இந்தோனேஷியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் நேற்றிரவு இடம்பெற்ற கால்பந்தாட்ட போட்டியில் ஏற்பட்ட மோதலில் சிக்கி பொலிஸார் உட்பட 127 பேர் உயிரிழந்துள்ளனர். கலவரத்தில் ஈடுபட்ட ஆதரவாளர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் விளையாட்டரங்கை விட்டு மக்கள் வெளியேற முற்பட்ட போது இந்த நெரிசல் ஏற்பட்டது. பெர்செபயா சுரபயா அணிக்கு எதிரான போட்டியில் அரேமா அணி 3-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்ததை அடுத்து மைதானத்தில் மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இந்த நெரிசல் காரணமாக 180 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்த நாட்டு பொலிஸார் தெரிவிக்கின்றனர். விசாரணை முடியும் வரை குறித்த தொடரின் அனைத்து போட்டிகளையும் நிறுத்த வேண்டும் என ஜனாதிபதி ஜோகோ விடோடோ உத்தரவிட்டுள்ளார்.
Author: admin
மின் ஒழுக்கு ஏற்பட்டதையடுத்து படுக்கை அறையில் சேமித்து வைத்திருந்த பெற்றோலில் தீ பற்றியதால் தூக்கத்திலிருந்த கணவனும் மனைவியும் தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர். இவ்வாறு சம்பவ இடத்தில் இடம்பெற்ற தடயவியல் விசாரணை மற்றும் உடற்கூற்று பரிசோதனையின் பின் அறிக்கையிடப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை நெடியகாடு பகுதியில் உள்ள வீடொன்றில் கணவனும் மனைவியும் தீக்காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் சடலமாக இன்று அதிகாலை கண்டறியப்பட்டனர். வெள்ளிக்கிழமை அதிகாலை 4.15 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர். வல்வெட்டித்துறை நெடியகாடு, ஏஜிஏ ஒழுங்கையைச் சேர்ந்த சரவணபவா ரஞ்சித்குமார் (வயது -30) அவரது மனைவி கிருசாந்தினி (வயது -26) என்ற இருவருமே சடலமாக மீட்கப்பட்டனர். தம்பதி உறங்கிய அறையில் தீ பற்றி எரிவதைக் கண்ட வீட்டிலிருந்தவர் அறையை உடைத்து உள்நுழைந்த போது இருவரும் தீயில் எரிந்து சடலமாகக் காணப்பட்டனர் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்தில் இடம்பெற்ற தடயவியல் விசாரணையில் அறையில் மின் ஒழுக்கு ஏற்பட்டமை மற்றும் பெற்றொல்…
இலங்கையின் பிரபல நடிகர் தர்ஷன் தர்மராஜ் இன்று (02) காலமானார். இன்று காலை ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2008ஆம் ஆண்டு முதல் இலங்கையின் குறிப்பாக சிங்கள சினிமா துறையில் சிறந்த நடிகராக விளங்கி வந்த 41 வயதான இவர், பல திரைப்பட விழாக்களில் சிறந்த நடிகருக்கான விருதையும் வென்றுள்ளார்.
நுவரெலியா – கொட்டகலை பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் குறித்த பாடசாலையின் அதிபர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை சம்பந்தப்பட்ட அதிபர் துடப்பத்தால் அடித்ததாக புகார் எழுந்தது. சம்பவத்துடன் தொடர்புடைய அதிபர் தற்போது கல்வி வலய அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய வடமாகாண ஆளுநர் லலித் யு. கமகே தெரிவித்தார்.
