000 ரூபா பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் இந்த கொள்ளை சம்பவம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதுச்சேரியில் தாயைத் தவறாக பேசிய நபரை மிரட்டும் நோக்கில் யூடியூப் காணொளியைப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்து, அந்த நபரின் வீட்டில் வீசிய சிறுவனிடம் விசாரணை நடந்துவருகிறது. புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பரமசிவம். இவருக்கு வயது 50. புதுச்சேரி நகர பகுதியில் சாலையோரத்தில் உள்ளாடைகள் விற்பனை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். இதனிடையே இவரது வீட்டில் கடந்த ஜூலை மாதம் 20ஆம் தேதி அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் நாட்டு வெடிகுண்டு வீசி சென்றுள்ளார். இதுகுறித்து லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, விசாரணை நடைபெற்று வந்தது. கடந்த இரண்டு மாதங்களாக குற்றவாளி யார் என்பதை கண்டறிய போதிய ஆதாரம் இல்லாத காரணத்தால் இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டவர் யார் என்பது கண்டறியப்படாமல் இருந்தது. அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளில் வீட்டில் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் நாட்டு வெடிகுண்டு வீசி செல்வது தெரிந்தாலும்,…
யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் உள்ள வீடொன்றின் மீது வன்முறை கும்பல் ஒன்றினால், பெட்ரோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது. குறித்த வீட்டுக்கு நேற்றைய தினம் (25) இரவு இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 06 கொண்ட கும்பல் வீட்டின் மீது பெட்ரோல் குண்டை வீசி தாக்குதல் மேற்கொண்டதுடன் , வீட்டின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளையும் அடித்து நொறுக்கி தீ வைத்தனர். அத்துடன் வீட்டில் இருந்த தளபாடங்கள் உள்ளிட்டவற்றுக்கும் சேதம் விளைவித்து விட்டு அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு உத்தியோபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்றுக்காலை பயணமானார். 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதியன்று இடம்பெற்ற உயர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பிலான வழக்கு இன்று (26) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்நிலையில், அந்த வழக்கில் பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை, அதிலிருந்து நீக்குவதாக ஐவர் அடங்கிய நீதியரசர் குழாம் அறிவித்துள்ளது.
தம்புத்தேகமவில் வங்கிக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று அப்பகுதியிலுள்ள தனியார் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக கொண்டுவரப்பட்ட 22.3 மில்லியன் பணத்தை சந்தேகநபர்கள் கொள்ளையிட முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸ் சார்ஜென்ட் ஒருவருடன் சிறிது நேர போராட்டத்தை அடுத்து ஆயுதங்களுடன் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பயாகல, கலமுல்ல பகுதியை நேர்ந்த பாடசாலை மாணவர் ஒருவர் தனது 17வது பிறந்தநாளில் நண்பர்கள் இருவருடன் நீராடச் சென்ற போது கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பயாகல பொலிஸார் தெரிவித்தனர். ரண்முத்து டெரன் சில்வா என்ற 17 வயதுடைய பாடசாலை மாணவனே இவ்வாறு கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளார். பயாகலை கலமுல்ல புனித அந்தோனி வீதி முனையிலுள்ள கடற்பகுதியில் நீந்திக் கொண்டிருந்த போது மூவரும் திடீரென அலையில் அடித்துச் செல்லப்பட்டனர். இதன்போது அருகில் இருந்த இளைஞர் ஒருவர் தண்ணீரில் குதித்து மாணவர் ஒருவரைக் காப்பாற்றியுள்ளார். மற்றைய இரு மாணவர்களும் மரத்தடியில் தொங்கிக் கொண்டிருந்ததாகவும் அவர்களில் ஒருவரைக் காப்பாற்றும் போது மற்றைய மாணவன் திடீரென நீரில் மூழ்கி காணாமல் போனதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பிறந்து 7 நாட்களான சிசுவொன்றை பெண்ணொருவருக்கு 50,000 ரூபாவிற்கு விற்பனை செய்த தந்தையொருவரை தேடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சிசுவை விற்பனை செய்வதற்கு இடைத்தரகராக செயற்பட்ட அனுராதபுரத்தை சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதியொருவரும் பெண்ணொருவரும் நேற்று(25) கைது செய்யப்பட்டதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். கெப்பித்திகொல்லாவ வாஹல்கட பகுதியில் இந்த கைது இடம்பெற்றுள்ளது. சிசுவின் தாயாரின் முறைப்பாட்டிற்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் பேரில் சிசுவுடன் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சிசுவை விற்றதன் பின்னர் குறித்த தந்தை பிரதேசத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
சிஸ்டம் சேஞ்ச் (முறைமை மாற்றம்) கோரி போராடியவர்கள் இன்று தண்டிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு எதிராகவே பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படுகின்றது. நாட்டுக்காக போராடிய அவர்கள் பயங்கரவாதிகள் அல்லர். உண்மையான பயங்கரவாதிகள் யாரென்பதை மக்கள் கண்டறிய வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக நீக்குமாறு வலியுறுத்தி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி, சர்வஜன நீதி அமைப்பு, தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் கூட்டமைப்பு ஆகியவற்றின் ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியில் கையெழுத்து திரட்டப்பட்டு வருகின்றது. இதன் ஓர் அங்கமாக நுவரெலியா, ரிகில்கஸ்கட பகுதியில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற கையெழுத்து திரட்டும் நடவடிக்கையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே சாணக்கியன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தும் ஆவணத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானும் கையொப்பமிட்டார். இதன்போது கருத்து வெளியிட்ட இரா.சாணக்கியன், ‘பயங்கரவாத தடைச்சட்டம் என இச்சட்டத்துக்கு…