சுமார் 12,000 திர்ஹமிற்கு குழந்தையை விற்க முயற்சித்த இலங்கை பெண் உள்ளிட்ட மூவர் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளனர். 35 வயதான இந்தோனேஷிய பெண் ஒருவர் பணத் தேவை இருப்பதாகக் கூறி, தனக்கு பிறந்த ஆண் குழந்தையை விற்க முயற்சித்துள்ளார். குழந்தையை விற்கும் நடவடிக்கையில் இலங்கை பெண்ணும் மேலும் இருவரும் உதவி செய்துள்ளனர். 45 வயதான குறித்த இலங்கை பெண் 02 மாதங்களேயான குழந்தையை விற்பதற்காக கடந்த பெப்ரவரி மாதம் ஒன்லைன் ஊடாக அறிவித்தல் வௌியிட்டுள்ளார். துபாய் பொலிஸார் இது தொடர்பிலான தகவல்கள் கிடைத்தவுடன், சந்தேகநபர்களைத் தேடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதற்கமைய, பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், குறித்த குழந்தையை வாங்குபவர் போல் நடித்து சந்தேகநபர்கள் மூவரையும் கைது செய்துள்ளார். கடந்த வாரம் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, மூவர் மீதும் கடத்தல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, குற்றவாளிகள் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, மூவருக்கும் தலா 03 வருடங்கள் சிறைத்தண்டனையும் 4000 திர்ஹம் அபராதமும்…
இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் 92 இன் விலை லீற்றருக்கு 40 ரூபாயும், பெற்ரோல் 95 இன் விலை லீற்றருக்கு 30 ரூபாயும் குறைக்கப்படும். பெற்ரோல் 92 இன் புதிய விலை லீற்றருக்கு ரூபா 410 ஆகவும், பெற்ரோல் லிட்டருக்கு ரூபா 510 ஆகவும் இருக்கும். அத்துடன் மற்ற பெற்ரோலிய பொருட்களின் விலை அப்படியே இருக்கும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில்… * 92 ஒக்டேன் பெட்ரோல் 1 லீட்டரின் விலை 40 ரூபாவினாலும் * 95 ஒக்டேன் பெட்ரோல் 1 லீட்டரின் விலை 30 ரூபாவினாலும் குறைக்கப்படும் *சிபெட்கோ*
காந்தியின் அகிம்சைப்போராட்டத்தினையும் தியாகத்தினையும் தொடர்ந்து மட்டக்களப்பு மக்கள் நினைவுகூருவதை எண்ணி தான் பெருமைகொள்வதாக இந்திய தூதுவர் கோபால் பக்லே தெரிவித்தார். காந்தி ஜெயந்தி தினம் நாளைய தினம் அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் அதன் சிறப்பு நிகழ்வு இன்று மட்டக்களப்பு காந்திபூங்காவில் நடைபெற்றது. அகிம்சையினை உலகுக்கு போதித்த மகாத்மா காந்தியின் பிறந்த தினம் காந்தி ஜெயந்தி தினமாக அனுஸ்டிக்கப்படுகின்றது. இன்றைய தினம் காந்தி ஜெயந்தி தின நிகழ்வுகள் மட்டக்களப்பு காந்திபூங்காவில் உள்ள மகாத்மா காந்தி சிலையருகில் நடைபெற்றது. காந்தி சேவா சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு அதன் தலைவர் அ.செல்வேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக இந்திய தூதுவர் கோபால் பக்லே கலந்துசிறப்பித்தார். மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன்,பிரதி முதல்வர் க.சத்தியசீலன் உட்பட பலர் கலந்துகொண்டனர். இதன்போது காந்தியின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் ரகுபதி ராக ராஜாராம் பாடலும் இசைக்கப்பட்டது.
140 பில்லியன் மேலதிக வருமானத்தை ஈட்டிக்கொள்ளும் எதிர்பார்ப்பில் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரியை அரசாங்கம் இன்று முதல் அமுல்படுத்தியுள்ளது. இந்நிலையில், சிகரெட் ஒன்றின் விலை 5 ரூபாயாலும் 750 மில்லி லீற்றர் மதுபான போத்தல் ஒன்றின் விலை 150 ரூபாயாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்குறிப்பிட்ட வரி விதிப்பினால் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் மேலும் உயரும் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதாகவும் இதனால் அன்றாட வாழ்க்கைக்கு இடையூறாக உள்ளதாகவும் பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் சுகாதார மற்றும் வைத்திய அதிகாரிகளுக்கும் மத்திய சுற்றாடல் அதிகாரசபை அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பைகம பிரதேச சபையின் தலைவர் தெரிவித்துள்ளார். சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வெளியேறும் புகையில் கந்தகத்தின் வீதம் அதிகரித்துள்ளமையினால் நிலைமை மோசமாகியுள்ளதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறிப்பிட்டதாக பைகம உள்ளூராட்சி மன்றத் தலைவர் தெரிவித்தார். இதேவேளை நிலக்கரி பற்றாக்குறையால் இம்மாத இறுதியில் இருந்து நீண்ட நேரம் மின்வெட்டு ஏற்படும் அபாயம் தற்போது மறைந்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.